Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய சக்திகளை கோபப்படுத்தியுள்ள சம்பந்தனின் பாராளுமன்ற உரை

முத்துக்குமார்
 

 

33a7b2a2-25d3-4aea-b880-d5879d61791b4.jp
 

சம்பந்தன் டிசெம்பர் 7ம் திகதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை தமிழ்த்தேசிய சக்திகளின் கோபத்தை நன்றாகவே கிளறிவிட்டிருக்கிறது. இதற்கான எதிர்வினைகள் புலம்பெயர் இணையத்தளங்களில் அதிகமாக வந்தன. உள்ளூர் பத்திரிகைகளில் ஆதரவாகவும், எதிராகவும் பல கட்டுரைகள் பதிவாகியிருக்கின்றன. அரசியல்கட்சிகள் என்றவகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அதற்கு பலத்த கண்டனத்தை தெரிவித்திருக்கின்றது. மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் 'அது சம்பந்தனின் தனிப்பட்ட கருத்தேயொழிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினது கருத்தல்ல' எனக் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சம்பந்தனைப் பாராட்டியிருக்கின்றார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடமிருந்து எந்தவித பகிரங்கக் கருத்தையும் காணவில்லை. சம்பந்தனின் அருட்பார்வை கிடைக்காமல் விடலாம் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

 

சம்பந்தனின் கடந்தகால வரலாற்றை ஆராய்பவர்களுக்கு இக்கருத்து பற்றி ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சம்பந்தன் அடிப்படையில் ஒரு தமிழ்த்தேசியவாதி அல்ல. அவர் ஒரு இலங்கைத் தேசியவாதி. இலங்கைத் தேசியம் என ஒன்று நடைமுறையில் இல்லை என்பது வேறுகதை. இல்லாத இலங்கைத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் ஒருவராகவே சம்பந்தன் விளங்குகிறார். இலங்கையில் நடைமுறையில் இருப்பதெல்லாம் சிங்களத்தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத்தேசியம் என்பனவே. இலங்கைத்தேசியம் என்பது இந்த நான்கு தேசியங்களையும் சமத்துவமாக இணைத்த ஒன்றாக வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். சிங்களத்தேசியம் மற்றைய எல்லாத் தேசியங்களும் தனக்குள்ளே கரைந்து விடவேண்டும் என எதிர்பார்ப்பதால் இலங்கைத்தேசியம் என ஒன்று உருவாகவில்லை. இப்போது இருக்கின்ற ஆபத்துகளெல்லாம் சிங்களத் தேசியத்திற்குள் ஏனைய தேசியங்களைக் கரைத்துவிடுவதற்கான முயற்சிகள் அதிகளவில் நடைபெறுகின்றன என்பதுவே.

 

சம்பந்தனின் உரை அம்முயற்சிகளுக்கு தீனிபோடுவதாகவே உள்ளது. தமிழ்த்தேசியத்தை தூக்கிப்பிடித்தால் போராட்ட நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும். அதற்கு சம்பந்தன் தயாராக இல்லாத நிலையும் இவ் உரைக்குக் காரணமாக இருக்கலாம். சம்பந்தனின் தற்போதைய கவலையெல்லாம் தனது நிலைப்பாட்டிற்கு தமிழ்மக்களை எவ்வாறு கொண்டுவருவது என்பதே! இதனால்தான் தேவையற்ற, பொருத்தமற்ற உரைகளை எல்லாம் நிகழ்த்த முற்படுகின்றார்.

 

சம்பந்தனின் உரையிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம். அவரது மூன்று கருத்துக்கள் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம், ஜனநாயகமின்மையாலும், மனித உரிமைகளை மீறினபடியாலும் புலிகள் தாங்களாகவே அழிந்துபோனார்கள். வடக்கில் இராணுவப் பிரச்சன்னத்தை நீக்கத் தேவையில்லை, குறைத்தால் போதுமானது என்பவையே அக்கருத்துக்கள். இம்மூன்று கருத்துக்களும் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராகவே உள்ளன.

