Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் மரணித்திருக்க வேண்டும் - இயக்குனர் சேரன்

Featured Replies

நான் மரணித்திருக்க வேண்டும்

இயக்குனர் சேரன்    வெள்ளி, 18 ஜனவரி 2013 04:56
 
 

"எம் இல்லங்கள் தீக்கிரையானது
எம் குழந்தைகள் மடிந்தனர்
எம் பெண்கள் கற்பிழந்தனர்
எம் இளைஞர் சுடப்பட்டனர்
எம் தேசம் அழிக்கப்பட்டது
நாங்கள் எம் மொழியைப்
பேசியிருக்கக் கூடாது''

 

 

porum_valiyum_450.jpgஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தமிழீழத்தில் ஒரு பெரும் போர் நடந்து முடிந்தது. போரின் முடிவில் லட்சக்கணக்கானோர் அகதியாக்கப்பட்டு புலம்பெயர்ந்தனர். லட்சக்கணக்கான குழந்தைகளும், தாய்மார்களும் பெரியோரும் இறந்து போனார்கள். ஆயிரக்கணக்கான போராளிகள் செத்து மடிந்தனர். ஒரு போரினால், இவ்வளவு துயரங்கள் நடக்கும் என்பது வரலாறு நமக்களித்திருக்கின்ற படிப்பினை. ஆனால் எதற்காக இந்தப்போர் நடந்தது?

உலகம் தோன்றிய காலந்தொட்டு போர்களும் தொடர்ந்து வருகின்றன. ஆனால், இதுவரை உலகின் எப்பாகத்திலுமே நிகழாத ஒரு போர் வெறியாட்டம் தமிழீழத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. தமிழீழத் தீவின் தமிழர்கள் எதற்காகப் போராடினார்கள்? எதற்காகச் செத்து மடிந்தார்கள்? என்ற கேள்விகளுக்கு சொல்லப்படும் மிக எளிய பதில் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

சொந்தநாட்டில், சொந்த மொழியைப் பேசினார்கள் என்பதுதான் அவர்கள் துரத்தப்பட்டதற்கும், பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கும், கொலை செய்யப்பட்டதற்கும், பழிவாங்கப்பட்டதற்கு மான ஒரே காரணம். உலகின் எந்த மூலையிலும் இந்தக் காரணத்திற்காக இப்படியொரு அநீதி இழைக்கப்பட்டதில்லை.

ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கிழைக்கப்பட்ட கொடுமைகளைக்  கண்டு கண்ணீர் வடித்த, பதைபதைத்த, எதிர்ப்பை பதிவு செய்த, இன்னும் செய்து வருகிற இந்த பூகோளத்தின் அனைத்து மக்களும், தமிழீழத்தில் கண்முன்னே நடந்த அநீதியை அமைதியாக வேடிக்கை பார்த்தனர். ஈழத் தமிழர்கள் கூக்குரலெடுத்து அலறினர். இருகரங்களை நீட்டி உதவிக்கழைத்தனர். ஆனால், உலகமோ செவிகளையும், கண்களையும் இழந்து போய்க் காட்சியளித்தது.

அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணம் மட்டுந்தான் அவர்களின் அத்துணை துயரங்களுக்கும் காரணம். தமிழர்கள் அங்கு மட்டுமா வசித்தார்கள்? தமிழ்நாட்டில் வசித்த தமிழர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் உதவி செய்திருப்பார்களே? என்று இந்த உலகம் கேட்குமானால், என்னால் பதில் சொல்ல முடியும் அதிர்ச்சியடையாமல் இருந்தால்.

இந்தியப் பேரரசின் ஆட்சிக்கட்டிலிலும், தமிழகத்தின் அரசியல் களத்திலும் வீற்றிருந்த தமிழன், காட்டிக்கொடுத்தான். ஈழத்தமிழர்கள் செத்துமடிய தன்னாலான உதவிகளைச் செய்தான். அங்கு தமிழீழம் வீழ இங்கே தலைவர்கள் வாழ்ந்தனர். யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தமிழீழத்தின் இறுதிக்கட்டப் போரில் தமிழகத்தில் வாழ்ந்த அத்துணை தமிழர்களும் கோழைகளே. நான் உள்பட.

