Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொழில்நுட்ப உலகம் 2012

Featured Replies

கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும் தொழிநுட்ப உலகில் பல சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

அவற்றில் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சாதனங்கள் பற்றிய ஒரு பார்வையே இது.


 

அப்பிள் ஐ போன்5

 

appliiphone5ssa.jpg

 

 

கடந்த ஆண்டு வெளியாகிய ஐபோன் 4எஸ் இற்கு அடுத்த படியாக வெளியாகியதே ஐபோன் 5 ஆகும். ஐபோன் 4எஸ் இனை விட மேம்பட்ட தொழில் நுட்ப அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

 

ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் ஐ போன்5 கொண்டுள்ளதாக அப்பிள் விளம்பரப்படுத்தியது.


இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது.

 

இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவை பயன்படுத்தப்பட்டிருந்தது பின்னர் அதன் நேர்த்தியின்மையால் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி சர்ச்சைக்கும் உள்ளாகியது.


சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது அப்பிள்.

 

 

ஐபேட் மினி

ipadmini2121.jpg

 

பல எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வுகூறல்களுக்கு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டது ஐபேட் மினி. அப்பிளின் ஐபேட் டெப்லட் கணனிகளை விடத் தோற்றத்தில் சற்று சிறியது.

 

 

ஐபேட் மினியானது 7.9 அங்குல திரையைக் கொண்டதுடன் 7.2 மில்லி மீற்றர் தடிப்பமானது.



ஐபேட் 4 ( ipad 4)

 

யாரும் எதிர்பார்க்காத, எந்த ஊடகமும் எதிர்வுகூறாத அப்பிள் சாதனமொன்று அண்மையில் வெளியாகியது என்றால் அது ஐபேட் 4 ஆகும். ஏனெனில் ஐபேட் மினிக்கான நிகழ்வில் ஐபேட் 4 வும் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

 

அப்பிளின் நிகழ்வுக்குச் சென்றிருந்த எந்தவொரு ஊடகமும் இவ் ஆனந்த அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவில்லை. எந்தவொரு ஊடகமும் இது தொடர்பில் எதிர்வுகூறவும் இல்லை.


ஐபேட் 4 ஆனது 9.7 அங்குல ரெடினா திரையைக் கொண்டுள்ளது. மேலும் ஐபேட் 3 இனை விட இருமடங்கு வேகமான செயற்பாட்டினை வழங்கும் A6X சிப்பினை கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

 

Dual-core 1 GHz Cortex-A9 CPU, A6X processor - doubles the performance and graphics, FaceTime HD camera - 720p, LTE expanded coverage ஆகிய தொழில்நுட்ப அம்சங்களை இது கொண்டுள்ளது.

 

 

 

செம்சுங் கெலக்ஸி நோட்2


பேர்லினில் நடைபெற்ற IFA தொழில்நுட்ப மாநாட்டிலேயே செம்சுங் இதனை அறிமுகப்படுத்தியிருந்தது.

கெலக்ஸி நோட் 2 ஆனது 5.5 அங்குல எச்.டி சுப்பர் எமொலெட் திரையைக் கொண்டது.

அண்ட்ரோய்ட் 4.1 ஜெலிபீன் மூலமே கெலக்ஸி நோட் 2 இயங்குகின்றது.


இதைத்தவிர வேகமான செயற்பாட்டுக்கு 2 ஜி.பி. ரெம், 1.6 GHz குவாட்கோர் புரசசர் ஆகியவற்றைக் கொண்டது.

நுகர்வோரிடையே இது நல்ல வரவேற்பைப் பெற்றது.


 

 

நொக்கியாவின் இறுதி நம்பிக்கை லுமியா 920

 

அண்ட்ரோய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். இன் பிடிக்குள் இருக்கும் ஸ்மார்ட் போன் சந்தையில் வின்டோஸ் மூலம் பாவனையாளர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்கும் பொருட்டு நொக்கியா அறிமுகப்படுத்தி வரும் விண்டோஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.