 

புலிகள் பயங்கரவாத இயக்கம் என்ற சொல்லாடல் தமிழ்த்தேசிய எதிர்ப்பாளர்களினால் முன்வைக்கப்பட்ட சொல்லாடல். அதனைத்தான் சம்பந்தன் தனது கையிலெடுத்திருக்கின்றார். தமிழ்த்தேசிய நிலைநின்று புலிகளை மதிப்பிடுபவர்கள் இலங்கை அரசிற்கும், தமிழ்மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பொறுத்தவரை புலிகளின் பாத்திரம் முற்போக்கானது என்றே கூறுகின்றனர். விலைபோகாமை, அளவிடமுடியாத தியாகம் என்பவற்றை இதற்கு காரணமாகக் கூறுகின்றனர். தமிழ்த்தேசியப் போராட்டத்தை அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டமாக மாற்றியவர்கள் அவர்களே!. இந்தவகையில் தமிழ்த்தேசிய வரலாற்றின் ஒரு காலகட்டம் அவர்களுக்குரியது. தந்தை செல்வாவிற்கு பின்னர் அதன் தொடர்ச்சியைப் பேணியதலைவர் பிரபாகரனே!

 

அவர்களின் விலைபோகாத போராட்டமே தமிழ்த்தேசிய அரசியலை இன்று சர்வதேச மட்டத்திற்கு கொண்டுவந்துவிட்டிருக்கின்றது. இன்றைய தேவை சர்வதேச அரசியலை எவ்வாறு வெற்றிகாண்பது என்பதே! இந்தக் கட்டத்திற்குரிய அரசியலை நகர்த்தக்கூடிய தலைவராக சம்பந்தன் உள்ளாரா? என்பது சந்தேகமானதே!

 

அடுத்தவர் தயவில் அரசியலை நடாத்திய மரபு, தமிழ் அரசியலின் பிரதான போக்கில் இருக்கவில்லை. இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், பிரபாகரன் என வரலாற்றை நகர்த்திய தலைவர்கள் எவரும் அடுத்தவர் தயவில் நின்று அரசியலை நடாத்தவில்லை. தமிழ்மக்களின் சொந்தப் பலத்திலிருந்து அரசியலை நடாத்தினர். அவர்களுக்கென சொந்தமாக இலக்கு, கொள்கை, வேலைத்திட்டங்கள் என்பன இருந்தன. ஆனால் சம்பந்தனின் நிலை அவ்வாறானதல்ல. அவர் இந்தியாவின் தயவிலும், மேற்குலகின் தயவிலுமே அரசியலை நடாத்த முனைகின்றார். இதனால்தான் தெளிவான இலக்குகளோ, கொள்கைகளோ, வேலைத்திட்டங்களோ இன்றி இந்தியாவிற்கும் மேற்குலகிற்கும் பின்னால் இழுபட்டுச் செல்கின்றார்.

 

மற்றவர்களுக்குப் பின்னால் இழுபட்டுச் செல்வதற்கு ஒரு தலைவன் தேவையில்லை. மற்றையவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சொந்த நிகழ்ச்சி நிரலையும் புகுத்தி அதனைப் பொது நிகழ்ச்சி நிரலாக்குவதற்குத்தான் தலைவன் தேவை. மற்றையவர்களின் நிகழ்சிநிரலில் மட்டும் பயணிக்கும்போது அவர்களது தேவை நிறைவேறிவிட்டால் நடுத்தெருவில் நிற்கவேண்டிய அபாயம் ஏற்படலாம். சம்பந்தன் முன்னெடுக்கும் அரசியலினால் அந்த அபாயம் வருவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கின்றது. இலங்கை அரசு இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் சாதகமான சில திட்டங்களை அறிவிக்கும்போது தமிழ் அரசியலே பலவீனப்பட்டுப் போகக்கூடிய சூழலை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

 