சமகாலத்தில் நடந்த இந்த அக்கிரமத்தை இந்தியாவின் மற்ற சகோதர இனத்தவர்களோ, உலகின் மற்ற பாகங்களிலுள்ள யாருமோ தெளிவாக அறியவில்லை. ஆதலால், அதைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். ஏனெனில், இன்னொரு தோல்வியை தமிழினம் சந்திக்கும் வரலாறு எழுதப்படாமல் இருப்பதற்காக.

இதைப் பதிவு செய்திருக்கும் புத்தகம்தான் "போரும் வலியும்' இது எழுத வேண்டிய புத்தகம் அல்ல. படிக்க வேண்டிய புத்தகமும் அல்ல. இந்தப் புத்தகம் நெடுகிலும் வழிந்து கிடக்கும் துயரங்கள் இன்னொரு இனத்துக்கோ, இன்னொரு நாட்டு மக்களுக்கோ நிகழாமல் இருக்கவே நினைக்கிறேன். என் இயலாமைகளையும், எனக்கான அவமானங்களையும் சொல்லும் இந்தப் புத்தகம், என்னை என் கண் முன்னே நிற்கச் செய்து ஒரு கேள்வி கேட்டது. "நீ யார்?' என்று! அதற்கு, "நான் ஒரு தமிழன்' என்றேன். "இனி அப்படிச் சொல்லாதே' என்றது மனசாட்சி.

போர் நிகழக்கூடாது எங்குமே என்பதுதான் என் எண்ணம். போரும் அதற்கான வலிகளும், இழப்புகளும் சொல்லில் அடங்காதவை. மேலும், எதற்காகப் போர் நடக்கிறது என்பதை பொறுத்தே போர் பற்றி நாம் முடிவு செய்ய முடியும். ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர் என்றால் அது தேவையற்றது. தன் எல்லைகளை விரிவாக்க விரும்பும் தலைவர்களின் சுயநலமும், பதவி போதைகளும் பல லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கி தன் எல்லைகளை அதிகரிக்கும் அகம்பாவம் என்பேன்.

ஆனால் இந்தப் புத்தகம் குறிப்பிடும் போர் என்பது எந்த அயல் நாட்டோருக்கும் இல்லை. தன் சொந்த இடத்தில், தன் இனம் அழிவதைக் கண்டு, அடக்குமுறைகளுக்கு எதிராக அந்த இனம் எழுந்தபோது இருக்க இடம் இன்றி, வாழ சொந்த நாடின்றி, விரட்டப்படுவதைத் தடுக்க ஒரு இனம் தன்னைத்தானே போராடி அழித்துக்கொண்ட போர் அது.

இப்பெருமை கொண்ட தமிழினத்தின்... ஈழத் தமிழினத்தின் கிழித்து எறியப்பட்ட வாழ்க்கை பக்கங்களில் ஒரு சில இரத்தக் கறை படிந்த காகிதங்கள் தான் இவை. இன்னும் சொல்லப்படாத, சொல்ல முடியாத, மறைக்கப்பட்ட பக்கங்கள் ஏராளம்.

அதை நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. இனி என் கண்களில் இருந்து வடிவதற்கு ஏதுமில்லை. இது நாம் படிக்க வேண்டிய புத்தகம் அல்ல. இதுபோல எத்தனை புத்தகங்கள் வாசித்தாலும், நமக்கு எந்த சூடு சொரணையும் வரப்போவதில்லை. எனவே, இது நமக்கான புத்தகம் என்று நான் சொல்ல மாட்டேன். இதை ஆங்கிலம் மற்றும் ஜெர்மானிய, ஃப்ரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்பதே என் விருப்பம். ஒரு இனத்தின் வலிமையையும், கடைசிவரை தனது உயிர்காக்க, உடமை காக்க, இருப்பிடமும், சொந்த பூமியும் காக்க எப்படி ஒரு இனம் போராடியது என்பதை இந்த உலகம் அறிய வேண்டும்.

