Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமல் ராஜபக்ஷ பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - யோகேஸ்வரன் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
yogeswaran-seithy-150.jpg

'ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதம நீதியரசராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார். திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி இலங்கை சுதந்திர சமுர்த்தி முகாமையாளர்கள், இணைப்பாளர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் வைத்து சந்தித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'

இன்று இந்த நாட்டில் ஜனநாயகமில்லை. நாட்டில் எதை எடுத்து கொண்டாலும் ஜனாதிபதியும் அவரின் குடும்பமுமே ஆட்சி செய்கின்றனர். இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதியின் சகோதரர் இருக்கின்றார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது 500 மில்லியன் ரூபா பணம் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் விரும்பியவாறெல்லாம் நிதிகளை கையாள்கின்றனர்.

 

இதேபோன்றுதான் இன்று நீதித்துறையையும் அவர்களின் கைவசமாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். தமது நடவடிக்கைகளுக்கு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரின் பதவியை பறிக்க முற்படுகின்றனர்.

 

யுத்தம் முடிவுக்க வந்த பின்னர் மக்களின் மனங்களை வெல்வதற்கு இந்த அரசாங்கம் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் கிடைப்பதை வரவேற்கின்றது. ஆனால் திவிநெகும சட்ட மூலமானது மாகாண சபைக்கு கிடைக்கும் அதிகாரங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கையாகும்.

 

இதனாலேயே நாங்கள் அந்த திட்டத்தினை எதிர்க்கின்றோம். மாறாக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஓய்வூதியம் கிடைப்பதையோ அல்லது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தொழில் நிரந்தரமாக்கப்படுவதையோ நாங்கள் ஒரு போதும் எதிர்க்கவில்லை.

 

நானும் 1997ஆம் ஆண்டு சமுர்த்தி உத்தியோகத்தராக இருந்தவன். எனக்கும் இந்த சமுர்த்தி திட்டம் பற்றி நன்கு தெரியும். அந்த வகையில் யாராக இருந்தாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களது நலன்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். அவர்கள் நிரந்தர ஓய்வூதியத்திற்குள் வரவேண்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் இந்த திவிநெகும சட்ட மூலத்தை எதிர்க்கின்றோம்' என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

 

yogeswaranmp-seithy-samurthy-1-20130104-

 

 

yogeswaranmp-seithy-samurthy-2-20130104-

 

http://seithy.com/breifNews.php?newsID=73277&category=TamilNews&language=tamil

Posted 14 December 2012 - 09:50 AM

பண்ணையிலை வளர்த்த வான்கோழி வேண்டாம். உயரப்பொந்திலை ஒழிச்சு மறைஞ்சிருங்கிற தென்னகிளி தேடுறார்.

 

இலங்கை இந்த காட்டேறியை தலைமை நீதிபதியாக்கலாம். இவர் சட்டகல்லூரியில், பிரபல சிங்கள புத்திமான் பீலிக்ஸ் ஆர் டயஸ் பண்டாரநாயக்காவின் சாதனை முறியடித்துள்ளதாக வாசித்திருக்கிறேன்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113063#entry836518

அடுத்த சர்வ வல்லமை படைத்த சனாதிபதியாக்க அல்லவா வேண்டும்  :lol:

நாமல் எம்.பி இராஜினாமா செய்வார்: அசாத் ஆரூடம்

புதன்கிழமை, 09 ஜனவரி 2013 01:48 0 COMMENTS
Namal_Rajapaksa1.jpg-அழகன் கனகராஜ்

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையில் 117 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ள போதிலும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கையொப்பம் இடவில்லை. அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார். அதன் பின்னர் அவரை பிரதம நீதியரசராக நியமிக்கக்கூடும். என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதிமேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நிறைவேற்றுத்துறை சட்டவாக்கத்துறையின் தலைமைப்பதவிகளை குடும்ப அங்கத்தவர்களே வகிக்கின்றனர். நீதித்துறை மட்டுமே குடும்ப அங்கத்தவர்களின் கையில் இல்லாது பிரிதொருவரின் கையில் இருக்கின்றது.

நீதித்துறையையும் தங்களுடைய  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமக்கு  தேவையானதை வேண்டிய நேரங்களில் செய்துக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி பிரதம நீதியரசராக நியமிக்கக்கூடும். அவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.