Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலிருந்து முக்கியஸ்தர்கள் பலர் வெளிநடப்பு

Featured Replies

 
சனிக்கிழமை, 19 ஜனவரி 2013 21:57 
FAYIS.jpg-ஹனீக் அஹமட்

தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்திலிருந்து அந்தக் கட்சியின் உப தலைவரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இன்று காலை வெளிநடப்புச் செய்துள்ளனர்.

அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியானது திருகோணமலை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கட்சியின் உயர்பீடத்தில் திருகோணமலை மாவட்டப்  பிரதிநிதிகள் யாரும் அடையாளப்படுத்தப்படவில்லை எனவும் தெரிவித்தே அவர் வெளிநடப்புச் செய்துள்ளார். 

இதன்போது தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கிண்ணியா நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் நிஃமதுல்லா ஆகியோருடன் திருகோணமலை மாவட்டத்தின் தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரும் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸுடன் இணைந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்கரைப்பற்று கடற்கரை பங்களாவில் இன்று சனிக்கிழமை காலை அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே இவ் வெளிநடப்பு இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில், வெளிநடப்பில் ஈடுபட்ட தேசிய காங்கிரஸின் உப தலைவரும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸை தொடர்பு கொண்டு கேட்டபோது – தான் வெளிநடப்புச் செய்தமையினை உறுதிப்படுத்தினார். 

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்;

இரண்டு நாட்களுக்கு முன்னர் தேசிய காங்கிரஸின் அமைப்பாளரும், கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்றைய தினம் (19 ஆம் திகதி) தேசிய காங்கிரஸின் வருடாந்த மாநாடு அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளதாகவும், காலை 10 மணிக்கு கட்சியின் உயர்பீடக் கூட்டம் இடம்பெறும் என்றும் கூறி - இரண்டு நிகழ்வுகளிலும் என்னைக் கலந்து கொள்ளுமாறு அழைத்தார்.  

அதற்கிணங்க இன்று காலை அக்கரைப்பற்று கடற்கரை பங்களாவுக்குச் சென்றிருந்தேன். மேலே ஒரு கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அமைச்சர் அதாவுல்லா என்னை கீழே காத்திருக்குமாறு கூறினார். பின்னர், என்னை அடையாளம் கண்டுகொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்னை மேலே செல்லுமாறு கூறினார்கள். நான் சென்றபோது, அங்கு உயர்பீடக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் திருகோணமலையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் இருக்கவில்லை.

இதைக் கண்ணுற்ற நான் - உயர்பீடக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எவரும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டினேன். எமது மாவட்டத்தைப் புறக்கணிக்கும் வகையில் நடந்து கொள்ளும் கட்சியில் தொடர்ந்தும் இருப்பதில் என்ன அர்த்தம் என்று கேட்டு விட்டு வெளிநடப்புச் செய்தேன். என்னுடன் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கிண்ணியா நகரசபை உறுப்பினர் பாஜில் குத்தூஸ், கிண்ணியா பிரதேசசபை உறுப்பினர் நிஃமதுல்லா ஆகியோரும் கட்சியின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய ஆதரவாளர்களும் வெளியேறினர். 

நான் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவர். திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியினை அறிமுகம் செய்தவர்களில் நான் முக்கியமானவர். ஆனால், தேசிய காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தை கணக்கில் எடுக்காமல் தொடர்ந்தும் புறக்கணித்தே வருகிறது. உதாரணமாக, கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் அமைச்சில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. 

தேசிய காங்கிரஸ் கட்சியின் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். என்னுடைய தனிப்பட்ட நலனுக்ககாக கட்சியில் இருந்து கொண்டு – வாக்களித்த மக்களை ஏமாற்ற முடியாது. 

எனவே, திருகோணமலை மாவட்டத்திலுள்ள எமது ஆதரவாளர்களை நாளைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து – எதிர்காலத்தில் நாம் எத்தகைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று கலந்தாலோசிக்கவுள்ளோம்' என்றார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.