தமிழ்த்தேசிய நிலை நின்று புலிகளை மதிப்பிடுபவர்கள் தமிழ்மக்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவில் புலிகள் பிற்போக்கான பாத்திரத்தை வகித்தனர் எனக் கூறுகின்றனர். இந்த விடயத்தை பொறுத்தவரை இரண்டு தவறுகள் புலிகளிடம் இருந்திருக்கின்றன. ஒன்று தேசிய இனப்போராட்டம் என்பது அவ்இனத்திற்கு புறத்தேயிருந்து வருகின்ற ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமாகும். எனவே அவ் இனம் முழுவதையும் இணைத்ததாக அப்போராட்டம் இருந்திருக்க வேண்டும். ஒரு தேசிய இனத்துக்குள் பல்வேறு பிரிவுகள் இருப்பது சாத்தியம் என்பதால் பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றினை அமைத்து போராடுவதன் மூலம் அனைவரையும் இணைக்கக்கூடிய சாத்தியம் இருந்திருக்கும். எதிர்ச்சக்திகளினது உளவுப் பிரிவுகளின் ஊடுருவல்களுக்கு வாய்ப்பு இருப்பதால் வலிமையான ஐக்கிய முன்னணி அமைப்பது கடினமான ஒன்றுதான். ஆனால் அது மட்டுமே சரியான மார்க்கமாக இருந்திருக்கும்.

 

இதன் விளைவு இறுதிக்காலத்தில் புலிகள் நன்றாக தனிமைப்பட்டுப்போயிருந்தனர். போராட்டத்திற்கென வந்த பலர் போராட்டத்திற்கு வெளியில் நின்றதோடு சிலர் எதிரிகளாகவும் மாறியிருந்தனர். இதனால் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தவேண்டிய போராட்டம் புலிகளின் போராட்டமாக மட்டும் சுருங்கியிருந்தது. பரந்துபட்ட மக்கள் வெறும் பார்வையாளர்களாக்கப்பட்டனர். இப்போக்கு ஒருவகையான குத்தகை உணர்வையும் மக்கள் மத்தியில் வளர்த்திருத்தது. நாங்கள் போராடுவோம், நீங்கள் ஆதரவு தந்தால் போதும் என்பதே புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. இந்தக் குத்தகை மனோபாவம்தான் புலிகள் தோல்வியடைந்தபோது பலருக்கு புலிகள் மீது கோபம் வருவதற்கும் காரணமாகியிருந்தது. குத்தகை வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

 

இரண்டாவது, போராடும் மக்களுக்கு ஜனநாயம் அவசியமானதாகும். ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் அரசியல் வரலாறு முழுவதும் இந்த ஜனநாயத்திற்கு பஞ்சமே இருந்தது. இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம் என பழைய தலைவர்கள் எவருமே இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஒப்பீட்டு ரீதியில் தமிழரசுக்கட்சியிடம் சிறிதளவு ஜனநாயம் இருந்தாலும் அது போதியதாக இருக்கவில்லை. தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருக்கின்ற மோசடித்தனமான ஜனநாயகமே அதனிடம் இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் மோசடித்தனமான ஜனநாயகத்தினால்தான் ரணில் விக்கிரமசிங்கா தற்போதும் கதிரையில் இருக்கின்றார்.

 

ஜனநாயகத்தின் அடிப்படையே மக்கள் பங்கேற்புதான். அங்கு மக்கள்தான் முடிவுகளை எடுக்கின்றார்களே தவிர தலைவர்கள் எடுப்பதில்லை. தலைவர்களுடைய கடமைகள் எல்லாம் நல்லமுடிவுகள் எடுப்பதற்கான ஆற்றலை மக்களுக்கு வழங்குவதும், மக்களின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான். தமிழர் அரசியலில் தலைவர்கள் தமது முடிவுகளை மக்கள் மீது திணித்தார்களே ஒழிய மக்கள் முடிவுகளை எடுப்பதற்கு விடவில்லை.

 

