Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படம் பார்த்துத் திரும்பிய பட்டதாரிப் பயிலுநர்கள்!

Featured Replies

பட்டதாரிப் பயிலுநர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டதாரிகள் இறுதியில் ஏமாற்றத்துடனும் வெறும்கையுடனும் திரும்பி வந்தனர்.

இலங்கையை ஜனநாயக நாடு ஆக்கியமை தொடர்பான விவரணப் படம் ஒன்று சுகததாஸ அரங்கில் பட்டதாரிகளுக்குக் காண்பிக்கப்பட்டது.

அவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் அங்கு எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த நிகழ்வில் 15 ஆயிரம் தமிழ்ப் பட்டதாரிகள் கலந்து கொண்டிருந்தபோதும் அங்கு அனைத்து நிகழ்வுகளும் சிங்கள மொழியிலேயே இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பட்டதாரி பயிலுநர்களாக கடந்த ஜூன் மாதம் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இவர்க ளுக்கு ஆறு மாத காலப் பயிற்சி வழங்கப்பட்டுப் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆறு மாத காலங்கள் கடந்த நிலையிலும் அவர்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் சுதந்திரப் பட்டதாரிகள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாடு கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் வைத்துப் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு மாநாட்டுக்குக் கட்டாயம் வரவேண்டும் என்று அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

அவர்கள் தமது சொந்தச் செலவிலேயே இந்த மாநாட்டுக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பட்டதாரிப் பயிலுநர்கள் அனைவரும் நேற்று குறித்த நிகழ்வுக்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் சென்றிருந்தனர்.

நிகழ்வில் 15 ஆயிரம் தமிழ்ப் பட்டதாரிப் பயிலுநர்களும் கலந்துகொண்டிருந்தனர். இருப்பினும் நிகழ்வு முழுவதும் சிங்களமயப்படுத்தப்பட்டதாகவே நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் வழங்கப்பட்ட அறிவிப்பு முதல் அனைவரது உரைகளும் சிங்கள மொழியில் மாத்திரமே இடம்பெற்றன.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன உரையாற்றுவதற்கு முன்பாக மாத்திரம், அறிவிப்பாளரினால் நிகழ்வில் 15 ஆயிரம் தமிழ்ப் பட்டதாரிகள் கலந்துகொண்டுள்ளீர்கள் கைதட்டி கரகோசம் செய்யுங்கள் என்று தமிழ் மொழியில் கூறப்பட்டது.

ஜனாதிபதியின் உரைமுதல் அனைத்து அமைச்சர்களினதும் உரைகளும் தனிச்சிங்கள மொழியிலேயே இடம்பெற்றன.

ஆங்கிலமொழிப் பெயர்ப்புக்கூட செய்யப்படவில்லை.


மேலும் நிகழ்வில் வைத்து சம்பிரதாய பூர்வமாக 3 பேருக்குப் பாராட்டுப் பத்திரம் மட்டும் வழங்கப்பட்டது.

ஏனையவர்களுக்கு அது எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அரச ஊடகங்களில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகியிருந்தன. இதனை நம்பி தங்களது சொந்தப் பணத்தைச் செலவழித்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்புக்குச் சென்ற பட்டதாரிப் பயிலுநர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ஒருநாள் நிகழ்வுக்காக தமது ஒருமாத சம்பளத்தைச் செலவிட வேண்டி ஏற்பட்டதாக நிகழ்வுக்குச் சென்று வந்த பட்டாரிகள் பலர் கவலையுடன் உதயனுக்குத் தெரிவித்தனர்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=874261761914874524

  • தொடங்கியவர்

Compulsory conference was a farce

 

15000 Tamil graduate students were left disappointed after a conference promising appointments turned out to be a film screening of Sri Lankan state propaganda, reports Uthayan.

 

Up to 50,000 graduates were told that the conference in Colombo was essential for academic appointment, although the students were expected to cover their own travel and accommodation costs.


The conference turned out to be comprised of a film detailing how Sri Lanka was restored to democracy and various speeches from ministers.

 

There was no mention of academic appointments throughout the entire conference, which was completely conducted in Sinhala, with neither translations in Tamil or English.


Speaking to Uthayan, Tamil graduates expressed their anger and disappointment at 'being tricked into' spending almost a month's wages to attend a meaningless government event.

 

http://www.tamilguardian.com/article.asp?articleid=6814

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.