Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்கடை புலியும் யாழ்ப்பாணப் புலியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புதுக்கடை புலியும் யாழ்ப்பாணப் புலியும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்ததேசப்பிரிய:-
09 டிசம்பர் 2012
 
நவம்பர் 27 ஆம் திகதி அனுஷ்டித்த மாவீரர் தினம் வடக்கில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சிவில் சவாலாகும் ..
 
புதுக்கடை நீதிமன்றத்திற்கு அருகில் அழைத்து வரப்பட்ட ராஜபக்ஷ கோஷகாரர்களின் கைகளில் அருமையான வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகள் இருந்தன.  அதுதான் நாட்டை பிளவுப்படுத்தும் நீதிமன்றம் எமக்கு வேண்டாம் என்ற வாசகமாகும். இந்த ஆர்ப்பாட்டம் ராஜபக்ஷவின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவும் பிரதம நீதியரசருக்கு எதிராகவும் என்பதால், இந்த வாசகத்தின் மூலம் பிரதம நீதியரசர் நாட்டை பிளவுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும். இந்த வாசகங்கள் அடங்கிய பல பதாதைகள் நீதிமன்றத்திற்கு அருகில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.
 
சட்டத்தின் ஆட்சி இருக்கும் யுகத்தில், இந்த செயற்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்றே கருதப்படும். எனினும் இப்போது இருப்பது முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கூட நீதிமன்றத்தின் மீது குற்றம் சுமத்தும் யுகமாகும். ராஜபக்ஷ கோஷ படையணியில் முன்னணியில் இருப்பது இந்த சிறு தரப்பினரான முச்சக்கர வண்டி சாரதிகளும், ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்து செல்லக் கூடியவர்களும் மாத்திரமே என்பதை காணமுடிகிறது.
 
பிரதம நீதியரசருக்கு எதிராக புனையப்பட்டுள்ள நம்பிக்கையில்லா குற்றச்சாட்டுக்கள் தற்போது நாட்டை பிளவுப்படுத்தி உள்ளதுடன், கடந்த வாரம் முழுவதும் இந்த இரண்டு முகாம்களும், மிகவும் தெளிவாக தமது நிலைப்பாடுகளை எடுத்து வருகின்றன. நம்பிக்கையில்லா குற்றச்சாட்டு அநீதியானது எனவும்  அதனை விட குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும், செயற்பாடுகள் எவ்வித நியாயதர்மத்திற்கும் ஏற்புடையதாக இல்லை என ஒரு தரப்பு கூறுகிறது. இந்த தரப்பில், மல்வத்து, அஸ்கிரிய உள்ளிட்ட பௌத்த பிக்குகள், நீதிபதிகள், சட்டத்தரணிகள், தொழிசங்கங்கள், கலைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உள்ளன.
 
அடுத்த தரப்பு அதாவது ராஜபக்ஷ தரப்பில், முச்சக்கர வண்டி சாரதிகள், நடமாடும் ஆர்ப்பாட்ட கோஷகாரர்கள், அரச சார்பான ஊடகங்கள் என்பன உள்ளன. வாடகை முச்சக்கர வண்டி சாரதிகளின் அறிவிப்பின் பிரகாரம், பிரதம நீதியரசரை சுற்றி, அரசசார்பற்ற நிறுவனங்களின் காகங்கள் இருக்கின்றன. அவர் வெட்கமற்ற மோசடியாளர். நடமாடும் ஆர்ப்பாட்ட கோஷகார்களிபடி அவர், நாட்டை பிரிக்க உந்து சக்தியை கொடுப்பவர். அந்த இடத்தில் தான் அவர் நாட்டுக்கு துரோகி. வீரவங்சவின் இணையத்தளத்திற்கு அமைய பிரதம நீதியரசரின் பின்னால், இந்திய புலனாய்வு பிரிவு செயற்படுகிறது.
 
எனினும் அஸ்கிரி, மல்வத்து நாயக்க தேரர்கள் உள்ளிட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள், கலைஞர்கள் போன்ற அனைவரும், நாட்டை பிரிக்கும் நீதிமன்றத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதன் மூலம் நாட்டை பிரிக்கும் மறைமுக உதவியாளர்களாக மாறியுள்ளனர். நம்ப முடியாது எனினும். ராஜபக்ஷ ஆட்சியாளர்களினால் ஏற்பாடு செய்யப்படும் நடமாடும் ஆர்ப்பாட்ட கோஷகாரர்கள் இதனை நம்புமாறு எமக்கு கூறுகின்றனர்.
 
