Jump to content

சம்பூர் அகதிக்குடும்பங்கள் அரசினால் புறக்கணிப்பு - த.தே.கூட்டமைப்பு [கனடா] மறுவாழ்வு மையம் உதவுகிறது


Recommended Posts

பதியப்பட்டது

சம்பூர் அகதிக்குடும்பங்கள் அரசினால் புறக்கணிப்பு - த.தே.கூட்டமைப்பு [கனடா] மறுவாழ்வு மையம் உதவுகிறது [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 18:00 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] Sampoor.jpg

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மறுவாழ்வு [கனடா] மையத்தின் ஆதரவுடன் மூதூர் கிழக்கு பிரதேசத்தில் சம்பூர் மற்றும் கிராமங்களிலிருந்து 2006 ஏப்ரல் மாதம் சிறிலங்கா இராணுவம் நடத்திய தாக்குதலில் இடம்பெயர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1224 தமிழ் குடும்பங்களில் கட்டைப்பறிச்சான் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 400 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண உதவியாக உலர்உணவுப் பொதிகள் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டன. 

கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களான சி. தண்டாயுதபாணி, கு.நாகேஸ்வரன் மற்றும் ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் உணவுப்பொட்டலங்களை பயனாளிகளிடம் கையளித்தனர். நாகேஸ்வரன் சம்பூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச்சங்கத்தின் தலைவரும் ஆவார்.

Sampoor02.JPG

Sampoor01.JPG

Sampoor03.JPG

[கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் த. தே. கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்களும் நிவாரணப்பொதிகளை இடம்பெயர்ந்த சம்பூர் அகதிகளுக்கு வழங்குகின்றனர்.]

 போரினால் இடம்பெயர்ந்த சம்பூர் பிரதேசக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் தங்கள் சொந்தக்கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று மீளக்குடியமர இராணுவம் அனுமதி வழங்க மறுத்த நிலையில் கட்டைப்பறிச்சான, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கிளிவெட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட நலன்புரி நிலையங்களில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் உலக உணவு செயற்றிட்டத்தின் [WORLD FOOD PROGRAMME] கீழ் வழங்கப்பட்டு வந்தது. 

இராணுவம் அடையாளம் காட்டிய மாற்று இடத்தில் மீளக்குடியமருமாறு இவர்களை இராணுவமும் அரசாங்கமும் வற்புறுத்தி வந்தது. 

அதற்கு இடம்பெயர்நத மக்கள் மீளக்குடியமருவதானால் எம் பூர்வீகக் கிராமங்களில் தான் மீளக்குடியர்வோம் வேறு கிராமங்களில் மீளக்குடியமரமாட்டோம் என்று உறுதியாக இருந்ததன் காரணமாக உலக உணவு செயற்றிட்டத்தின் கீழ் இவ்வகதிக்குடும்பங்களுக்கு வழங்கி வந்த உலர் உணவு நிவாரணத்தை ஒரு ஆண்டிற்கு முன்னரே அரசாங்கம் நிறுத்தி விட்டது. 

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

ஏனைய இடங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உவு நிவாரணம் வழங்கி வரும் அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்க மறுத்துள்ளது. வெள்ளித்தினால் இடம்பெயர்ந்க மக்களுக்குத் தான் வெள்ள நிவாரணமாக உலர் உணவு நிவாரணம், மற்றும் காரணங்களால் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படமாட்டாது என்று திருகோணமலை அரசாங்க அதிபர் அறிவித்ததை அடுத்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த சம்பூர் அகதிக்குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுவாழ்வு மையம் [கனடா] வழங்கிய நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட உலருணவுப்பொதிகள் வாழ்வாதாரமும் தொழிலும் இன்றி அவதிப்படுகின்ற சம்பூர் அகதிக்குடும்பங்களுக்கு வியாழக்கிழமை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவரான சி.தண்டாயுபாணியின் தலைமையில் சென்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு குழுவினால் வழங்கப்பட்டன. ஒவ்வொரு உலருணவுப் பொதியிலும் 2000 ரூபா பெறுமதியான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

http://www.puthinappalakai.com/view.php?20130111107578

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணா, பிள்ளையான், ஆனந்தசங்கரி, டக்ளஸ் இதைக் கொஞ்சம் கவனியுங்கோ....

Posted

மறுவாழ்வு அமைப்பினரின் பணி சிறக்க பாராட்டுக்கள்.

 

Gari உங்களுடன் ஒருக்கா கதைக்க வேணும். தொடர்பு கொள்ளுங்கோ.

 

 

கருணா, பிள்ளையான், ஆனந்தசங்கரி, டக்ளஸ் இதைக் கொஞ்சம் கவனியுங்கோ....

 

 

 

ஏன் தமிழ்சிறி உவையளையெல்லாம் கூப்பிடுறியள் ? உவை அறுவடையில் மட்டும்தான் பங்கு கேட்பினம் பயிரிடும்வரை வெறும் பார்வையாளர்களாகத்தான் இருப்பினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்தால் மானப் பெரிது.

 

நன்றி

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.