முதலில் இது புலிகளின் வாழ்க்கைக் கதையைச் சொல்லவில்லை. அவர்கள் போராளிகள். இலங்கை யுத்தங்களின் நடுவே சிக்கிக்கொண்டு, கொடூரமான, கூறுவதற்கு வார்த்தைகளின்றி எந்த மொழிக்காரர்களின், எந்த நாட்டுக்காரர்களின் ஆதரவுக் கரமும் நீளாததால், தன் கண்முன்னே தன் இன மக்கள் அழிந்த கதையைத்தான் ஒரு துர்பாக்கியசாலி எழுதியிருக்கிறார்.

இதை வாசித்தபோது, எனக்கேற்பட்ட உளச்சோர்வும், துயரமும், ஆற்றாத கண்ணீரும் எழுத்தில் அடங்காதவை. சொல்லில் வடிக்க முடியாத அத்துயரில் நெக்குருகிப் போனேன். நான் ஈழ மண்ணில் ஏதோ ஓர் இடத்தில் மரணித்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
 
- இயக்குனர் சேரன் ( dircheran@gmail.com)

 

போரும் வலியும்

ஆசிரியர் - சாவித்திரி அத்துவிதானந்தன்

வெளியீடு: சேரன் நூலகம்

9A, சிவசைலம் தெரு, ஹபிபுல்லா சாலை,

தியாகராய நகர், சென்னை - 17

பக்கம் - 216

விலை ரூ.150

 

( 'போரும் வலியும்' புத்தகம், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த  ஜனவரி 11, 2013 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் 36 வது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பகம், தமிழ்மண் பதிப்பகம், தமிழ்க்குளம் பதிப்பகம், பாதை நூலகம் மற்றும் தாய்மடித் தமிழ்ச்சங்கம் ஆகிய அரங்குகளில் கிடைக்கும்.)

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22672:2013-01-17-23-30-46&catid=4:reviews&Itemid=267

 

http://www.thehindu.com/life-and-style/metroplus/another-creative-chapter/article4304395.ece?homepage=true

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=114765

Edited by மகம்

எல்லோரும் மரணித்து விட்டால் சிங்களவனுக்கு சிக்கல்கள் இல்லை.

செயல்பட வேண்டிய நேரத்தில் வீதியில் இறங்கி போராட வீரமில்லை. இப்பொழுது வார்த்தைகளில்  கனலை கக்கி யாருக்கு என்ன லாபம் ??

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் மரணித்து விட்டால் சிங்களவனுக்கு சிக்கல்கள் இல்லை.

செயல்பட வேண்டிய நேரத்தில் வீதியில் இறங்கி போராட வீரமில்லை. இப்பொழுது வார்த்தைகளில்  கனலை கக்கி யாருக்கு என்ன லாபம் ??

 

சேரன் வீதியில் இறங்கியவர்தான். முத்துக்குமாரின் தியாக ஊர்வலத்தில் முக்கிய பங்கு கொண்டவர் சேரன். ஆனால் அந்த ஊர்வலத்தை திசைதிருப்பி மக்கள் நடமாட்டமில்லாத பகுதி வழியாகச் சென்று மக்கள் எழுச்சியை மழுங்கடித்தவர் திருமாவளவன். அதன்பின்னர் கொஞ்சம் ஒதுங்கிவிட்டார் சேரன்.

கேள்விப்பட்ட விடயமாக இருப்பினும் தகுந்த நேரத்தில் சுட்டி காட்டியமைக்கு நன்றி இசை.

.

இதை எழுதியபின்புதான் யோசித்தேன். அடுத்தவரை குறை  கூற எனக்கு என்ன அருகதை உள்ளது என்று !!  :(

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • தொடங்கியவர்

இயக்குனர் சேரன் தமிழ்த்தேசியஉணர்வு மிக்கவரென முன்பே அறியப்பட்டவர். அத்தகையவர் தாமாகவே முன்வந்து " போரும் வலியும் " என்ற நூலினை
வெளியிட்டமை மிகுந்த பாராட்டுக்குரியது.முள்ளிவாய்க்கால் பேரழிவுபற்றிய‌ நேரடி அனுபவ‌ங்களை ஆவணப்படுத்தும் சகோதரியின் நூல் என்பதினால் நாம்
அவருக்கு நன்றிசொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.பிறமொழிகளிலும் அவர் இந்த நூலினை வெளியிட இருப்பது தமிழினஅழிப்புப்பற்றிய விழிப்புணர்வு
வேறினமக்களிடையேயும் ஏற்பட வழிவகுக்கும்.

