Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிந்துக்களின் சாதிவெறிக்கு வெள்ளைக்காரன் தான் காரணம் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்துக்களின் சாதிவெறிக்கு வெள்ளைக்காரன் தான் காரணம் ?

 
Mask6.jpg
 
மதங்களைத் தாண்டி எழுத நினைத்தாலும் பலதடவை முடிவதில்லை, தினமும் மதங்களின் பெயரால் சொல்லப்படும் பரப்புரைகளைக் கேட்கும் போது சிரிப்பதா, கோப்படுவதா எனத் தெரியவில்லை. ஹிந்து அடிப்படைவாதிகளால் கூட பலமுறை சாதி முறை சரியான ஒன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவற்றை களைவதற்கு முன்வருவதில் தயக்கம் காட்டியே வருகின்றார்கள். பலர் நமது பாரம்பரியத்தில் பெருமிதம் உடையவர்களாக இருக்கின்றார்கள், சாதியத்தையும் அதன் அங்கமாகவே பார்க்கின்றார்கள். ஆனால் அண்மையக் காலமாக எழுந்துள்ள புதிய ஹிந்து அறிவுஜீவிகள் பலர் இந்தியாவின் சாதியத்துக்கு முகாலயர்களும், பிரித்தானியர்களும் தான் காரணம் என்ற புதுவித விளக்கங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்கள். ஹிந்துக்களிடம் இருக்கும் சாதிய வெறித்தனத்தை மறைக்க புதுவித மறுப்புவாதங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றில் ஒன்றே இந்த சாதிய வெறித்தனத்துக்கு முகாலயர்களின் கடும் போக்கு ஆட்சியும், பிரித்தானியர்களின் காலனியாதிக்கமும் என்று புளுகத் தொடங்கியுள்ளனர். 
 
ஆதி சங்கரரின் காலத்துக்கு முன் சாதியம் இல்லை எனவும் ஒரு சிலர் கூறிவருகின்றனர். அது மட்டுமில்லாமல் முகாலயர்கள், பிரித்தானியர்களின் ஆட்சியால் இந்தியாவில் நிகழவிருந்த சமூக மறுமலர்ச்சி தடுக்கப்பட்டுவிட்டது எனவும் கூறிவருகின்றனர். இதேக் கருத்தினை ஐக்கிய முடியரசின் ( UK ) ஹிந்து கவுன்சிலும் பரப்பி வருகின்றது. 
 
ஆனால் உண்மையை ஆராய்வோமானால் ஆதி சங்கரரின் காலத்துக்கு முன்னரே இந்தியாவில் சாதிய அடக்குமுறைகள் இருந்தே வந்துள்ளன. அது ஆதி சங்கரர் காலத்துக்கு பின்னர் இருந்தவைப் போலவே அதற்கு முன்னரும் தனதுக் கோர முகத்தை வெளிக்காட்டியே இருந்து வந்தது. ஹிந்து பாரம்பரிய தற்பெருமைவாதிகளால் இன்று பலியாடாக ஆக்கப்பட்டுள்ளவர்கள் பிரித்தானியர்களும், முகாலயர்களும் தான். 
 
இந்திய வரலாறுகளின் ஆய்வு உலக வரலாறு ஆய்வுகளை ஒப்பிடும் போது மந்த நிலையிலேயே இருக்கின்ற போதும், நமக்குக் கிடைத்துள்ள இலக்கிய, கலை மற்றும் புராதன ஆவணங்கள் ஊடாக நமது வரலாற்றை ஓரளவு சரியாக கண்டறிய முடிகின்றது. இவற்றின் ஊடாகவே இந்திய சாதியத்தின் வரலாறுகளையும் நம்மால் அறிந்துக் கொள்ள முடிகின்றது. குறிப்பாக ஆய்வாளர் தாமோதர் தர்மானந்த கோசம்பியின் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோமானால் இந்திய வரலாற்றின் தொடர்ச்சியை வரையறை செய்துக் கொள்ள முடிகின்றது. குறிப்பாக இந்தியாவின் முழுமையான வரலாறு அலெக்சாண்டரின் படையெடுப்புக் காலத்தில் தொடங்கி ஆதி சங்கரரின் காலம் வரையிலான இடைப் பகுதியை ஆய்வுகளுக்காக நாம் பயன்படுத்த முடியும்.
 
