Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடக சுதந்திர தரவரிசையில் 163ஆவது இடத்தில் இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஊடக சுதந்திர தரவரிசையில் 163ஆவது இடத்தில் இலங்கை
வியாழக்கிழமை, 17 ஜனவரி 2013 11:56 
-ஹனீக் அஹமட்
 
ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 163 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2011 – 2012 ஆம் ஆண்டுடினை அடிப்படையாகக் வைத்து மேற்கொண்ட தரவரிசைக்கமைவாகவே இலங்கை மேற்படி இடத்தினைப் பெற்றுள்ளது. குறித்த தரவரிசை பட்டியலில் 179 நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
 
இதற்கமைய, இப்பட்டியலில் முதலாம் இடத்தைப் பிடித்து – உலகில் சிறப்பான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக பின்லாந்து இனங்காணப்பட்டுள்ளது. அதேவேளை, 179 ஆவது இடத்தில், உலகில் மிகவும் மோசமான ஊடக சுதந்திரம் நிலவும் நாடாக எதிரியா உள்ளது. 
 
ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு 2010 ஆம் ஆண்டு 178 நாடுகளைக் கொண்டு தயாரித்த பட்டியலில் இலங்கை 158 ஆவது இடத்தினையும், 2009 ஆம் ஆண்டு 162 ஆவது இடத்தினையும் பெற்றிருந்தது. 
 
கடந்த 2002ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு தயாரித்திருந்த இவ்வாறான பட்டியலில் இலங்கை 51 ஆவது இடத்தினைப் பெற்று – ஊடக சுதந்திரத்தில் முன்னேறிய நாடாகக் கருததப்பட்டது. 
 
மேற்படி 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது. மேலும், அக்காலப் பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி நடைமுறையில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57081--163-.html
 

2002 ஆம் ஆண்டு 51  ஆவது

 

2010 ஆம் ஆண்டு 162 ஆவது

 

2012 ஆம் ஆண்டு 179 ஆவது

 

2014   இல் எரிதித்திரியாவை பின் தள்ளிவிடும் சிங்களம்  :(

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.