கருத்துகளைக் குண்டுகளால் துளைக்கமுடியாது;அதாவது ஆயுதங்களால் அழித்துவிடமுடியாது.அதனால் மக்களிடையே அவற்றை விதைத்தல், ‍
பரப்புதல், மிகஅவசிய‌மானது.மக்களவைக்கான‌ 2014தேர்தல் வருவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் பரந்துபட்ட அரசியல்விழிப்புணர்வை ஏற்படுத்தி
அதனைக் கொதிநிலையில் வைத்திருத்தல் தமிழகத்தமிழர்களினதும் புலம்பெயர்தமிழர்களினதும் கூட்டான பணியாகும்.எல்லாவிடயங்களையும் குறுகிய‌
சுயநல பூகோளஅரசியலாகப் பார்க்கும் இந்த உலகில்  "தொப்புள்கொடி உறவுகள்" என்ற எண்ணத்துடன் ஈழத்தமிழர்க்காக உயிர்த்தியாகம்செய்த‌
முத்துக்குமார் முதலான தமிழ்நாட்டுச் சகோதரர்களை நெஞ்சில்நினைந்து இத்தகைய நற்பணிகளில் ஒன்றுபட்டு உழைப்போம்.

  • 3 weeks later...

சாவித்திரி அத்துவிதானந்தனின் போரும் வலியும்..

 

நூல் பற்றிய ஒரு பொதுப்பார்வை :
நூலின் ஆசிரியர் சாவித்திரி அத்துவிதானந்தன் தமிழீழப் போர்பற்றிய பல்வேறு ஆக்கங்களை எழுதியவர், போருக்குள் வாழ்ந்தவர், அதுபற்றி துல்லியமாக அறிந்தவர், அதற்கான அத்தனை ஆகுதிகளையும் கொடுத்தவர், பொய், போலிமை எதுவுமற்ற நோக்குடன் படைப்பை வெளிக் கொணர்ந்துள்ளார்.


மாவீரனாகிவிட்ட தன் செல்வத்தின் பெயரை சொல்ல முடியாது தவிக்கும் தந்தை ஒருவருடைய கதையை ஓரிடத்தில் எழுதியுள்ளார், அந்த உணர்வுகளில் அவருடைய இதயத்தை மறைக்க அவரால் முடியவில்லை.

 

நூலின் அரைப்பங்கு முள்ளிவாய்க்கால் அவலங்களையும், மிகுதி அரைப்பங்கு யூலைக்கலவரம், கிருஷாந்தி கொலை, இந்திய இராணுவத்தின் படுகொலை, நவாலி தேவாலய குண்டு வீச்சு என்று மறக்க முடியாத வலிகளின் மீள் பதிவாக இருக்கிறது.

 

நூலுக்கு முகவுரை எழுதுவதற்காக அதைப் படித்த இயக்குநர் சேரன், மனம் கலங்கி தானே ஒரு நூலகத்தை உருவாக்கி, சேரன் நூலகம் என்ற பெயரில் இந்த நூலை வெளியிட்டுள்ளார், சமீபத்தில் ஊடகங்களில் இதுபற்றி நிறைய அறிந்துள்ளோம்.

 

நூலில் உள்ளவை அத்தனையும் சத்தியமான உண்மைகள், அவை சிறுகதை வடிவமாக தரப்படுகிறது, ஆனால் சிறுகதைகளை அங்கு காணமுடியவில்லை.. சிறுகதை என்று ஆடையிட்டாலும் உண்மை தன்னை மறைக்க விரும்பாது வீரியத்துடன் தரிசனமாகிறது.

 

http://www.alaikal.com/news/?p=122004

நூலின் சிறப்புக்கள் :


எழுதாமலே எடுத்த ஏற்றம்
நூலைத் திறந்தவுடனேயே தலைவர் பிரபாகரனின் படமும், இரண்டு பக்கங்கள் ….. அவருடைய முன்னுரையை எதிர்பார்த்து, எதுவுமே எழுதப்படாத வெற்றுத் தாள்களாக விடப்பட்டிருக்கும்..