ஆதி சங்கரரின் காலம் மிக முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் அந்தக் காலத்திலேயே இந்தியாவில் பௌத்தம் முழுமையாக அழியத் தொடங்குகின்றது. அதேக் காலக் கட்டத்தில் தான் ஹிந்து மதம் இந்தியாவில் தனது பாதங்களை அழுத்தமாக்கிக் கொள்கின்றது. இந்தக் இடைக் காலக் கட்டத்தில் இந்தியக் கண்டத்தில் ஆட்சி செய்த மன்னராட்சிகள் எவை எவை எனப் பார்ப்போமானால். அவைகள்
 
நந்தர்கள், மௌரியர்கள், சுங்கர்கள், குசானர்கள், சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், குப்தர்கள், சதாவாகனர்கள், சாளுக்கியர்கள், ஹர்சவர்தனர்கள், களப்பிரர்கள்,  பல்லவர்கள் ஆவார்கள். 
 
நந்தர்களுக்கு முந்தைய மகாஜனபாதர்களின் ஆட்சியில் சதுர்வர்ணம் எனப்படும் நான்கு வகைப்படுத்தப்பட்ட சாதிய முறைகள் சமூகத்தில் நிலைநிறுத்தப்பட்டு இருந்தது. நந்தர்களின் ஆட்சியைத் தொடங்கிய மகாபத்ம நந்தர் இழிகுலத்தில் பிறந்தவராகவும், ஆட்சி செய்யும் உரிமையற்றவராகவும் அக்காலத்தில் கூறப்பட்டு வந்தது. இவற்றை அக்காலத்தில் எழுந்த வேத புராணங்களிலும், கிரேக்கர்களின் குறிப்புகளிலும் தெளிவாகவே சொல்லப்பட்டு உள்ளது. மௌரியர்கள், நந்தர்கள் ஆகிய இரு மன்னராட்சிகளையும் சூத்திரர்களின் மன்னராட்சி என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. 
 
மௌரியர்களின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்து சுங்கர்களின் ஆட்சிக் காலம் தொடங்கிய போதும் கூட சாதிய முறைகள் அகலவில்லை, மாறாக வலுவான நிலைப் பெற்றே இருந்தன. இத்தனைக்கும் அக்காலத்தில் பௌத்த மதம் எழுச்சி பெறத் தொடங்கி பிரமாணர்களின் சாதியம் சார்ந்த மதங்களை கடுமையாக விமர்சித்து வந்தன.
 
ஒன்றை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும் அக்கால மன்னர்கள் சமூக மாற்ற விரும்பிகளாக இருக்கவில்லை, இருப்பினும் சில சமூக மாற்றங்களை செய்தனர். ஆனால் சமூக மாற்றங்களை வெளிப்படையாக செய்தால் அந்த மன்னர்களை கொடுங்கோலர்கள் என்றே அரசியல் அவதானிகள் கூறியிருப்பார்கள். 
 
நந்தர்களும், மௌரியர்களும், ஹர்ஷர்களும் பௌத்த, சமண மதங்களை ஆதரித்த போதிலும் பிராமணர்களைப் பகைத்துக் கொல்ல அவர்கள் விரும்பவில்லை. சொல்லப் போனால் பிராமணர்களை தமது அரசவைகளில் அங்கமாக்கிக் கொண்டனர். பலருக்கு அமைச்சர் மற்றும் அரசக் குரு பதவிகள் கொடுக்கப்பட்டன. சொல்லப் போனால் சமணர்களை ஆதரித்த சந்திரகுப்த மௌரியரின் தனிப்பட்ட ஆலோசகராக மிகவும் அடிப்படைவாதியாக திகழ்ந்த சாணக்கியர் என்ற பிராமணரே இருந்து வந்துள்ளார். என்ன தான் சூத்திரர்களால் ஆட்சி செய்யப்பட்ட போதும் பிராமணர்களுக்கு அவர்கள் அச்சுறுத்தல் செய்யவில்லை. பிராமணர்கள் தமது அதிகாரங்களை நன்றாகவே அனுபவித்து வந்துள்ளனர். 
 
