Jump to content

திவிநெகும சட்டத்தின் மூலம் தமிழர்களை அழிக்கத் திட்டம்: சுமந்திரன் குற்றச்சாட்டு


Recommended Posts

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதான 15 அதிகாரங்கள் திவிநெகும சட்டத்தின் மூலம் பலவந்தமாகப் பறிக்கப்பட்டுள்ளன. மாகாண அதிகாரங்களை பறித்தெடுக்கின்ற இந்தச் சட்டமூலத்தின் மூலம் தமிழ் மக்களை வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி அவர்களை அழித்துவிட அரசு திட்டம் தீட்டிவிட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஸ்ரீலங்கா நாடாளுமன்றில் நேற்றையதினம் இடம்பெற்ற திவிநெகும திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குற்றம்சாட்டினார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

அதிகூடிய அதிகாரப் பகிர்வை அளிப்போம், 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பாற்சென்று அதிகாரப்பகிர்வை அர்த்த புஷ்டியாக்குவோம் என்று கூறிய ஜனாதிபதியின் வாக்குறுதிகளுக்கு எதிராகவே இந்த திவிநெகும சட்டவரைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இன்று சமுர்த்தி உத்தியோகத்தர்களை சபைக்கு அழைத்துவந்து நாம் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுவதை எதிர்ப்பதுபோல் காட்ட முனைகின்றனர். சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஓய்வூதியம் பெறக்கூடிய அரச ஊழியர்களாக உள்வாங்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம். இதனை ஒரு சாதாரண சட்டத்தின் மூலம் செய்திருக்க முடியும்தானே. ஏன் அதை இனிப்பை பூசிய கசப்பான திவிநெகும சட்டத்தின் மூலம் செய்யவேண்டும்?

13 வது திருத்தச் சட்டம் வெறும் எழுத்திலான அரைகுறைச் சட்டம். அச்சட்டம்  அரைகுறையாகவேனும் மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது. அப்படி வழங்கியுள்ள அதிகாரங்களில் 15 விடயங்களை திவிநெகும சட்டம் பலவந்தமாகப் பறித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தியையும், வறுமை ஒழிப்பினையும் மாகாணசபைகள் மூலம் செய்யக்கூடாதா? அதற்கு ஏன் தடைபோடுகின்றீர்கள்? திவிநெகும சட்ட வரைவு தொடர்பாக உயர்நீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளை வழங்கியுள்ளது. ஆனால், இவற்றை நீங்கள் உதாசீனம் செய்துவிட்டீர்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டு நாட்களும் நீதிமன்றத்தில் வந்து அமர்ந்திருந்தார். அவருக்கு என்ன விளங்கியதோ தெரியவில்லை. இங்கு வந்து யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்கின்றார். சட்டமூலம் தொடர்பாக பேசாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வசைபாடுகிறார்.

நாம் எமது அபிலாஷைகள் தொடர்பாக பேசுகின்றோம். அரசியல் அதிகாரம் பகிரப்படவேண்டும். நாமும் எமது பிரதேசங்களில் ஏனைய சமூகங்களைப் போன்று சமமான அரசியல் அதிகாரங்களுடன் வாழ விரும்புகின்றோம். இது தவறில்லையே.

நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் 18வது அரசமைப்புக்கு ஆரதவளித்து அமைச்சரானபோது இந்தச் சபையில் கூறியதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு வெளியே இருந்தும், முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்தும் அதிகாரப் பகிர்வை பெற முயற்சிப்போம் என்று கூறினார். ஆனால், இன்று இவருடைய நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகின்றேன்.

திவிநெகும சட்டமூலத்தை தனிப்பட்ட முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டும் எதிர்க்கவில்லை. இதனை எதிர்த்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பல புத்திஜீவிகள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதம் ஆங்கில பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

எம்மை விமர்சிக்கும் அமைச்சர் டக்ளஸ், யாரைக் கொண்டாவது அதனை வாசித்து தெளிவுபெற வேண்டும் என சுமந்திரன் தனதுரையில் தெரிவித்தார்.

அப்போது பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஏதோ கூறினார்.

உங்களுக்கு எதுவுமே தெரியாது. அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு சும்மா கொக்கரிக்க வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார் சுமந்திரன்.

இவ்விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

http://tamilleader.com/mukiaya/8553-2013-01-09-02-06-33.html

Link to comment
Share on other sites

சரிதான் போ! பூராயம் இதை கொண்டுவந்து பதிகிறார். கூட்டமைப்பு வீடுகளில் எல்லாம் அடை மழை பெய்ய போகிறது. :D

 

 

 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டு நாட்களும் நீதிமன்றத்தில் வந்து அமர்ந்திருந்தார். அவருக்கு என்ன விளங்கியதோ தெரியவில்லை. இங்கு வந்து யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசிக்கின்றார். சட்டமூலம் தொடர்பாக பேசாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வசைபாடுகிறார்.

பாவம் இரண்டு நாள் அலைய வேண்டி வந்துவிட்டது. என்றைக்கு வாக்களிப்பு என்று யாரும் முதலிலேயே சொல்லிக்கொடுக்கவில்லை போலும்.

 

 

 

எம்மை விமர்சிக்கும் அமைச்சர் டக்ளஸ், யாரைக் கொண்டாவது அதனை வாசித்து தெளிவுபெற வேண்டும் என சுமந்திரன் தனதுரையில் தெரிவித்தார்.

அப்போது பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா) ஏதோ கூறினார்.

உங்களுக்கு எதுவுமே தெரியாது. அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கு சும்மா கொக்கரிக்க வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார் சுமந்திரன்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மறைமுகமாக அமெரிக்காவின் Rule based world order  ஐ ஜெய்சங்கர் சுட்டிக்காட்டுகிறார்.😁
    • சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -3 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -1 சொகுசு வாகன பெர்மிட் எடுத்து 4-5 கோடிக்கு விற்றோர் -2
    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.