Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பான வாக்கெடுப்பு: 10,610 இணைய முகவரிகளிலிருந்து 12,753 வாக்குகள் பதிவாகின!

Featured Replies

பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பான வாக்கெடுப்பு: 10,610 இணைய முகவரிகளிலிருந்து 12,753 வாக்குகள் பதிவாகின! கனடாவின் தற்போதைய அரசு இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பான கருத்தாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்றும் தங்களையும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இதே விடயத்தில் அணுகியுள்ளதாகவும் தெரிவித்த கனடிய மனிதவுரிமை மையத்தினர் எனவே இருவரும் இணைந்து செய்தால் என்ன என்ற விணாவை எம்மிடம் தொடுத்தனர்.ஆமோதித்தோம். அடுத்தநாளே வாக்கெடுப்பை அறிவித்தோம்

அதற்கான விடைதான் இவ்வளவு பெரியதொரு வாக்கெடுப்பு. நாங்கள் எதிர்பாராத அளவிற்கு மக்களின் ஆதரவு குவிந்தது. தமிழ்வின், லங்காசிறி உள்ளிட்ட சகோதர ஊடகங்கள் மக்களிடம் இந்த விடயத்தை எடுத்துச் சென்றன. கனடியப் பிரதமர் சிறீலங்காவில் இடம்பெறும் பொதுநலவாய மாநாடு தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்ற மக்களின் அபிலாசைகளைச் சொல்லி நிற்கிறது வாக்கெடுப்பு.

தாயகத்தில் உள்ள மக்களின் எதிர்காலத்திற்கு எது நன்மை பயக்கும் என்பதை வாசகர்கள் தீர்மாணித்திருக்கிறார்கள். 12,753 பேர் இந்த வாக்கெடுப்பில் பங்கெடுத்தார்கள். அவர்களில் 57.79 வீதமானவர்கள் (4,744+2,626 = 7,370 வாக்குகள்) கனடியப் பிரதமர் பங்கு பற்ற வேண்டும் எனவும், 42.21 வீதமானவர்கள் (5,383வாக்குகள்) புறக்கணிக்க வேண்டுமெனவும் வாக்களித்திருக்கிறார்கள்.

பங்குபற்ற வேண்டும் என வாக்களித்தவர்களில் 64 வீதத்தினர் (4,744) தீர்வுத் திட்டம் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்ற விருப்பைக் கொண்டிருக்கிறார்கள். மீதி 36 வீதத்தினர் சிறீலங்காவைக் கனடா கண்டிப்பதோடு, வடக்கு கிழக்குப் பகுதிகளிற்கு கனடியப் பிரதமர் பயணம் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளிற்கு ஆதரவளித்துள்ளனர்.

final-600x589.jpg

Polldaddy.com என்ற கருத்துக்கணிப்பு இணையம் CNN, BBC, New York Times போன்ற பிரபல ஊடகங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்ட ஒரு நிறுவனம். எனவே தரவுகள், இணைய வருகைகள், IP address எனப்படும் ஒவ்வொரு இணைய முகவரியில் இருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகள் என பல தகவல்களையும் பெறுவதற்காக இந்த இணையத்தில் ஒரு அங்கத்துவத்தை ஏற்படுத்தி துல்லியமான பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

உலகின் கவனம் இன்று சிரியா, பலஸ்தீனம், வட கொரியா என பல புறங்களாகத் திரும்பியுள்ளது. கூகுள் போன்ற இணையத்தின் தேடுதளங்களில் தமிழ், சிறீலங்கா என்ற வார்த்தைகளை தேடி அழுத்தினால் முன்பு ஒரு காலத்தில் தினசரி பல பல செய்திகள் இருக்கும். இன்று தேடினால் ஒரு செய்தியைக் கூடப் பார்ப்பது அரிதாகவுள்ளது.

இந்த நிலையில் புறக்கணிப்பு, தவிர்த்தல் என்பன பொதுநலவாய மாநாடு நடந்து முடிந்தவுடனேயே சர்வதேசம் ஈழத்தமிழர்களை மறந்து அடுத்தபடி செல்லவே உதவுமே தவிர தொடர்ச்சியான கரிசனையை எந்தவொரு நாடும் கொண்டிருக்க உதவாது என்பதனையும், தொடர்ச்சியாக ஒரு பிரச்சினையில் ஒரு நாட்டிற்கு அக்கறை வேண்டுமானால் அந்த நாடு அந்த விவகாரத்தில் பங்காளராக இருக்க வேண்டும் என்பதையுமுணர்த்துகிறது “கனடா தீர்வுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்ற வாசகர்களின் விருப்பு.

அப்படியொரு செயற்பாடே தொடர்ச்சியான உறவுப்பேணலிற்கு உகந்தது என்பதே வாசகர்களின் முடிவாகிறது. பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரித்த போது அது தொடர்பாக கனடா எடுத்த கடும் நிலைப்பாடு ஈழத்தமிழர்களின் விவகாரத்திலும் அது பேச்சுவார்த்தை மூலமான ஒன்றிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வைத் தவிர வேறு எதையும் விரும்பாது என்பதை வாசகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இந்த உண்மையின் அடிப்படையில் தாயகத்தில் இராணுவப்பிடியிலுள்ள தமிழ்மக்களின் பிரச்சினைகளிற்கான தீர்வுக்கு கனடியப் பிரதமர் கலந்து கொள்வதும் ஒரு தீர்வுப் பொதியை பொதுநலவாய நாடுகள் சார்பில் சமர்ப்பித்து அதற்குரிய கால எல்லையுடன் செயற்படுவதுமே சிறந்த வழி. வாக்கெடுப்பில் தீர்ப்பு உங்களது அது தொடர்பாக முடிவு எடுப்பது கனடா அரசினுடையது நாங்கள் ஒரு ஊடகமாக உங்களின் கருத்தை எடுத்துச் செல்கின்றோம்.

இந்த வாக்கெடுப்பு முடிவுகள் கனடியப் பிரதமருக்கும் ஏனைய பிரதானிகளிற்கும் கனடிய மனிதவுரிமை மையத்தாலும் கனடா மிரராலும் வெகுவிரைவில் சமர்ப்பிக்கப்படும். இந்த ஆரோக்கியமான வாக்கெடுப்பு முடிவுகள் எதிர்காலத்தில் எந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை காலம் எங்களிற்கு சுட்டிக்காட்டும். அதுவரை……. எங்களின் வேண்டுகோளை ஏற்று வாக்களித்தவர்களிற்கு மனமார்ந்த நன்றிகள்!!

 

http://www.canadamirror.com/canada/3400.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.