Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
காரணங்கள், அறிவித்தலின்றி யாழில் 9 பேர் கைது
By Priyarasa 
2012-12-05 11:29:34
 
எவ்வித காரணமும், அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
வன்னியிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 பேரும், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐந்து பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களின் உறவினர்கள் நேற்று மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது, குறிப்பிட்ட கைதுகளுக்கும் தமக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லையெனவும் தம்மால் இதனையிட்டு எதுவும் செய்யமுடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு விசாரணைகளுக்கென பொலிஸாரினால் ஏற்கனவே அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ள புலி வேட்டையில் 10ற்கும் அதிகமானோர் ஆயுததாரிகளால் கைது
05 டிசம்பர் 2012
 
ஊடகவியலாளர்களில் ஒரு சிலரும் கண்காணிப்பு வலையத்துள் கொண்டு வரப்பட்டுள்ளனர்:-
 
வடக்கில் மீண்டும் ஆரம்பித்துள்ள புலி வேட்டையில் நேற்றிரவு வரை பத்திற்கும் அதிகமானவர்கள் பிடித்து செல்லப்பட்டுள்ளனர். 
 
காரணமேதும் தெரிவிக்கப்படாது நேற்று நள்ளிரவு வேளை வீடுகளுக்கு சென்ற ஆயுததாரிகள் இவர்களை விசாரணைக்கென கொண்டுசென்றுள்ளனர். எனினும் படையினரே இவர்களை பிடித்து சென்றதாக கூறும் குடும்பத்தினர் மேலதிக தகவல்கள் எதனையும் பகிர்ந்து கொள்ள அச்சம் காரணமாக மறுத்துவிட்டனர். 
 
இவ்வாறு வேட்டையாடப்பட்டுள்ள பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டதாக கூறி அண்மையில் விடுவிக்கப்பட்டவர்களே என தெரியவருகின்றது. 
 
குறிப்பாக உரும்பிராய் பகுதியின் சிவபுரம் பகுதியில் குடும்பத்தவாகளுடன் இணைந்து வாழ்ந்து வந்த பலரே பிடித்து செல்லப்பட்டுள்ளதாக அத்தரப்புகள் மேலும் குற்றஞ்சாட்டுகின்றன.
 
இதனிடையே பளை பகுதியிலும் உணவக உரிமையாளரொருவர் பிடித்து செல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
முன்னைய காலங்களில் விடுதலைப்புலிகளது உணவகமொன்றில் சமையலில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படும் இவர் பின்னர் தனித்து உணவகமொன்றை நடத்திவந்த வேளை பிடித்து செல்லப்பட்டுள்ளார்.
 
இலங்கை அரசினது உச்ச பட்ச கெடுபிடிகளையும் தாண்டி மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை வடக்கில் பல தரப்புகளும் முன்னெடுத்திருந்தன. 
 
குறிப்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததுடன் பல இடங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டு மணிகள் ஒலிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தன. 
 
இதன் தொடர்ச்சியாகவே பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததுடன் தற்போதைய வடிகட்டல்கள் இடம்பெற்று வருவதாக நம்பப்படுகின்றது.
 
அத்தகைய பின்னணியினிலேயே வல்வெட்டித்துறைப் பகுதியை சேர்ந்த இளைஞரொருவன் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படுகின்றது. அதே போன்று ஊடக பரப்புரைகளில் ஈடுபடுவதாக கூறி ஊடகவியலாளர்களின் ஒரு பகுதியினரும் இத்தரப்புகளது கண்காணிப்பு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்ளக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கசிந்துள்ளன.     
 
 
இதேவேளை யாழ்ப்பாணம் உரும்பிராயில் காவற்துறையினரால் விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட இருவர் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை என அவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 
 
உரும்பிராய் செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த உறவினர்களான நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இராமதாஸ் இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்வராசா செந்தில் தாஸ் ஆகிய இருவரையும் நேற்று மாலை கோப்பாய் காவற்துறையினர் விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளனர். 
 
இரவாகியும் அவர்கள் வீடு திரும்பாததையடுத்து அவர்களை தேடி உறவினர்கள் கோப்பாய் காவற்துறை நிலையம் சென்று விசாரித்த போது, அவர்களை வவுனியாவில் இருந்து சென்ற குற்ற புலனாய்வுத் துறையினரே கைது செய்து வவுனியாவுக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் பின் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் உறவினரிடம் கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள். 
 
இவர்கள் இருவரும் முன்னர் தமது குடும்பத்துடன் வன்னியில் வசித்து வந்ததாகவும் அதன் பின் முகாமில் இருந்து கடந்த வருடம் விடுதலையாகி இக் கிராமத்தில் வசித்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். 
அதேவேளை நேற்று மாலை யாழ் காவற்துறைப் பிரிவில் நன்கு பேரும் கோப்பாய் காவற்துறைப்; பிரிவில் ஐந்து பேருமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
 

At least 7 more Tamils arrested by Terrorism Investigation Dept

 

At least another 7 young Tamils were arrested by the Terrorism Investigation Department in Jaffna on Tuesday afternoon, reported the Uthayan newspaper, citing officials at the Human Rights Commission.

 

 

 

According to the paper, whilst 7 complaints were lodged by families of the arrested, the actual figure of arrests could be as high as ten. Uthayan went on to report that 5 Tamils were arrested by police in Koppay and 2 by police in Chavahavcheri under the PTA legislation, and remanded in custody before being moved to Colombo for questioning by the TID.

 

All seven Tamils are reported to be originally from the Vanni.

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=6481&utm_source=twitterfeed&utm_medium=twitter

 

 

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.