மூன்றாம் உலக நாடுகளின் சமூகங்கள் வளர்ச்சி குன்றிய சமத்துவமற்ற சமூகம்தான். தமிழ்மக்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. தமிழ்ச் சமூகம் ஒரு அதிகாரப்படிநிலைச் சமூகமாக இருந்தது. அதிகாரப்படிநிலைதான் தமிழ்ச்சமூகத்தின் ஒழுங்குநிலையாக இருந்தது. இது ஜனநாயக சமூகம் வளர்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் அரசியல் இயக்கங்களும் ஜனநாயகம் அற்றவையாகவே இருந்தன. ஒழுங்கைப் பேணுவதற்கு ஜனநாயகத்தினை விட அதிகாரப்படிநிலை இலகுவாக இருந்தது. ஜனநாயக சமூகத்தை உருவாக்குவது என்பது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. இந்த ஜனநாயகமற்ற அதிகாரப்படிநிலைச் சமூகம்தான் புலிகள் அரசியலுக்கு வந்தபோது அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர்களும் மரபு ஒழுங்கினைப் பேணினார்களே ஒழிய அதனை மாற்ற முயலவில்லை. அவர்கள் மாற்ற முயன்றிருந்தால் வெற்றியடைந்திருப்பார்கள் எனக் கூறமுடியாது. ஏனெனில் ஜனநாயகம் பேசிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழத் தேசிய முன்னணி போன்ற இயக்கங்கள் பாரிய தோல்விகளையே தழுவியிருந்தன. இங்கு ஜனநாயகமின்மை என்பது பிரபாகரன் உருவாக்கிய ஒன்றல்ல. அது முன்னோர்களிடமிருந்து அவருக்கு முதுசமாகக் கிடைத்த ஒன்று.

 

புலிகளிடம் ஜனநாயகம் இருக்கவில்லை என சம்பந்தன் கூறுகின்றார். சம்பந்தனிடம் அந்த ஜனநாயகம் இருக்கின்றதா? பிரபாகரன் தீர்மானங்களை எடுக்கும் போது குறைந்தபட்சம் தளபதிகளுடனாவது கலந்தாலோசிப்பார். சம்பந்தன் தீர்மானம் எடுக்கும்போது எவருடனும் கலந்தாலோசிப்பதில்லை. சிங்கக்கொடி விவகாரம் இதற்கு நல்லசான்று. சம்பந்தன் சிங்கக்கொடி தூக்கியமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதோ, தமிழரசுக்கட்சியினதோ முடிவல்ல. அது சம்பந்தனின் தனிப்பட்ட முடிவு. குறைந்தபட்சம் அதற்கு மன்னிப்பு கேட்பதற்குகூட சம்பந்தன் தயாராக இருக்கவில்லை. இந்த நிலையில் புலிகளின் ஜனநாயகம் பற்றிப் பேசுவதற்கு சம்பந்தனிடம் என்ன யோக்கியதை இருக்கின்றது? புலிகளை வேண்டுமானால் தவறுகளைக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம் எனக் கூறலாம். பயங்கரவாத இயக்கம் என ஒருபோதும் கூறமுடியாது. பயங்கரவாத இயக்கம் எனக் கூறுபவர்கள் தமிழ்த்தேசிய அரசியலை நிராகரிப்பவர்கள் என்றே கூறவேண்டும்.

 

சம்பந்தனின் இரண்டாவது கருத்து புலிகள் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளை பின்பற்றாததினால் அழிந்து போனார்கள் என்பது. இதுவும் மிகத் தவறானதாகும். புலிகள் அழிக்கப்பட்டமைக்கான காரணங்கள் வெளிப்படையானவை. அதில் முதலாவது சர்வதேச வல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்களாகும். இலங்கைத் தீவு சர்வதேச வல்லரசுகளின் நலன்களுக்கான கேந்திர இடத்தில் இருக்கின்றது. இதனால் இலங்கைத் தீவு முழுவதிலும் செல்வாக்குச் செலுத்தவேண்டிய தேவை அவற்றிற்கு இருந்தது. பிராந்திய வல்லரசான இந்தியா இதில் முன்னணியில் நின்றது. இந்தியாவில் உள்ள காங்கிரஸ் அரசாங்கத்திற்கு புலிகள் ராஜீவ் காந்தியை கொன்ற கோபமும் வேறு இருந்தது. இந்தியாவிற்காக இலங்கை நடாத்திய போர் என மகிந்தர் கூறியதையும் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையில் உறுதியாக நின்றமை இவ்வல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை.

 

இரண்டாவது புலிகள்தான் அரசியல் தீர்விற்கு தடையாக இருக்கின்றார்கள் என வல்லரசுகள் நம்பியமையாகும். இதில் வரலாற்று அனுபவங்களை அவை கவனத்தில் எடுக்கவில்லை. வரலாற்று ரீதியாக அரசியல் தீர்விற்கு தமிழ்த்தரப்பு ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. சிங்களத்தரப்புத்தான் தடையாக இருந்தது. பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் என்பன இவற்றிற்கு நல்லசான்று.

