Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது - இலங்கைத் தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது - இலங்கைத் தூதுவர் 
[sunday, 2013-01-06 19:32:07]
 
உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் இலங்கைக்கு போதியளவு சாதூரியம் கிடையாது என பிரான்ஸ் நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். எல்லா சந்தர்ப்பங்களிலும் உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளும் விவகாரத்தில் இலங்கை வெற்றியை அடைவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
உலக நாடுகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் விவகாரத்தில் புலம்பெயர் இளைஞர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முடியம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பரஸ்பர புரிந்துணர்வுடன் இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திராவை கலகம் அடக்க பாவிக்கலாம்.  இந்தாளை என்ன செய்ய கோத்தா?

 

மேர்வினுக்கு target practiceக்கு ஏதாச்சும் தேவையோ தெரியாது?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வர வர லொள்ளு கூடிப்போச்சு உங்களுக்கு :D

“Impeachment, A Perfect Blunder – 2″

 

Special interview for mirror.lk with Dayan Jayatilleka.

 

His first interview, given to Harasha Gunewardene, since completing his assignment as Ambassador to France. We publish below the full interview;


Your thoughts on the Impeachment crisis?

 

Having spoken in support of President Rajapaksa in his re-election campaign in December 2009 – which I do not regret for a moment – I criticized the detention of Gen Sarath Fonseka, in an article in the Daily Mirror and The Island published on Feb 15th 2010, under the title ‘A Perfect Blunder’, in which I listed ten reasons for characterizing it as such. I would call the impeachment motion and the manner of its implementation ‘A Perfect Blunder – 2’.

 

http://www.colombotelegraph.com/index.php/impeachment-a-perfect-blunder-2/

நேர்மையான அரிசந்திரன் பரிதியின் வழக்கை பற்றிய விபரங்களை ஒழிக்க ஏன் உதவினாராம்?

 

ஊருக்கு தானேடி உபதேசம்........

 

தயான் ஜெயதிலக ஏன் சமாதானமக இருந்த இலங்கை SLMMயை வெளியேற்றி மீண்டும் சண்டையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது என்பதை பற்றி விளங்கப்படுத்தவில்லை. தயான் ஜெயதிலகா, மகிந்தா தான் சமாதானமாக போக விரும்பாத புலிகளுக்கு ஏன் பணம் கொடுத்தார் என்பதை விளங்கப்படுத்தவில்லை. இலங்கை எப்படி புலிகள் போரில் வைத்திருந்த மேற்கரத்தை விழுத்த முடுந்தது என்பதை பற்றி விளங்கப்படுத்தவில்லை. கதிர்காமரின் காலத்திலும் பார்க்க தனது காலத்தை  இலனகையின் திறமையான ராஜதந்திரகாலமாகவும்,அதில் தன்னை புகழந்தோரின் பட்டியலை பெருத்துபடுத்துகிறார்.

 

இலங்கை 1948 தொடக்கம் தமிழரை ஒதுக்கும் அரசியலில்தான் போய்ச் சேர்ந்தது. இதனால் அரசியலை தொடர மகிந்தா சண்டையை திரும்ப தொடக்க வேண்டியிருந்தது. தாயான் கூரும் Just War க்கு தேவை இல்லாதிருந்தது. இதில் மேல்கரத்தை வைத்திருந்த புலிகளை விழுத்த சர்வதேச உதவியை இலங்கை நாடியது. இதில் எதிரும் புதிருமாக இருந்த நாடுகளிடம், வெற்றியில் அவர்களுக்கும் பங்கு என்று பொய் வாக்குறுதி கொடுத்து. மேடையை நன்றாக அமைத்தார் கதிரகாமர். அவர் தனக்கு தெரிந்த மேற்கு நாடுகளை சரியாக வளைத்து போட்டிருந்தார். மகிந்தா சீனாவை புதிதாக சேர்த்தார், விட்டில் பூச்சியான இந்தியா வலிய வந்து விளக்கில் விழுந்தது.