 

அவர் வெளிவரும்போது அந்த முகவுரையை எழுத வேண்டும் என்ற விருப்பம்..

 

இதுவரை எவருடைய மூளையிலும் உதிக்காத அற்புதமான புதிய சிந்தனை.. அண்ணன் வருவானென்று சிம்மாசனத்தில் இருக்காமல் அதை வெற்றிடமாக வைத்து அதன் கீழ் இருந்து 14 வருடங்கள் ஆட்சி செய்த பரதனின் சகோதர பாசத்தை அந்த இரண்டு பக்கங்களும் எழுதாமலே காட்டிவிடுகின்றன.


” கம்பராமாயணத்தை தீயிட்டு கொழுத்துங்கள்..! ” என்று பேசிய பேரறிஞர் அண்ணாவே பரதனின் இதே கொள்கையை பின்பற்றி தி.மு.க கட்சிக் கூட்டங்களில் போடப்படும் முதல் ஆசனத்தை தந்தை பெரியாருக்காக எப்போதும் வெற்றிடமாக வைத்து, மேடை போட்டார் என்பதை நினைத்தால் இந்தத் தத்துவத்தின் பெருமையும், வலிமையும் புரியும்.

 

எரிப்போரையும், ஏற்றித் துதிப்போரையும் வேறுபாடின்றி கவரும் இந்த முதல் மரியாதைத் தத்துவம் தமிழால் முடியாது, எழுத்தின்றி வெளியாக நிற்கின்றது, ” சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..” என்ற கவிஞர் வரிகள் துடிக்கின்றன.

 

” பிரபாகரன் முருகனின் அவதாரம் அவர் கடமை முடிக்காமல் இறக்கமாட்டார் வருவார்..” என்று திருமுருக கிருபானந்தவாரியார் சொன்னதை இயக்குநர் வ. கௌதமன் கோடிட்டுக்காட்டி அந்த இடத்திற்கு மேலும் புது வலு கொடுத்துள்ளார்.

 

 



உயிரும் கொடுக்க வந்த சேரன்
புத்தகத்தைப் படித்தபோது, ” நீ யார்..? ” என்று மனச்சாட்சி கேட்டது..


” நான் தமிழன் என்றேன்..”

 

” இனி அப்படி சொல்லாதே..! ” என்றது.. என்று கூறிய சேரன் ” நான் மரணித்திருக்கலாம்..! ” என்ற தலைப்பில் எழுதிய முகவுரையே புத்தகத்தின் உரைகல்..

 

படித்த ஒருவர் இறந்திருக்கலாம் என்று கூறுவது கலம்பக இலக்கியம் சார்ந்தது, நந்திக்கலம்பகத்தின் பாடல்களை கேட்பதற்காகவே எதிரிகளின் சதி என்று தெரிந்தும், ஈம விறகில் படுத்து உயிர் விட்ட நந்திவர்மன் தமிழ் இலக்கியத்திற்கு தந்த உயர்வான இடம் அது..
தமிழுக்காக அன்று புகழாகி, புகையான நந்திவர்மனை அறிந்தாரோ இல்லையோ சேரனின் வரிகள்.. அழியாப் புகழ் நந்திக்கலம்பகம் போன்ற புகழை ஆரம்பத்திலேயே நூலுக்குக் கொடுத்துவிடுகிறது.

 

 

நாம் அறியாத செய்திகள்..


அன்று அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளாகிய செவ்விந்தியர் அழித்து, எரிக்கப்பட்டு அமெரிக்கா என்ற நாடே சூறையாடப்பட்டது போலவே வன்னியில் நடைபெற்ற வஞ்சகப் போரில் தமீழமும் சூறையாடப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றில் அடுக்கும் வாதங்கள் போல அத்தனை படைப்புக்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அடுக்கிச் செல்கின்றன.