 

இலங்கையின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் எனக் கூறப்படுகின்ற பலர் இந்த நம்பிக்கையைக் கொடுப்பதில் முன்னின்றனர். சம்பந்தனுக்கும் அதில் ஒரு பங்கிருந்தது. இப்போதுதான் வல்லரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகளை தரிசிக்கத் தொடங்கியுள்ளன.

 

மூன்றாவது, புலிகள் எதிர்பார்த்த தீர்வைவிட மிகக் குறைந்த தீர்வுக்கு குறிப்பாக 13வது திருத்தத்திற்கு சம்பந்தன் தயாராக இருந்தமையாகும். 13வது திருத்தம் ஏற்கனவே யாப்பில் இருந்தமையினாலும், ஐக்கிய தேசியக் கட்சி அதனை ஏற்கும் நிலையில் இருந்தமையினாலும் வல்லரசுகள் மிக இலகுவாக பிரச்சினையைத் தீர்க்கலாம் என நம்பின. சம்பந்தன் புலிகளைப்போல வலுவான தீர்வில் உறுதியாக நின்றிருந்தால் புலிகளை வைத்துக்கொண்டே பிரச்சினையை தீர்க்க முற்பட்டிருப்பார்கள். இந்தியா தனது உள்நாட்டுக் காரணிகளுக்காக 13வது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு செல்லக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தது. குறைந்தபட்சம் வலுவான சமஸ்டி ஆட்சிமுறை உருவாகினால் கூட அந்தக் கோரிக்கை தனது நாட்டிலும் மேலெழும்பும் என இந்தியா அஞ்சியிருந்தது.

 

நான்காவது, தமது எடுபிடியான ரணிலின் வெற்றியைப் பறித்து மகிந்தர் ஆட்சிக்கு வர புலிகள் காரணமாக இருந்தார்கள் என்ற கோபமாகும். புலிகள் மகிந்தரை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் மூலம் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலையே பலவீனமாக்கியிருந்தார்கள். சீனா வலுவாக இலங்கையில் காலூன்றுவதற்கான வழிகளைத் திறந்துவிட்டிருந்தார்கள். தங்களைச் சுற்றி தந்திரமாக பின்னப்பட்ட சர்வதேச வலைப்பின்னலை அறுத்தெறிந்தார்கள். இவை சகிக்க முடியாத கோபத்தினை வல்லரசுகளுக்கு ஊட்டியிருந்தது.

 

ஆனால் மறுபக்கத்தில் இந்த ஆட்சிமாற்றமே இலங்கையுடன் வல்லரசுகள் முரண்படுவதற்கான களத்தினை திறந்துவிட்டிருந்தது. இன்று தங்கள் நலன்களுக்காக இனவிவகாரத்தை கைவிட முடியாதநிலையில் வல்லரசுகள் இருக்கின்றன. புலிகள் தாங்கள் அழிந்தாலும் இனவிவகாரம் தொடர்ந்து சூடாக இருப்பதற்கான களத்தினை இதன்மூலம் திறந்துவிட்டிருக்கின்றார்கள் என்றே கூறவேண்டும்.

 

இந்தக் காரணங்கள் எல்லாம் சம்பந்தனுக்கு தெரியாததல்ல. சம்பந்தன் இன்று அரசியலை நடாத்துவதே புலிகள் உருவாக்கிய அரசியலில் மேல்நின்றுதான். இந்நிலையில் யாரைக் காப்பாற்ற இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார்.

 

சம்பந்தனின் மூன்றாவது கருத்து வடக்கில் இராணுவத்தை அகற்றத் தேவையில்லை, பிரசன்னத்தை குறைக்கவேண்டும் என்பதாகும். இங்கு இராணுவத்தின் எண்ணிக்கை ஒரு லட்சமா? ஐயாயிரமா? என்பது பிரச்சினையல்ல. மாறாக என்ன நோக்கத்திற்காக இராணுவம் நிலைகொண்டுள்ளது என்பதே பிரச்சினையாகும். தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருப்பதை திட்டமிட்டு அழிப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே இராணுவம் நிலைகொண்டுள்ளது. அது நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, கலாச்சாரப்பறிப்பு எனப் பல வேலைத்திட்டங்களை முடுக்கிவிட்டிருக்கினறது. இந்த வேலைத்திட்டங்கள் முற்றுப்பெறுமானால் சம்பந்தன் அரசியல் செய்வதற்கே களம் எதுவும் இருக்காது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருக்கோணமலைக்கு ஏற்பட்ட நிலைதான் வடக்கிற்கும் ஏற்படும். சம்பந்தனின் வயது காரணமாக அவரது வாழ்நாள் குறுகியதாக இருப்பதனால் தனக்கு பின்னர் தமிழ் அரசியற்களமே இருக்கக்கூடாது என சம்பந்தன் நினைக்கின்றாரோ தெரியாது.

