Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, கனடாவின் செயற்பாட்டால் கேள்விக்குறி!

Featured Replies

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு, கனடாவின் செயற்பாட்டால் கேள்விக்குறி! 

[sunday, 2013-01-20 08:05:57]
canada-seithy-20120923-150.jpg

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்தமுடியுமா? என்பது தொடர்பில் ஆராயுமாறு கனடா அந்த அமைப்பின் அமைச்சரவை நடவடிக்கை குழுவிடம் கோரிக்கை விடுக்க உத்தேசித்துள்ளது. இதன் அடிப்படையில் கனடா அறிக்கை ஒன்றை குறித்த நடவடிக்கை குழுவுக்கு அனுப்பவுள்ளதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீது கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணையை அடுத்தே இந்த நடவடிக்கையை கனடா மேற்கொண்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் 15 - 17 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது.

இந்தநிலையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை இலங்கையில் நடத்தமுடியுமா? என்பதை ஆராயுமாறு அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் கனடா கடிதங்கள் மூலம் கோரிக்கையும் விடுத்துள்ளது. இதன் அடுத்த கட்டமாகவே கனடா பொதுநலவாய அமைச்சரவை நடவடிக்கை குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

கனடாவின் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கைக்குழு விசாரணைகளை நடத்தி இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தமுடியாது என்றுக்கூறுமானால் அது இலங்கைக்கு பாரிய பாதிப்பை கொண்டு வரும். அத்துடன் விசாரணை முடியும் வரை பொதுநலவாய நாடுகளின் கூட்டங்களில் இலங்கைக்கு வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதன்போது அந்த அமைப்பின் செயலாளர் கமலேஸ் சர்மாவுக்கும், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டை ரத்துச்செய்வதை விட வேறு வழியில்லாமல் போய்விடும் என்று லண்டனில் இருந்து இலங்கையின் ஆங்கில பத்திரிகைக்கு செய்தி வழங்கப்பட்டுள்ளது.

http://www.seithy.com/listAllNews.php?newsID=74221&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.