Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு செல்ல வேண்டாம் - கமறூனிம் சிபோன் மன்டொனா (Siobhain McDonagh) கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uk.siobhain%20mcdonagh.jpg

இலங்கைத்தீவில் இடம்பெற்ற இறுதிப் போரில் மக்கள் அழிக்கப்பட்டதைப் போல உங்கள் தொகுதியிலுள்ள (Witney, Carterton and Chipping Norton)மக்களிற்கு நடந்தால் அதனை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என, பிரித்தானியப் பிதமர் டேவிட் கமறூனிடம் (Siobhain McDonagh), மிச்சம்-மோர்டன் தொகுதி தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா (Siobhain McDonagh) கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

 
சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாடு நடைபெறவுள்ள பின்புலத்தில், அங்கு பிரித்தானியப் பிரதமர் செல்லக்கூடாது எனவும், அந்தக் கூட்டத்தை கொழும்பில் நடத்த அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமருக்கு நீண்ட கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருக்கின்றார். 
 
அந்தக் கடிதத்தில், வன்னியில் இறுதிப் போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கட்டமை, மிக மோசமாக இன அழைப்புக்கு உள்ளாக்கபட்டது போன்று உங்கள் தொகுதி மக்களிற்கு நடந்தால் என்ன செய்வீர்கள் என அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 
 
பிரித்தானியாவில் வாழும் இரண்டரை இலட்சம் மக்களை அரசாங்கம் உதாசீனம் செய்யக் கூடாது எனவும், இலங்கைத்தீவில் போரில் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் தனது தொகுதியில் வாழ்ந்து வருவதாகவும் மக்டொனா சுட்டிக்காட் உள்ளார். 
 
பிரித்தானிய அரசாங்கம் கொழும்புக் கூட்டத்தில் கலந்து கொண்டால் அது சிறீலங்கா அரசாங்கத்திற்கு அங்கீகாரத்தைக் கொடுக்கும் என்பதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சிறீலங்கா அரசாகத்தின் மீது அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை நடத்தப்ப வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.parliamentlive.tv/Main/Player.aspx?meetingId=12159

 

 

Westminster Hall, UK
Meeting started at 9.29am. Ended at 11.30am

Private Members’ Debate: 
Sri Lanka and the UN responsibility to protect – Siobhain McDonagh

 

 

(To read from Hansard)

http://www.parliament.uk/business/publications/hansard/commons/todays-commons-debates/read/unknown/1258/

 

Edited by Queen

தமிழர்களின் இயலாமையையும், சம்பந்தனின் மற்றொரு முகத்தையும்,  தமிழர்கள் தங்களது பிரச்ச‌னைகளை  சர்வதேசத்திற்கு கொண்டு செல்லுவதை மேலும் வலியுறுத்தும் விவாதம்.  இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட அல்லது தமிழ் மக்களால் வெளிநாடுகளுக்கு வரவளைக்கப் பட்டு விளக்கங்கள் கொடுக்கப் பட வேண்டியதை வலியுறுத்தும் விவாதம். 
 
நாங்கள் இப்பிடியே இருக்கப் போகிறோமா அல்லது எங்களால் ஏதாவது செய்ய முடியுமா...? சிந்திப்போம் கள உறவுகளே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.