Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்படுவாரென தெரியவருகிறது

Featured Replies

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியாக முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை இலங்கை ஜனாதிபதி நியமிப்பாரென ஜனாதிபதி செயலக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

 

main_13471.jpg

 

 

தற்போதைய தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றப் பிரேரணை இன்று மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் ஷிரானி பண்டாரநாயக்காவை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பார்.


அதனையடுத்து ஜனாதிபதி கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் சனிக்கிழமை வெளியாகுமெனவும், திங்கட்கிழமை புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படுவாரெனவும் ஜனாதிபதி செயலக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

ஆனால் மொஹான் பீரிஸ் தலைமை நீதிபதி நியமனத்தை ஏற்க மறுப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகிறது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13471

  • தொடங்கியவர்

புதிய தலைமை நீதிபதியை ஏற்கவேண்டாமென இலங்கை நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள் கேட்டுள்ளார்கள்.

 

இலங்கையின் புதிய தலைமை நீதிபதியின் நியமனத்தை ஏற்கவேண்டாமென, இலங்கை நீதிபதிகளிடம் மூத்த வழக்கறிஞர்கள் கேட்டுள்ளார்கள்.

 

ஷிரானி பண்டாரநாயக்காவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் ஜனாதிபதி புதிய தலைமை நீதிபதி தொடர்பான அறிப்பை வெளியிடுவாரெனவும், அதனை ஏற்பதில்லையெனவும் வழக்கறிஞர் சங்கம் நேற்றிரவு தீர்மானித்தது.


இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளில், ஷிரானி திலவர்த்தன தவிர்ந்த ஏனைய ஆறு நீதிபதிகளும் புதிய தலைமை நீதிபதியை ஏற்பதில்லையென முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13470

  • தொடங்கியவர்

"புதிய தலைமை நீதியரசர் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும்"

 

இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பில் வேறு ஒருவரை ஜனாதிபதி நியமித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல முடியும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகிறது.


எனவே இலங்கையின் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்காவை நீக்கிவிட்டு புதிதாக ஒருவரை அப்பதவியில் நியமிக்கும் முயற்சிகளை நாட்டின் ஜனாதிபதி கைவிட வேண்டும் என்று அது சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

கொழும்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண, புதிய தலைமை நீதிபதி ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு சட்டரீதியான அதிகாரங்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.

 

 

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கண்டன பதவிநீக்க நடைமுறை சட்டவிரோதமானது என்று நாட்டின் அதியுயர் நீதிமன்றம் முடிவுதெரிவித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை மதிக்காது புதிய தலைமை நீதிபதி ஒருவரை ஜனாதிபதி நியமித்தால், அது சட்டப்படி செல்லாது என்பது சட்டத்தரணிகள் சங்கத்தாரின் வாதம்.

ஜனாதிபதி செய்யக்கூடிய நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

அரசியல் யாப்பின் கீழ் ஜனாதிபதிக்கு எதிராகத்தான் வழக்கு தாக்கல் செய்ய முடியாதே ஒழிய ஜனாதிபதி செய்கின்ற சட்டவிரோதமான நியமனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண விளக்கம் அளித்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130114_lawyerspressmeet.shtml

ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கண்டன பதவிநீக்க நடைமுறை சட்டவிரோதமானது என்று நாட்டின் அதியுயர் நீதிமன்றம் முடிவுதெரிவித்துள்ள நிலையில், அத்தீர்ப்பை மதிக்காது புதிய தலைமை நீதிபதி ஒருவரை ஜனாதிபதி நியமித்தால், அது சட்டப்படி செல்லாது என்பது சட்டத்தரணிகள் சங்கத்தாரின் வாதம்.

சண்டே லீடர் செய்தது மாதிரியே செய்ய வேண்டியது தானே. லசந்தா, பிரட்டிரீகா ஜான்ஸ் எழுதிய ஆசிரியர் தலையங்கங்கள் எல்லாம் பொய் என்று அறிக்கைவிட்டமாதிரி, புதிய நீதியரசர் பழைய தீர்ப்புக்களை எல்லாம் பிரட்டிப்போடவேண்டியதுதானே.

 

சட்டம் தெரிந்த மோகன் பீரிசு வந்தால் உடனே நாமல் வருவது கோமாளித்தனமாக இருக்கும் என்பதால் சிராணி திலகவர்தனாதான் பதவிக்கு சரியானவர்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மொஹான் பீரிஸ்  கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் பங்குபற்றி சிங்களத்தை காப்பாற்ற முனைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.