Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காப்படையினரின் புலனாய்வு தகவலின் அடிப்படையில் சென்னையில் ஈழத்தமிழர்கள் 4பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
டிச 19, 2012
 சிறீலங்காப்படையினரின் புலனாய்வு தகவலின் அடிப்படையில் சென்னையில் ஈழத்தமிழர்கள் 4பேர் கைது!
 
இந்தியப்படையினரின் உளவுத்தகவலின் அடிப்படையில் சென்னை பல்லாவரம் பகுதியில் இருந்த 4 ஈழத்தமிழ் அகதிகளை கியூபிரிவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
 
சிறீலங்கா படையினர் வன்னியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னாள் போராளிகள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள் அவர்களின் புலனாய்வு தகலின் படி சிறீலங்காப்படையின் அதிகாரிகள் இந்திய மத்திய உளவுத்துறைக்கு இரகசிய தகவல் அனுப்பியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து மத்திய உளவுத்துறையினரும் கியூ பிரிவு காவல்துறையினரும் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.
 
அதன் பின்னர் ஜஜீ.ஆபாஸ்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சென்னை பல்லாவரம் அருகில் பொழிச்சலூரில் வீட்டில் தங்கியிருந்த மகேஸ்வரன் உள்ளிட்ட நான்கு பேரினை கைதுசெய்துள்ளார்கள் அவர்களை ரகசியஇடத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தினகரன் நாளிதள் உளர் அதிகரியிடம் கேட்டுள்ளார்கள்.
 
 
தீவிர விசாரணை நடந்து வருவதாகவம் இப்போது அதுகுறித்து தெரிவிக்க முடியாதுஎன்றும் அறிவித்துள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 2மடிக்கணனி தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டு சேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை சிறீலங்காவிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் குண்டு தயாரிக்க முயற்சியாம் - நான்குபேரை பிடித்து புலிகளாக்கியது கியூ பிரிவு! 
[Thursday, 2012-12-20 08:36:50]
 
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சென்னையில் தங்கியிருந்த நான்கு ஈழத்தமிழ் இளைஞர்கள் தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல், தாம்பரம், பல்லாவரம், பொழிச்சலூர் பகுதிகளில் நேற்று முன்தினம், நடத்தப்பட்ட சோதனையின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்லாவரத்துக்கு அருகில் உள்ள பொழிச்சலூர் அண்ணா நகரில் ஈழத்தமிழர்கள் ஆறுபேர் தங்கியிருந்த வீட்டை, தமிழ்நாடு பொலிஸார் முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.
  
மடிக்கணினி, கைபேசிகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்புக்கான உபகரணங்கள், அவற்றுக்குரிய புத்தங்கங்கள் அங்கிருந்ததாக கியூ பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சுரேஸ்குமார், உதயதாஸ், சுந்தரமூர்த்தி, மகேஸ்வரன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு பொலிஸ் கூறியுள்ளது. இவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக, சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்து, வெவ்வேறு தொழில்களை செய்து வந்ததாகவும், வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் தமக்குப் பணம் அனுப்பி வைப்பவர் என்றும் கூறியுள்ளனர்.
 
போர் நடந்த போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தீவிரமாக களப் பணியாற்றியதாகவும், தாய், தந்தை, சகோதரிகள் என, அத்தனை சொந்தங்களையும் பறிகொடுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
இயக்கத்தில் இருந்து விடுபட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், அகதியாக, இங்கு வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், தாம் எவ்வித சதிச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து கருத்து வெளியிட்ட கியூ பிரிவு பொலிஸ் உயர் அதிகாரி,
 
"வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், விடுதலைப் புலிகள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். தமிழ்நாட்டில் இவர்கள் நாசவேலையில் ஈடுபட முயற்சி செய்யவில்லை.
 
ஆனால், இலங்கையில் உள்ள நண்பர்களை கைபேசியில் தொடர்பு கொண்டு நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக பேசியுள்ளனர். அதற்காக, இங்கு வெடிகுண்டு தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கான ஆதாரங்களை பறிமுதல் செய்து, அவர்களை சிறையில் அடைத்துள்ளோம்.
 
தப்பியோடிய இரண்டு விடுதலைப் புலிகளை விரைவில் பிடித்து விடுவோம். சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்." என்று கூறினார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.