 


அதிர்ச்சி 01
வவுனியாவில் கைது செய்யப்படுகின்ற இளைஞர்கள் கொன்று, உடல்கள் கீறிக் கிழிக்கப்பட்டு, சிறு நீரகங்கள், கண்கள் போன்றவை களவாடப்படுகின்ற காட்சியை கண்ட பாதிரியாரின் கதை ” ஐயோ..! ” என்று அலற வைக்கிறது..

 

அதிர்ச்சி 02
நோயாளியான இசைப்பிரியா வவுனியா முகாமிற்கு கொண்டு வரப்பட்ட பின்புதான் பாலியல் கொடுமை செய்த கொல்லப்பட்டாள் என்ற செய்தி, அவள் இறப்பதற்கு முன் தொலைபேசியில் உரையாடிய செய்தி, பாலியல் கொடுமை செய்த சிங்கள மிருகங்களுடன் அவள் கடைசிவரை போராடினாள் என்ற தகவல்.. சமாதானம் பேசப்போன எரிக் சோல்கெய்ம் என்பவன் மீது தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்துகிறது.

 


அதிர்ச்சி 03
ஊடகவியலாளன் சத்தியமூர்த்தி போர்க்களத்தில் நின்று உயிர் கொடுத்து வன்னியின் அவலங்களை உலகின் முன் கொண்டுவந்த வீரமும், செத்து மடிந்தாலும் சிரிப்பு குலையாது கிடந்த அவன் ஆளுமையும் .. ” ஐயோ இப்படி ஓர் ஊடகவியலாளனை கொன்றுவிட்டீர்களே பாவிகளே..! ” என்ற அதிர்ச்சி மனமெங்கும் பரவி விறைக்க வைக்கிறது..

 


அதிர்ச்சி 04
முள்ளுக்கம்பிகாளால் 25 பெற்றோரை மரத்தில் சுற்றிக்கட்டி, பிள்ளைகளை தனியாகப் பிரித்து கொல்ல நின்ற சிங்கள இனவாதத்தின் புகைப்படம்.. ” டே..நீயும் மனிதனா..?” என்று ஐ.நா செயலரான தென்கெரியன் பான் கி மூனைப்பார்த்து நூலாசிரியர் எழுப்பும் போர்க்குரலானது, உலகத்தின் சுவர்களில் மோதிச் சிதறுகிறது.. “அவன் அந்தப் பதவிக்கே தகுதி இல்லாதவன் மனித குலத்தின் துரோகி..! ” என்கிறபோது மனதில் பாலாறு பாய்கிறது..

 


அதிர்ச்சி 05
ஒதியமலையில் தமிழ் பேசி, அப்பாவிகளை ஏமாற்றி அழைத்துச் சென்று, கொன்று நடாத்திய அடாவடித்தனம்.. தென்னமரவாடி ஜனகபுரமாகிய அவலம் யாவும்.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளாக இறங்குகின்றன..


இதன் பின் யூலைக்கலவர நெருப்பு, நவாலித்தேவாலயம், கிருஷாந்தி, மோட்டர் சைக்கிளுடன் புதைக்கப்பட்ட சதாசிவ குருக்கள் என்று நாம் முன்னரே அறிந்த சம்பவங்கள் ஆசிரியரின் பார்வையில் புத்துருப் பெற்று வருகின்றன.. இப்படி ஒவ்வொரு பக்கமும் அதிர்ச்சியாக இருக்கிறது.. பணம் கொடுத்து வாங்கி படித்து உணர வேண்டும்..

 

நூலின் மீதான பறவைப் பார்வை


சம்பவங்கள் அனைத்தையும் ஒன்றாக்கி நோக்கினால் அதன் உரிப்பொருளான உள்ளோட்டம் சிங்கள இனவாதத்தின் சேற்று முடை நாற்றமடிக்கும் வக்கிர “சைக்கோபாட்..!” மனம்தான்.