 

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் என்பது தமிழ்த்தேசத்தை அழிப்பதற்கானது. அது தமிழ்த்தேசத்தை மதிப்பதில்லை. இந்த இராணுவம் முழுமையாக வெளியேறவேண்டும். அரசியல் தீர்வு வந்த பின்னர் தமிழ்த் தேசத்தை மதித்து அதனைப் பாதுகாப்பதற்காக இராணுவம் நிலை கொள்வதில் தவறில்லை.

 

ஜெனிவாவில் நெருக்கடி வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மகிந்தரை ஓடிச்சென்று பாதுகாப்பதே சம்பந்தனின் செயற்பாடாக உள்ளது. இந்தத் தடவையும் வருகின்ற மார்ச்சில் இலங்கை அரசு நெருக்கடியினை சந்திக்க இருப்பதால் மகிந்தரைப் பாதுகாப்பதற்காகத்தான் சம்பந்தன் இவ்வாறான கருத்துக்களைக் கூறுகின்றார். சுருக்கமாகக் கூறினால் சம்பந்தன் ஜெனிவாவில் மகிந்தரைப் பிணையெடுக்க முற்படுகிறார்.

 

பேரினவாதத்திடமிருந்து தமிழ்த்தேசிய அரசியலை பாதுகாப்பதற்கு முன்னர் சம்பந்தனிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என யோசிப்பது நல்லது.

 


http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=33a7b2a2-25d3-4aea-b880-d5879d61791b

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்துக்குமாரின் இந்தக் கட்டுரையில் உள்ளவற்றோடு முழுமையாக ஒத்துப் போகமுடிகின்றது.
 

ஜனநாயகத்தின் அடிப்படையே மக்கள் பங்கேற்புதான். அங்கு மக்கள்தான் முடிவுகளை எடுக்கின்றார்களே தவிர தலைவர்கள் எடுப்பதில்லை. தலைவர்களுடைய கடமைகள் எல்லாம் நல்லமுடிவுகள் எடுப்பதற்கான ஆற்றலை மக்களுக்கு வழங்குவதும், மக்களின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதுதான். தமிழர் அரசியலில் தலைவர்கள் தமது முடிவுகளை மக்கள் மீது திணித்தார்களே ஒழிய மக்கள் முடிவுகளை எடுப்பதற்கு விடவில்லை.

விமர்சனங்களுக்கு அப்பால் சம்பந்தர் ஒரு துரோகி என்னும் வகையிலும் இவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் சூழலில் துரோகி என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றாக இருப்பதால், அது குறித்து இப்பத்தி அலட்டிக் கொள்ளவில்லை. சம்பந்தர் முன்னரும் புலிகளின் துரோகிப் பட்டியலில் இருந்த ஒருவர்தான். நீலன் திருச்செல்வம் துரோகி என்னும் அளவுகோலின்படி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அடுத்த இலக்கு சம்பந்தர்தான் என்னும் நிலைமை அன்றிருந்தது. சம்பந்தர் விடுதலைப்புலிகளுக்கு பயந்து, தனது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பலமான பாதுகாப்புடன் இருந்த கதை பலரும் அறிந்த கதையும் கூட.