இது போருக்கு பின்னர், இலங்கை அரசாங்கத்திற்கு சேலைன் ஏற்றும் கோஷமாகும். அரசியல் ரீதியாக செல்ல வழியில்லை என தெரியும் அனைத்து சந்தர்ப்பங்களிலும், ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு உதவிக்கு வருவது தோற்கடிக்கப்பட்ட புலிகள் அமைப்பும், நாட்டை பிரிக்கும் ஆபத்து ஆகியனவே. 100 நாட்கள் வரை நடைபெற்ற பல்லைக்கழக விரிவுரையாளர்களின் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு கிடைப்பதை தடுக்க இந்த சேலைன் கோஷமே கண்டெடுக்கப்பட்டது. அப்படியானால், விரிவுரையாளர்களின் போராட்டம் நாட்டை பிளவுப்படுத்தும் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாகும். ராஜபக்ஷ ஆட்சியாளர்களுக்கு எதிராக கையை உயர்த்தும் நபருக்கோ, நிறுவனத்திற்கோ எதிராக வீசி எறியப்படும் ஆயுதம் இதுதான்.
 
போர் நடைபெற்ற காலத்தில் ஊடக சுதந்திரத்திற்காக போராடிய எம்மை போன்றவர்களை கண்டிப்பதற்காக இந்த சேலைன் கோஷமே பயன்படுத்தப்பட்டது. அப்போது தமக்கு எதிராக இப்படியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட மாட்டாது என நினைத்த பலர் இன்று இந்த முத்திரைக்குள் சிக்கியுள்ளனர். இவ்வாறு முத்திரை குத்தலுக்கு உள்ளாகும் அனைவரும் அனுபவம் கொள்ளும் மற்றுமொரு உண்மை உள்ளது. அதுதான் தான் நிராபராதி என்பதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு தற்போது ஊடகங்களில் இல்லை என்பது. விடுதலைப்புலிகளுடன் போரிட்ட அரசாங்கம், போருக்கு மேலதிகமாக இலங்கை ஊடகங்களுக்கு எதிராக மேற்கொண்ட போரின் உண்மையான நோக்கம், முழு சமூகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதுதான் என்பது, கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்தி வருகின்றன. சுதந்திரம் மற்றும் விரிவான ஊடக கலாசாரம் இருக்குமாயின்,  அது தற்போதைய ஒருதலைபட்சமான ஆட்சியாளர்கள், தமது அடக்குமுறை நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதில்  பெரும் தடையாக மாற வாய்ப்பிருந்திருக்கும்.
 
தெற்கில் எழும் அனைத்து நியாயமான எதிர்ப்புகளையும் தேசத்துரோக முத்திரை குத்தி அவற்றை தனிமைப்படுத்துவதை தனது தந்திரோபாயமாக மாற்றிக்கொண்டுள்ள ராஜபக்ஷ ஆட்சியாளர்கள், தற்போது வடக்கில், இந்த குற்றச்சாட்டை பயன்படுத்தி, தமிழர்கள் உயிரிழந்த தமது உறவுகளை நினைக்கூற இருக்கும் சந்தர்ப்பத்தை கூட இல்லாமல் செய்து வருகின்றனர்.  போர் முடிந்து மூன்று வருடங்களுக்கு மேல் கடந்துள்ள போதிலும் தமிழர்கள், போரில் உயிரிழந்த தமது பிள்ளைகள், பெற்றோர், உறவினர்கள், அயல் வீட்டினர் ஆகியோரை நினைவுக் கூற தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூற விசேட தினம் ஒன்று அவசியம் என பரிந்துரை செய்த போதிலும் அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பதிலாக அரசாங்கம், தமிழ் மக்களின் பிள்ளைகள் துயிலும்,  புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்து தரைமட்டமாக்கி, அதில் இராணுவ முகாம்களை நிர்மாணித்தது. இந்த நினைவு தினத் தினங்களுக்காக அவர்கள் தெரிவுசெய்துள்ள மே 19 ஆம் திகதியாகட்டும், நவம்பர் 27 ஆம் திகதியாட்டும், இலங்கை அரச படையினர், குறைந்தது ஆலயங்களில் கூட நினைவுத் தினத்தை அனுஷ்டிக்க இதுவரை இடமளிக்கவில்லை. தெற்கில், இப்படியான வன்முறை அரசியல் அமைப்பை வழி நடத்திய ஜே.வி.பியின் தலைவர் ரோஹன விஜேவீர அரச படையினரால் கொலை செய்யப்பட்ட தினமான நம்பவம் 13 ஆம் திகதி கார்த்திகை வீரர்கள் தினம் என தெற்கில் மிகப்பெரியளவில் அனுஷ்க்கப்படும் நினைவுக் கூறல் அனுஷ்டிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே வடக்கில் இப்படியான தடையேற்படுத்தப்படுகிறது.
 