 

அல்பிரட் ஹிச்சொக் எழுதிய சைக்கோவில் வரும் ஒரு கொலையாளி அன்று முழு உலகையும் உறைய வைத்தான் ஆனால் சிறீலங்காவில் மில்லியன் கணக்கில் சூழ்ந்து நிற்கும் சைக்கோ சிங்கள இராணுவம், சைக்கோ அரசியல்வாதிகள், சைக்கோ புத்தமதகுருக்கள், சைக்கோ இன வெறி கொண்ட படிப்பறிவு குன்றிய சிங்கள வெகுஜனம், காட்டிக்கொடுக்கும் சைக்கோ தமிழ்க் கூலிகளாகிய ஒட்டுமொத்த சைக்கோக்களையும் ஒரு தீவுக்குள் விட்டு, நாற்புறமும் கடலால் சூழ வைத்து, அந்தச் சிறைக்குள் அப்பாவி தமிழரை சிறை வைத்தால் எப்படி ஒழுகும் இரத்தம்.. அது ஆறாகப் பாய்கிறது. அந்த இரத்த ஆற்றில் சிறு தூரிகையால் தொட்டு வரையப்பட்ட இரத்த ஓவியமமே இந்தப் போரும் வலியும்.

 

மேலே பருந்து, கீழே நாகம், மறைவில் அம்புடன் குறி வைக்கும் வேடன், தனது குஞ்சுகளுடன் போக வழி தெரியாது மரக்கொப்பில் இருக்கவும் முடியாது பறக்கவும் முடியாது தடுமாறிய புறாவின் அவல நிலையே முட்டைக்குள் கலங்கி அழிகின்ற கருப்போல வன்னிக்குள் கலங்கி அழிகிறது.. மேற்கண்ட சீவகசிந்தாமணி கதையில் புறா தப்பியது, வன்னியிலோ அது குஞ்சுகளுடன் செத்தது.. அந்தோ முட்டைகளைக்கூட சிங்கள நாகம் குடித்தது..

 

இந்தச் சைக்கோ போரில் ஈடுபட்ட சிறீலங்காவுடன் இந்தியா, நோர்வே, சர்வதேச சமுதாயம், ஐ.நா அனைவருமே ஒன்றாகக் கை கொடுத்தது எப்படி.. இவர்களும் சைக்கோ மிருகங்களா..?

 

ஆம்.. வேறென்ன..? நூலின் உறுதியான வாதம் அதுதான்.

 

நாகரிக உலகத்தின் உளவியல் இத்தனை கேவலமானதா..? மனிதன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது…!!
நூலை மூடிக்கொள்கிறேன்…

கண்களை மூடி ஒரு சிந்தனை..

 

எத்தனை துயரமிருந்தாலும் வாழ்வில் சிறிய நம்பிக்கை வைக்க வேண்டும்.. காரணம் இந்த உலகில் பிரபாகரன் என்று ஒருவனும், அவனோடு போராடிய தம்பியரும், இறந்து மடிந்த ஈழத் தமிழரும், இருந்ததும், இருப்பதும் இந்தப் பூமிதான்..

 

சேற்றில்தானே செந்தாமரை மலரும்..

 

அந்த செந்தாமரையில் தானே கலைமகள் உறைகிறாள்..

 

போரும் வலியும் பாகம் 2 ல் அந்தப் பெருமையை பதிவு செய்ய வேண்டும்..

 

இந்த பூமித்தாய் பெற்ற புதல்வர்களில் ஒன்றுகூட உருப்படி இல்லை என்பதை வன்னிப்போர் நிறுவிவிட்டது.. ஆனால் அவளுடைய ஒரேயொரு உருப்படியான பிள்ளை மானமுள்ள ஈழத் தமழினம் மட்டுமே என்ற பெருமையை எழுதாவிட்டாலும், நூல் அந்தப் பெருமையை மலர்வித்து நிற்கிறது..

 

இதுதான் இந்தப் போரும் வலியும் உள்ளத்தில் தரும் ஒரேயொரு ஆனந்தம்..

 

இது சுதந்திர தமிழ் ஈழம் இருப்பதைவிட நமக்கு பெரிய சுகம்.. தலை நிமிர்வு, தன்மானம்..

 

நூல் உருவாக்கம், அட்டைப்பட வடிவமைப்பு, வர்ணத் தேர்வு, பைன்டிங் யாவற்றிலும் சேரன் படங்கள் போல செயல் நேர்த்தி தெரிகிறது.


கி.செ.துரை 08.02.2013

 

http://www.alaikal.com/news/?p=122004

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.