Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறுமையானவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி பல்வேறு திட்டங்களை மேற்கொள்கிறார்: ஹிஸ்புல்லா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

face.jpg By L.Thev 

 

வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒழுங்கிலேயே திவிநெகும கடந்த இரண்டு வருடங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது திவிநெகும திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் தொனிப்பொருளிலான விசேட அறிவூட்டல் செயலமர்வில் தலைமையுரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் விசேட கூட்டம், இன்று புதன்கிழமை மாலை ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 10.99 வீதத்தினை உற்பத்தி செய்தாலும் அதற்கான முழு பயனையும் நமது மாவட்டம் அனுபவிப்பதில்லை. அதற்குக்காரணம் நாம் உற்பத்தினை உற்பத்தியாகவே கொழும்புக்கு அனுப்புவதாகும். அதே போன்றே பாலுற்பத்தியும், நெல் உற்பத்தி, மற்றும் மரக்கறி என்பனவுமாகும்.

மீனை மாசி, கருவாடு, ரின்களில் அடைக்கப்பட்ட மீன் என பெறுமதி சேர்க்கப்பட்டவகளாக அனுப்பும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட வேண்டும். நமது பிரதேசத்தில் ஒரேயொரு மீன்பிடித் துறைமுகத்தினை வைத்துக் கொண்டு நாம் நாட்டின் மொத்த மீன் உற்பத்தியான 40 ஆயிரம் மெற்றிக் தொன்னில் 40 ஆயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான மீனை நமது மாவட்டம் கடந்த வருடம் ப்களிப்பு செய்துள்ளது இது திறைசேரியிலிருந்து நான் பெற்றுக் கொண்ட தகவல்களாகும்.

அதே போன்று கால்நடை பிவிருத்தி அமைச்சின் தகவல்களின் படி பாலுற்பத்தில் கடந்தவருடம் பெரும் பங்கை நமது மாவட்டம் செய்திருக்கிறது.

அரிசியை நமது நாடு தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த காலங்களில் அரிசியை இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலை தற்போது மாறியிருக்கிறது. ஆனால் நமது மாவட்டம் நெல்லை நெல்லாகவே அனுப்பி வைக்கிறது. இதனை அரிசி மாவாகவோ அரிசி உற்பத்திகளாகவோ வெளி மாவட்டத்திற்கு அனுப்பும் நிலை ஏற்பட வேண்டும்.

எனவே இவ்வாறான நிலைகறில் இருந்து மாற்றங்களை கொண்டு வருவதற்கு பிரதேச செயலகங்களில் இருக்கும் பிரதேச செயலாளர் மாத்திரமோ, கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மாத்திரமல்ல சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படுவதன் மூலமே எமது நாட்டில் வறுமைக் கோட்டின் கீழு; உள்ளவர்களின் விகிதாசாரத்தினைக் குறைத்துக் கொள்ள முடியும்.

இந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவே பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியும் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒழுங்கிலேயே திவிநெகும கடந்த இரண்டு வருடங்களின் முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தற்போது திவிநெகும திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

திவிநெகும திட்டத்தின் நாட்டில் ஒரு பொருளாதார முன்னேற்றப் புரட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் புரட்சி சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் போட்டிபோட்டு நாட்டில் வறுமை நீங்கி பொருளாதார சுபீட்சம் ஏறபட வேண்டும் என்றார்.

இந்த செயலமர்வில் பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், துரைரெட்ணம், மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் கிறிஸ்ரினா, மாவட்ட திட்டமிடல் செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன், உதவி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பட்டதாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம மட்டத்திலுள்ள தலைவர்கள் கலந்துகொண்டனர்.

வறுமையற்றோர் இலங்கை விசேட கூட்டமானது, நாடு முழுவதும் இம்மாதம் 15ஆம்திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் நடத்தப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2580

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.