 

ஆனால், அதே இரா.சம்பந்தன் பின்னர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் அடிக்கடி பிரசுரமாகிக் கொண்டிருந்தன. எந்த பிரபாகரனுக்கு பயந்து சம்பந்தன் குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்தாரோ, பின்னர் அதே பிரபாகரனுக்கு அருகில் இருந்து, சம்பந்தன் அரசியல் பேசும் நிலைமை தோன்றியது. அரசியலை ஒரு சினிமா போன்று பார்த்துப் பழகிய தமிழ் சனங்களோ, தம்பியும் ஐயாவும் – அண்ணையும் ஐயாவும் – என்று சாதாரணமாக கடந்து சென்றனர். ‘சம்பந்தர் ஒரு பெறுமதியான ஆள், இவரை நாங்கள் பாதுகாக்க வேண்டும்’ என்று பிரபாகரன் சொன்னதாகவும் அன்று கதைகள் உலவின. வன்னிச் சூழலில் குறிப்பாக புலிகளின் அரசியல் பிரிவினர் மத்தியில் சம்பந்தன் சரக்குள்ள ஆள் என்னும் அபிப்பிராயம் நிலவியது. இதன் தொடர்ச்சி அதுவரை புலிகளால் துரோகியாக பார்க்கப்பட்ட மிதவாத தலைவரான சம்பந்தன் ஐயா தேசாபிமானியாக உருமாறினார். இதன் பின்னர் தெற்கின் அரசியல் அரங்கிலோ மிதவாதத் தலைவரான சம்பந்தன் விடுதலைப் புலியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இன்றுவரை அது தொடர்கிறது......

 

இங்கு சிலர் மத்தியில் ஒரு தவறான நம்பிக்கை (Mistaken believes) நிலவுகிறது. அதாவது தமிழ் மக்கள் இராணுவம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் செல்ல வேண்டுமென்று கூறிவருவதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறானது. இராணுவம் இந்த நாடு முழுவதும் எவ்வாறு இருக்கிறதோ அப்படி இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒடுக்கும் (oppressive) மற்றும் கட்டுப்படுத்தும் (subjugate) நோக்கத்துடன் இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கக் கூடாதென்றே நாங்கள் கூறிவருகின்றோம். தமிழ் மக்கள் தாங்கள் இந்த நாட்டில் சமத்துவமான பிரஜைகளாக (Equal citizens) நடத்தப்படவில்லை என்றவாறு உணராத வகையிலும், தாங்கள் தரக்குறைவான பிரஜைகளாக நடத்தப்படுவதாகவும் உணராத வகையில் இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களது சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் பிரயோகித்து வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். எனவே இதனைக் கருத்தில்கொண்டு வேலைகளுக்கு தேவையான அளவிலும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அளவிலும் இராணுவத்தினர் நிலைகொள்ளலாம் – இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருப்பது போன்ற அடிப்படையில்…’

 

தமிழ் மக்களால் சாத்வீக வழியில் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான கோரிக்கைகள் இலங்கையை ஆட்சிசெய்த வெற்றிகரமான ஆட்சியாளர்களால் உள்வாங்கிக் கொள்ளப்படாமையின் காரணமாகவே புலிகள் உருவாகினர். மாறாக விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிவருகைக்கு நியாயபூர்வமான காரணங்கள் இருந்தன. இதனை எவரும் நிராகரிக்க முடியாது. விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் (Civilians) மீது தாக்குதல் மேற்கொண்டபோது, அவர்கள் பயங்கரவாத அமைப்பு என்னும் (In terms of terrorist organization) கருத்து வகைக்குள் வந்தனர். அவர்கள் சாதாரண தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை கொன்றுள்ளனர். மக்கள் தலைவர்களை கொன்றுள்ளனர். இதன்போது அவர்கள் பயங்கரவாத வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர்.

 

-யதீந்திராவின் கட்டுரையில் இருந்து.

மிகத்திறமையாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போன்று சம்பந்தர் தமிழ்மக்களின் எதிரி என்று காட்டி தமிழ் மக்களை முட்டள்கள் ஆக்கியபின்னர் இப்போது புலிகளை தமிழ் இனத்தின் எதிரியாகும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

 

 

இலங்கையில் நடைமுறையில் இருப்பதெல்லாம் சிங்களத்தேசியம், தமிழ்த்தேசியம், முஸ்லிம்தேசியம், மலையகத்தேசியம் என்பனவே.

 

தமிழ்த்தேசிய நிலைநின்று புலிகளை மதிப்பிடுபவர்கள் இலங்கை அரசிற்கும், தமிழ்மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பொறுத்தவரை புலிகளின் பாத்திரம் முற்போக்கானது என்றே கூறுகின்றனர்.

