Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாசியாவின் பாதுகாப்புக்கு இந்தியா ஏன் தலைமை ஏற்கவேண்டும்? - அரசியல் ஆய்வாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

India%20-%20victory%20over%20Pakistan%20

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா தனது மூலோபாய மற்றும் இராணுவ நலன்களை அடைந்து கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன் அயல்நாடுகள் தாம் அதிருப்தியடைந்ததற்கான எடுத்துக்காட்டாக 'பங்களாதேஸ் போர்' மற்றும் சிறிலங்காவில் 'இந்திய அமைதி காக்கும் படை' பணியில் ஈடுபடுத்தப்பட்டமை போன்றன அடிக்கடி சுட்டிக்காட்டப்படுகின்றன. 

பாகிஸ்தான் போர் மூள்வதில் இந்தியா எந்தவொரு சதியிலும் ஈடுபடவில்லை என்பதை இதன் அயல்நாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. பாகிஸ்தான் விட்ட சொந்தத் தவறே பங்களாதேஸ் யுத்தம் ஆரம்பமாகக் காரணமானது. இதேபோன்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வேண்டுகோளின் பேரிலேயே சிறிலங்காவுக்கு இந்திய அமைதி காக்கும் படை அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் இவ்வாறான உண்மைகளை இந்தியாவின் சிறிய அயல்நாடுகள் விளங்கிக் கொள்ளவில்லை. மாறாக இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இந்தியா தனது சொந்த நலனை அடைந்து கொள்வதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்தியாவின் அயல் நாடுகள் நம்புகின்றன. 

இந்தியாவைப் பொறுத்தளவில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான முரண்பாடு உண்மையாக உள்ளபோதிலும், இது கோட்பாட்டு ரீதியான முரண்பாடல்ல. இந்நிலையில், தன்னுடன் இந்திய மாக்கடலில் உள்ள சிறிய நாடுகள் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக பிராந்தியத்திற்கு வெளியேயுள்ள சக்தி மிக்க நாடுகளுடன் தனது சிறிய அயல்நாடுகள் தொடர்புகளைப் பேணும்போது அவற்றின் விபரங்களைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என இந்திய மூலோபாய சமூகம் கருதுகிறது. 

இதன் காரணமாக, இந்தியா தனது பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இந்திய மாக்கடலில் இந்தியாவுக்கு அருகிலுள்ள சிறிய அயல்நாடுகள் தமது வர்த்தகப் பங்காளிகளைத் தெரிவு செய்வதில் இந்திய மத்திய அரசாங்கத்தின் இறைமை செல்வாக்குச் செலுத்துவதுடன், இவ்வாறான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்திய அரசின் அங்கீகாரத்தை சிறிய நாடுகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என இந்தியா எதிர்பார்க்கிறது. இந்தியாவின் மிகச் சிறிய அயல்நாடுகள் எவையும் பிராந்திய பாதுகாப்பு, இராணுவத் தலையீடுகளை மேற்கொள்வதற்கான தகைமையைக் கொண்டிருக்கவில்லை. இதனைச் செய்வதற்கான இயலுமையை இந்தியா மட்டுமே கொண்டுள்ளது. 

இந்தியாவின் சிறிய அயல்நாடுகள் தமது பூகோள - மூலோபாய நகர்வுகள், ஒழுங்குபடுத்தல்கள் மற்றும் திட்டமிடல்கள் தொடர்பாக இந்தியாவுக்கு அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதன் மூலம் இந்த நாடுகள் வேறு பிராந்திய நாடுகளை தமது அரசியல் மற்றும் மூலோபாய நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துவதை எதிர்ப்பதை இந்தியா உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 

சிறிலங்காவில் சீன நிதியுதவியுடன் அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்படுதல், மாலைதீவின் GMR விவகாரம், இந்த நாடுகளிலும் இந்தியாவின் ஏனைய தென்னாசிய அயல் நாடுகளுடனும் சீன நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் பொதுத் திட்டங்கள் போன்றன இந்திய மூலோபாய சமூகத்தை சினங்கொள்ள வைத்துள்ளது. அதாவது இந்த நாடுகள் இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் செயற்படும் போதிலும், சீனாவுடன் இவ்வாறான வர்த்தக சார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் இந்தியா விசனமடைந்துள்ளது. 