 

கதிகாமரால் ஏமாற்றப்பட்ட பிளேக் கதிர்காமரின் இறப்புக்கு விசாரணை வேண்டும் என்றார். ஆனால் கலம் கடந்துவிட்டது. தான் விளையாட்டுக்கு வெடி கொழுத்துவதாகத்தான் பிளேக் நினைத்தார். அது டைனமைட்டாக வெடித்து அவரின் பதவியை கூட இறுதியில் அள்ளிக்கொண்டு போகும் என்பதை அவர் அப்போ உணரவில்லை. ஆனால் போர் முடிய முதலிலேயே மேற்குநாடுகள் தாம் சீனாவின் ராஜதந்திரத்தில் தோல்வி கண்டதை கண்டு உள்ளே புகைந்தன. இதனால் UNHRC ல் இலங்கை எதிர்ப்பு பிரேரணை வந்தது. ஜெயதிலகா செஞ்சோற்றுகடன் தீர்க்க இலங்கையை UNHRC ல் வெல்ல வைத்தார். இதற்கு போர் நடத்தியதற்கான தேவையையும், நடத்திய முறையையும் கெட்டித்தனமாக மறைத்தார். ஆனால் வெற்றியில் பங்குக்கு காத்திருந்த மேற்குநாடுகள் வெற்றி முழுவதும் சீனாவிடம் போவதை ஏற்கத்தயாரில்லை.ஜெயதிலகா ஒரு அமர்வில் இலங்கையில்ல் நடந்ததை ஒழித்தார். ஆனால், தசாப்த காலங்களுக்கு மேற்கு நாடுகள் பங்கு கேட்டு இலங்கையை நெருக்க தம்மை தயார் செய்திருக்கின்றன. இங்கே UNHRC இல் ஜெயதிலகா உபயோகமற்றவர் ஆனார். தாமரா குணநாயகம் வந்தார். ஆனால் மேற்குநாடுகள் தமது பங்கு கிடைக்கும் வரை இந்தியா மாதிரி இலகுவில் ஏமாறப்போவதில்லை.. 

 

மகிந்த எல்லோரையும் எமாற்றி பதவிக்கு வந்தது தான் அரசனாக. அவரின் அந்த கனவு ஒரு புறத்தில். நடந்த கொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டியது இன்னொரு புறத்தில். இப்போது இவர் மகிந்தா நேர்மையாக ஆள வேண்டும் என்றால் அது எப்படி. மகிந்தாவின் நிலை, ஒரு பொயையை மறைக்க சொன்ன ஒன்பது பொய்களையும் இப்போ சந்திக்க வேண்டிய இடம்,

 

பாஞ்சாலி தலை விரித்துவிட்டு திரிகிறாள்.  அர்சுனன் கர்னனை இலக்கு வைக்க தேடிடுகிறான். வீமனுக்கு நூற்றுவரும் வேண்டும். இபொது வந்து விதுரன் நியாயம் பேசி வில்லை முறித்தால் துரியோதனன் செய்யத்தக்கது, விதுரனை அரண்மனையால் வெளியேற்றுவதுதான். 

 

விதுரன், திரௌபதையை துச்சாதனன் தொடப் போன போதாவது மறித்திருக்க வேண்டும் அதன் பின்னர் அவனுக்கும் தான் இனி அரண்மனையை விட்டு போக வேண்டும்  என்பது தெரிந்துவிட்டது. போருக்கு ஆயுதம் கொடுத்த அமெரிக்கவான கண்ணன் இலங்கையின் எதிரி என்பது தயானுக்கு தெரியும். போருக்கு ஆயுதம் கொடுத்த கண்ணனன் துரியோதனின் நண்பன் அல்ல.  சகுனியான இந்தியா துரியோதனின் உண்மையான நண்பனாக இருந்தாலும் சேரக்கூடாத துஸ்டன் என்றதை விதுரனுக்கு எப்போதோ தெரியும். இப்போது போரின் முடிவு எங்கே போகும் என்பதைப்பற்றி தெரிய வந்திருப்பதால் ஜெயதிலகா வில்லை முறித்துவிட்டார். இது கோளைத்தனம்.

 

ஜெயதிலகா தான் UNHRC இல் விட்ட கபட ஏமாறுக்களை என்றும் நிலைக்கத்தாக்கதான ராஜதந்திரம் என்று நினத்துவிட்டார். மேற்குநாடுகள் அரசன் அன்றறுபான், தெய்வம் நின்றறுக்கும் என்று நடந்து கொள்கிறார்கள்.  தயான் கத்தி கிட்ட வரும் போது தான் கோட்டுக்கு வெளியே ஓடிவந்துவிட்டார். ஆனால் தாய்கன்னை மகிந்தா எல்லாவற்றுக்கும் பொறுப்பு எடுக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.