 

ஆனால் சில வித்தியாசமான தொழிநுட்ப அம்சங்களால் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதன் தொழில்நுட்ப அம்சங்களைப் பார்க்கும் போது,


1280-pixel-by-768-pixel resolution உடன் கூடிய 4.5 அங்குலPure motion HD + WXGA IPS LCD திரையைக் கொண்டுள்ளது.

தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட் போன்களில் மிகத்தெளிவான திரைகளில் ஒன்றாக இத்திரை கருதப்படுகின்றது.


இதனுடன் 8.7 மெகா பிக்ஸல், 3264 x 2448 pixels, Carl Zeiss optics, optical image stabilization, autofocus, LED flash வசதியுடன் கூடிய PureView தொழில்நுட்பத்தில் இயங்கும் கெமராவினைக் கொண்டுள்ளது.

 

லுமியா 920 இல் காணப்படும் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் வயர்லெஸ் அதாவது வயர்கள் இல்லாமல் சார்ஜ் செய்யும் வசதியாகும்.இதற்கென தனியான சார்ஜிங் பேடை நொக்கியா பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளது.

 

 

 

 

விண்டோஸ் சேர்பேஸ்

டெப்லட் சந்தையை தன்கைக்குள் வைத்துள்ள ஐ பேட்டின் ஆதிக்கத்தினை முடிவுகட்டும் நோக்குடன் மைக்ரோசொப்ட் புதிய டெப்லட் ஒன்றினை இவ்வருடம் அறிமுகப்படுத்தியது.


இதன் பெயர் 'சேர்பேஸ்' ஆகும்.. டெப்லட் கணனிகள் என்றவுடனேயே எமக்கு ஞாபகம் வருவது அப்பிளின் ஐ பேட்டாகும்.
கூகுளின் அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் பல டெப்லட்கள் சந்தையில் உள்ளபோதிலும் அவை ஒன்றாலும் அப்பிள் ஐபேட்டின் விற்பனையை முந்த முடியவில்லை.

 

பிளக்பெரி வெளியிட்ட 'பிளே புக்' டெப்லட்டும் ஐ பேட்டுடன் மோத முடியாமல் சந்தையில் காணாமல் போனது.
விண்டோஸ் ஆர்.டி மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows RT), விண்டோஸ் 8 புரோ மூலம் இயங்கும் சேர்பேஸ் (Surface for Windows 8 Pro) என இம்மாதிரிகள் பிரிக்கப்பட்டுள்ளன.


 

 

கிண்டில் பயர் எச்.டி.

அமேசனின் கிண்டில் பயர் டெப்லட் வரிசையில் அடுத்த கட்ட வெளியீடாக அறிமுகப்படுத்தப்பட்டதே கிண்டில் பயர் எச்.டி. .

டுவல்கோர் புரசசர், துல்லியமான திரை, சிறப்பான ஓடியோ என பல சிறப்பான வசதிகளை இது கொண்டிருந்தது.

 

இதுவும் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


 

 

 

 

கூகுள் நெக்ஸஸ்7

 

கூகுளினின் டெப்லட் கனவை நிறைவேற்றும் முகமாக எசுஸ் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் அறிமுகப்படுத்திய டெப்லட்டே நெக்ஸஸ் 7 ஆகும். குறைந்த விலை, அழகான தோற்றம் உட்பட பல காரணங்களினால் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

 

 

எச்.டி.சி. One X

எச்.டி.சி நிறுவனம் இவ்வருடம் அறிமுகப்படுத்திய சிறந்த ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக இதைக் குறிப்பிடலாம்.

குவாட்கோர் புரசசரைக் கொண்ட இச் ஸ்மார்ட் போனானது அண்ட்ரோய்ட் 4.0 ஐஸ்கிரீம் சென்விச் மூலம் இயங்கும் இது 8 மெகாபிக்ஸல் கெமராவைக் கொண்டது.