இந்த நாடுகள் சீனாவுடன் மூலோபாய மற்றும் வர்த்தக உறவைப் பேணுவதானது இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கும் இதன் மூலோபாய நலனுக்கும் பங்கம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. இந்திய மாக்கடலின் எல்லையில் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் அமைந்துள்ள சிறிலங்கா மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் சீனா தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதானது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. 

இந்தியாவின் சிறிய அயல்நாடுகளுடன் இந்தியா பிராந்திய மூலோபாய மற்றும் வரலாற்று ரீதியான பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு தென்னாசிய பாதுகாப்பு பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலமே இந்தியாவுக்கும் இதன் சிறிய அயல்நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முடியும். பிராந்திய பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு பிராந்தியத்தில் மிகப் பெரிய இராணுவப் பலத்தைக் கொண்டுள்ள இந்தியா இதற்கான செலவீனங்கள் உள்ளடங்கலாக பல்வேறு பொறுப்புக்களை ஏற்கவேண்டியிருக்கும். அத்துடன் இச்சிறிய நாடுகளின் நகர்வுகளை மீளக்கணித்துக் கொள்ள வேண்டும். 

தேவைப்படுமிடத்து பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு இந்தியா தனது இராணுவ ஆதரவுகளை வழங்கியதை கடந்த கால சில பதிவுகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 1971ல் சிறிலங்காவில் இடம்பெற்ற 'முதலாவது ஜே.வி.பி கிளர்ச்சி' முறியடிப்பின் போது இந்தியாவானது சிறிலங்காவுக்கு தனது இராணுவ உதவியை வழங்கியது. இதேபோன்று இதே ஆண்டில் பங்களாதேஸ் போருக்கும் இந்தியா தனது இராணுவ உதவிகளை வழங்கியது. 1987ல் சிறிலங்காவின் அழைப்பின் பேரில் தனது அமைதி காக்கும் படையை இந்தியா சிறிலங்காவுக்கு அனுப்பிவைத்தது. ஆனால் இது பின்னர் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது. 

1988 நவம்பர் 3ல் மாலைதீவில் ஏற்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பை கட்டுப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் தலையீடு செய்தது. இதன் பின்னர் 2004ல் சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளிலும் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போதும் இந்தியா தனது உதவிகளை வழங்கியது. இந்நிலையில் இந்தியாவானது தனது அயல்நாடுகளின் யுத்தம் மற்றும் அமைதி நடவடிக்கைகளில் அதிகம் செல்வாக்குச் செலுத்துவதில் ஆர்வமாகவும் விருப்பத்துடனும் உள்ளதையே இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. 

இவ்வாறான பிராந்திய பாதுகாப்பு பொறிமுறை ஒன்றில் பாகிஸ்தான் இணைந்து கொள்வதில் பிரச்சினையை ஏற்படுத்தலாம். இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசும் நிச்சயமற்றுள்ளது. பாகிஸ்தானுடன் பாதுகாப்பு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதென்பது இந்தியாவின் அரசியல், இராணுவ இராஜதந்திரத்தைப் பொறுத்தது. 

இந்தியாவானது தனது நாட்டின் எதிரி நாடுகள் அல்லது தன்னுடன் பங்காளியாக சேராத அரசுகளுடன் நல்லுறவைப் பேணுவதா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தே இந்தியா, தென்னாசியாவில் மேலும் தனது அதிகாரத்தை வலுப்படுத்த முடியும். இவ்வாறான நன்மை பயக்கும் சில முயற்சிகளும் நகர்வுகளும் முதலில் இந்திய தரப்பிடமிருந்து வெளிப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. 

வழிமூலம் : The Hindu By N. SATHIYA MOORTHY* 
மொழிமாற்றம் : நித்தியபாரதி 

*The writer is Director and Senior Fellow at the Chennai Chapter of the Observer Research Foundation, ORF, a multi-disciplinary Indian public-policy think-tank, headquartered in New Delhi.

 

http://www.puthinappalakai.com/view.php?20130110107573

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவால் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒழிக்க முடியவில்லை.  :blink:  காஷ்மீர் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியவில்லை.. :unsure:

 

அதேபோல், பாகிஸ்தானால் அவர்களது உள்நாட்டுத் தீவிரவாதிகளை எல்லாம் ஒழிக்க முடியவில்லை. அல் கைடாவும் இருக்கு.. :huh:

 

ஆனால் இலங்கை ஒன்றுதான் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றிகண்டது. :D ஆகவே தெற்காசியாவின் பாதுகாப்புக்கு இலங்கையே தலைமை ஏற்கவேண்டும். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.