Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செங்கல்பட்டு முகாமில் 9ஆவது நாளாகவும் உண்ணாவிரதம்

Featured Replies

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 9 ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்களில் 9 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

senkalppattu-hunger-strike.jpg?fit=500%2


கியூப்பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீனியர்கள் உட்பட 41 ஈழத்தமிழர்களை செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தங்களை திறந்தவெளி முகாமிற்கு விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் 45 நாட்களுள் தங்களை விடுதலை செய்வதாக கூறிச்சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
 

இதனையடுத்து மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 7 அகதிகள் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு அனுப்பிவைக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 வது நாள் புதன் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் காந்திமோகன், ரமேஷ் ஆகிய 2 பேர், 5ம் நாள் ரைசுதீன் என்பவரும், 7ம் நாள் கஜன், பரமேஸ்வர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 12 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் 6 பேர் உடல்நலம் குறைவால் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
 

அவர்களிடம் வட்டாட்சியர் இளங்கோ, டிஎஸ்பி மூவேந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக கூறி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

http://rste.org/2012/12/31/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9%E0%AE%86/

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களில் ஒருவர் மரணித்தால் இந்தியா முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டு மிகுதி அத்தனை பேரையும் விடுவித்துவிடுவார்கள்..! :rolleyes:

  • தொடங்கியவர்

206136_317868708317048_1808792200_n.jpg



163311_317868571650395_227026102_n.jpg



227606_317867501650502_1682561124_n.jpg



கடந்த மாதம் 23 ஆம் தேதியில் இருந்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள 23 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல் நிலை மோசமான காரணத்தால் அதில் 12 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவமனையிலும் அவர்கள் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்கின்றனர். மீதமுள்ளவர்கள் சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணா நிலையில் உள்ளனர்.

 

தமிழக அரசும் போராட்டத்தில் உள்ள ஈழத் தமிழர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

 

போராட்டம் தொடங்கிய பின் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா ஆகியோர் மருத்துவமனை சென்று சிகிச்சையில் உள்ள சிறப்பு முகாம் வாசிகளை சந்தித்துள்ளனர்.


அதன் பின்பு அரசும் சற்று தங்கள் நிலையை தளர்த்தி ஐந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்த சம்மதித்துள்ளது.

இதன்படி செல்வம், செல்வராஜா, ரமேஷ், ஜெயபாலன், ரைசுதீன் ஆகியோர்கள் விடுதலை ஆகிறார்கள்.

இவர்களை அரசு விடுதலை செய்தாலும் உண்ணா நிலையில் உள்ளவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. காரணம் சென்ற காலங்களில் அரசு 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து நபர்களை விடுதலை செய்து வந்தது.

 

இப்போது 90 நாட்கள் ஆகியும் யாரையும் விடுதலை செய்யவில்லை என்பதால் தான் முகாம் வாசிகள் போராட்டாம் நடத்தினார்கள்.


அரசு தற்போது 90 நாட்கள் கழித்து ஐந்து பேர்களை விடுதலை செய்வதை ஏற்க முடியாது, 10 பேர்களையாவது தற்போது விடுதலை செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் வழமை போலவே 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து பேர்களை விடுதலை செய்ய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர்கள் கூறியுள்ளனர்.

 

மேலும் உலகத் தமிழர்களுக்கு முகாம் வாசிகள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:

தமிழ் நாட்டில் வாழும் ஈழ அகதிகள் விடுதலை அடைய உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்களில் தங்கள் கண்டன அறிக்கையை சமர்பிப்பதுடன், பல வகையான போராட்ட முன்னெடுப்புகளை எடுக்குமாறு வேண்டுகிறோம் என்று கூறியுள்ளனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.