இனம் என்ற வகையில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் எந்த சமூகமும், தமது இதயத்தில் விழும் அனைத்து அடிகளையும் மனத்திற்குள் ஆழமாக பதித்து வைத்து கொள்ளும். என்றோ ஒரு நாள் அது வெடித்து வெளிகிளம்பும் என்பது உலக வரலாறாகும். இன போரில், ஒரு தரப்பு தோற்று போன போதிலும், பிரச்சினை என்பது முடிவடையாது. இதன் காரணமாகவே இதற்கு தீர்வு நல்லிணக்கம் என்பதை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கம், போரின் இறுதியில் இருந்து இதுவரை தமிழ் மக்களை போர் பலத்தில் அச்சுறுத்தி வருகின்றதே தவிர சமூகங்களுக்கு இடையில் சமத்துவத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
 
சில வெளிநாட்டு ஊடகங்கள் யாழ்ப்பாணத்தின் கிளர்ச்சி என பெயரிட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இராணுவ கட்டளைகளை மீறி, பெரிய விளக்கொன்றை ஏற்றி அனுஷ்டித்த  மாவீரர் தினத்தை நாம் இந்த சூழலுக்குள்ளதான் புரிந்து கொள்ள வேண்டும். இது வடக்கில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சிவில் சவாலாகும் என்பது தெளிவானது. 2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர்,  யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மக்கள் செயற்பாடு இதுவென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற மன கிளம்பல் யாழ்ப்பாண மக்களின் மனங்களில் இருக்கின்றா என்பதை புரிந்து கொள்வது கடினமானது.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில், இராணுவத்தினரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் அனுப்பி, போரில் செயற்படுவது போன்று அரசாங்கம் செயற்பட்டது. பெண்கள் விடுதிகளை சோதனையிட ஆண் படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். பல்லைக்கழக மாணவர்களின் அமைதியான நினைக்கூறல் மற்றும் பேரணியின் மீது மாணவர்களுக்கு காயங்களை ஏற்படுத்திய, காவற்துறை மற்றும் இராணுவத்தினரின் அடக்குமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது மூன்று பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு, பாதுகாப்பு அமைச்சின் மூன்று மாத தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான அடக்குமுறை செயற்பாடுகள் மூலம் அடக்கப்பட்ட சமூகத்தின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை குணப்படுத்துவது இலகுவானதல்ல.
 
பாரிய மனித உயிரிழப்புகள் மூலம் பெற்றிக்கொள்ளப்பட்ட போரின் முடிவை, தமிழ் மக்கள் மனத்தை வென்றெடுப்பது நோக்கி விரிவுப்படுத்த ராஜபக்ஷ அரசாங்கம் தவறியுள்ளது.  தமிழ் அரசியல் மாத்திரமின்றி, சிவில் சமூகமும், கொழும்பு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழக்கும் திசை நோக்கி தள்ளப்பட்டு வருகின்றனர்.  தாம் பானையில் இருந்து அடுப்பில் விழுந்து விட்டதாக தமிழ் மக்கள் எண்ணுகின்றனர். வீதிகளையும் கட்டிடங்களை நிர்மாணிப்பதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாக்கப்படும் இனத்தை வெற்றிக்கொள்ள முடியாது.  தற்போது சுயநிர்ணய உரிமைகளுக்காக போராடி வரும் வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, கெட்டலோனியா மற்றும் கியூபெக் ஆகியன அபிவிருத்தியடைந்த தேசங்களாகும். எனினும் இந்த அபிவிருத்தியினால், அந்த மக்களின் தேசிய அபிலாஷைகள் இல்லாமல் போகவில்லை என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
 
சிங்களவர்களுக்கு தமது இனம் எவ்வளவு பெறுமதியானதோ தமிழர்களுக்கும் அவ்வாறே பெறுமதியானது. பிரிவினைவாதம் அல்லது புலி முத்திரையை குத்தி அந்த தேசியத்தை இல்லாமல் செய்து விட முடியாது. கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட யாழ்ப்பாண கிளர்ச்சி  மீண்டும் உறுதிப்படுத்தும் உண்மை அதுவே.
 
தெற்கில் எழும் எதிர்ப்புகளுக்கு போர் வெற்றி மற்றும் பிரிவினைவாத முத்திரையை குத்துவது ஒரளவுக்கு எடுப்படக் கூடும். ஆனால், வடக்கில் அந்த முத்திரை அந்தளவு எடுப்படாது. அது வலுசேர்க்கும் ஊசி மருந்தாகக் கூடும் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும். எது எவ்வாறாயினும் அனைத்துக்கும் காலநிர்ணயம் உள்ளது. போர் வெற்றி போர்வையில், மனித மற்றும் ஜனநாயக உரிமைகளை முடக்கும் நாள் முடிவுக்கு வரும் என்பதை ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் புரிந்துக்கொண்டால், இலங்கையின் எதிர்காலம் இதனை விட சிறந்ததாக அமைவது நிச்சயம்.
 
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - சுனந்த தேசப்பிரிய 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.