 

தமிழ்த்தேசிய நிலை நின்று புலிகளை மதிப்பிடுபவர்கள் தமிழ்மக்களுக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவில் புலிகள் பிற்போக்கான பாத்திரத்தை வகித்தனர் எனக் கூறுகின்றனர். இந்த விடயத்தை பொறுத்தவரை இரண்டு தவறுகள் புலிகளிடம் இருந்திருக்கின்றன.

 

பரந்துபட்ட ஐக்கிய முன்னணி ஒன்றினை அமைத்து போராடுவதன் மூலம் அனைவரையும் இணைக்கக்கூடிய சாத்தியம் இருந்திருக்கும். ...................அது மட்டுமே சரியான மார்க்கமாக இருந்திருக்கும்.

 

நீங்கள் ஆதரவு தந்தால் போதும் என்பதே புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. இந்தக் குத்தகை மனோபாவம்தான் புலிகள் தோல்வியடைந்தபோது பலருக்கு புலிகள் மீது கோபம் வருவதற்கும் காரணமாகியிருந்தது.

 

இதன் விளைவு இறுதிக்காலத்தில் புலிகள் நன்றாக தனிமைப்பட்டுப்போயிருந்தனர்.

 

இரண்டாவது, போராடும் மக்களுக்கு ஜனநாயம் அவசியமானதாகும். ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் அரசியல் வரலாறு முழுவதும் இந்த ஜனநாயத்திற்கு பஞ்சமே இருந்தது. இராமநாதன், ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம் என பழைய தலைவர்கள் எவருமே இதில் போதிய கவனம் செலுத்தவில்லை. ஒப்பீட்டு ரீதியில் தமிழரசுக்கட்சியிடம் சிறிதளவு ஜனநாயம் இருந்தாலும் அது போதியதாக இருக்கவில்லை. தமிழர் அரசியலில் தலைவர்கள் தமது முடிவுகளை மக்கள் மீது திணித்தார்களே ஒழிய மக்கள் முடிவுகளை எடுப்பதற்கு விடவில்லை.(தமிழர் சர்வாதிகார மனப்பாங்குடையவர்கள் மட்டுமே).

 

புலிகளிடம் ஜனநாயகம் இருக்கவில்லை என சம்பந்தன் கூறுகின்றார். சம்பந்தனிடம் அந்த ஜனநாயகம் இருக்கின்றதா? பிரபாகரன் தீர்மானங்களை எடுக்கும் போது குறைந்தபட்சம் தளபதிகளுடனாவது கலந்தாலோசிப்பார்.(சம்பனரின் பேச்சை திரித்து அவர் புலிகள் சர்வாதிகள் மட்டும் தான் என்று கூறுவதாக ஆக்கியது மட்டுமல்ல, அதன் பின்னர் புலிகள் சர்வாதிகாரிகள் அல்ல என்று மறுக்காமல் அதில் மேலும் கட்டி எழுப்பி கூட்டமைப்பும் அதுவேதான் என்கிறார்)

 

இந்தியாவிற்காக இலங்கை நடாத்திய போர் என மகிந்தர் கூறியதையும் இங்கு பொருத்திப்பார்க்க வேண்டும். புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையில் உறுதியாக நின்றமை இவ்வல்லரசுகளின் பூகோள அரசியல் நலன்களுக்கு ஏற்றதாக இருக்கவில்லை.

 

சம்பந்தனின் வயது காரணமாக அவரது வாழ்நாள் குறுகியதாக இருப்பதனால் தனக்கு பின்னர் தமிழ் அரசியற்களமே இருக்கக்கூடாது என சம்பந்தன் நினைக்கின்றாரோ தெரியாது.(மிக தீர்க தரிசமாமன எழுத்து)

சம்பந்தரின் கருத்து என்று சொல்லி விடுதலைப்புலிகளை நன்றாகச் சாடியுள்ளார் எழுத்தாளர். உன்னிப்பாகப் பார்த்தால் தான் வேறு மக்கள் வேறு, சம்பந்தர் வேறு, புலம்பெயர் தமிழர் வேறு என்ற வகையில்தான் போக்கு இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.