 

 

நுகர்வோரிடையே இதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


 

 

 

லெனோவோ ஐடியாபேட் யோகா 13

 

லெனோவோ நிறுவனத்தின் டெப்லட் மற்றும் லெப்டொப் ஆக உபயோகப்படுத்தக்கூடியதொரு சாதனமே இது.

13 அங்குல திரையைக்கொண்டுள்ளது இது விண்டோஸ் 8 மூலம் இயங்குகின்றது.


இதன் இரட்டைப் பயன்பாட்டிற்காக இதுவும் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

 

 

 

Motorola DROID RAZR MAXX HD

இவ்வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மிகச் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது.

துல்லியமான தொடுதிரை, டுவல் கோர் புரசசர் என பல வசதிகள் இருக்கின்ற போதிலும் நீடித்து நிலைக்கும் 3300 mmh லித்தியம் அயன் பெட்டரியைக் கொண்டு வெளியாகியமையால் நல்ல வரவேற்பைப் பெற்ற ஸ்மார்ட் போன்களில் ஒன்றாக மாறியது.

 

 

கெலக்ஸி கெமரா

 

அண்ட்ரோய்ட் மூலம் இயங்கும் கெமராவை அறிமுகப்படுத்தியது இவ்வருடத்தில் புதுமை படைத்தது செம்சுங்.

இது சுப்பர் கிளியர் எல்.சி.டி . திரை கெப்பேசிடிவ் திரையைக் கொண்ட 16.3 MP கெமராவாகும்.


ரெட்டினா திரையுடன் கூடிய மெக்புக் புரோ


பொதுவாக டெப்லட்களுடன் ஒப்பிடுகையில் லெப்டொப்கள் தெளிவு குறைந்த திரையேயே கொண்டிருக்கும் என்ற எண்ணத்தை ரெட்டினா திரையுடன் கூடிய மெக்புக் புரோ மூலம் மாற்றியது அப்பிள்.


அதி துல்லியமான ரெட்டினா திரையை லெப்டொப்புடன் இணைப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல காரணம் அதற்கு தேவையான சக்தி, மற்றும் அத்திரை இலகுவாக வெப்பமடையக் கூடிய தன்மையைக் கொண்டிருந்தமையுமாகும்.

 

எனினும் அப்பிள் இதனை மாற்றி தனது ஐபேட் மற்றும் ஐபோன்களில் பயன்படுத்தும் ரெட்டினா திரையை லெப்டொப்பில் பயன்படுத்தியது.


 

 

LG Ultra HD3D - 84LM9600

 

அதி உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியாக இதனைக் குறிப்பிடலாம்.

எ.ஜி.யின் உயர் ரக தயாரிப்பான இது 84 அங்குல திரையைக் கொண்டதுன், புல் எச்.டி. தொலைக்காட்சிப் பெட்டிகளை விட 4 மடங்கு துல்லியமான திரையைக் கொண்டது.


இதன் ரிசொலுயுசன் 3840 x 2160 பிக்ஸல்களாகும்.

 

மேற்குறிப்பட்டவற்றை விட பல சாதனங்கள் 2012 ஆம் ஆண்டி அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் நுகர்வோரிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுக்கொண்டது.


மிகச் சிறிய கணனியான ரெஸ்ப்பெரி பை, முப்பரிமாண பிரிண்டரான MakerBot Replicator 2 , அப்பிளின் 5 ஆம் தலைமுறை ஐபொட் டச், செம்சுங்கின் கெலக்ஸி எஸ்3 மினி என இவ்வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது.

 

கடந்த வெளியாகுமென பலராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட பிளக்பெரி 10 ஸ்மார்ட் போன்கள் வெளியாகவில்லை. விண்டோஸ் 8 இயங்குதளம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

 

Call of Duty: Black Ops 2 வெளியாகி சுமார் 8 மில்லியனுக்கு அதிகம் விற்பனையாகி சாதனை படைத்தமையும் 2012 இல் ஆகும்.

 

http://www.virakesari.lk/article/technology.php?vid=117

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.