அர்தசாத்திரத்தில் சாணக்கியர் நால்வருணக் கோட்பாட்டை மிகத் தெளிவாக வரையறை செய்துள்ளார். சாதிய பிரிவனைகள் சொல்லும் பாக்கள் பல அர்தசாத்திரத்தின் மூன்றாம் அதிகாரத்தில் காணப்படுகின்றன. மன்னர்கள் இம்மையிலும், மறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் சமூகப் பிரிவுகளை ஆர்ய மரபின் படி பேண வேண்டும் என்று அர்த்த சாத்திரம் கூறுகின்றது. மூமறை வேதங்கள் படி நடக்க வேண்டும் எனவும் கூறுகின்றது. சாதிய பிரிவுகளை நீக்கிவிட்டால் சமூகம் நிலையற்றுப் போய்விடும் எனவும் கூருகின்றது. 
 
caste-system.jpg
 
இந்தக் காலக் கட்டத்திலும், அதனை அடுத்தடுத்து வந்தக் காலங்களிலும் பெரும்பாலான மன்னர்கள் சமூக பொருளாதார மாற்றங்கள் மீது கவனம் செலுத்தவில்லை. மாறாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றவும், படையெடுப்புக்கள் செய்யவுமே ஆர்வம் காட்டினார்கள். பொன்னும் பொருளும் நிரம்பிய அரசுகள் என புகழ்பாடும் பாமாலைகள் எல்லாம் அரசர்களின் கஜானாக்களைக் குறிப்பிட்டதே ஒழிய, மக்கள் தேனும் பாலும் சுவைத்து வாழ்ந்தனர் என்று அர்த்தமல்ல. மக்கள் பலர் வறுமையிலேயே வாழ்ந்தனர்.  இதேப் போக்கினைத் தான் பிற்கால முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியிலும் தொடர்ந்தது. 
 
சாதிய பிரிவினைகளும், அடக்குமுறைகளும் ஒரே நாளில் எழுந்தவை அல்ல, மாறாக பண்டைய இந்திய சமூகத்தில் இருந்து பரிணமித்து வந்தவையே ஆகும். ஆனால் இந்த சமூக ஏற்றத் தாழ்வுகள் உச்சத்தை அடைந்தது குப்தர்களின் ஆட்சியில் தான். ஏனெனில் குப்தர்களின் ஆட்சிக் காலமே ஹிந்துத்வாவின் பொற்காலம் என்றழைக்கப்படுகின்றது. இதனை விளக்க வேண்டுமானால் இந்தப் பதிவு போதாது, சுருக்கமாக சொன்னால் குப்தர்கள் தோற்றுவித்த பொற்காலம் என்பது ஏற்கனவே இருந்த சமூக ஏற்றத் தாழ்வுகளை வாரியணைத்துக் கொண்டது தான்.

குப்தர்களின் ஆட்சியின் வளர்ச்சியும், வளங்களும், நிலைத் தன்மையும் வைதிக வேத மதங்களுக்கு புதிய வடிவைக் கொடுத்தனர்.

பிராமணர்களுக்கு மறுவாழ்வு அளித்தனர்.

பிராமண வர்க்கத்துக்கு அரச அந்தஸ்தினைக் கொடுத்தனர். இது சுங்கர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் வேறு யாரும் இல்லை யோகசூத்திரம் பாடிய பதஞ்சலி முனிவரே ஆவார்.

தர்ம சாத்திரங்களின் படி ஆட்சி செய்யும் முறையை ஏற்படுத்தினார்கள். இந்த தர்ம சாத்திரமானது முன்னர் இருந்த மானவ தர்ம சாத்திரம் எனப்பட்ட மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. மனுஸ்மிருதி முழுமையாக எழுதப்பட்டக் காலமாக சுங்கர்களின் காலத்தையே ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதாவது கிமு 150 - 100 வரையிலான காலப்பகுதி ஆகும்.

வேதக் கால சடங்கு முறைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தல், குறிப்பாக யாகங்கள் போன்றவற்றை அரசு முன்னின்று நடத்தத் தொடங்கியது.

புராணங்களுக்கு பூரண வடிவம் கொடுக்கப்பட்டது. புதிய புராணங்கள் பல இயற்றப்பட்டு அவற்றோடு இணைக்கப்பட்டது. குறிப்பாக பாகவத புராணம் இக்காலத்திலேயே எழுதப்பட்டது.

முக்கியமாக பகவத் கீதைக்கு முழு வடிவம் கொடுக்கப்பட்டதும் இக்காலத்திலேயே ஆகும். இந்த பகவத் கீதையே சாதி ரீதியான சமூகத்துக்கும், சமூகப் பிரிவினை வாதத்துக்கும் ஆன்மிக முலாம் பூசப்படக் காரணமாக இருந்தது. பகவத் கீதை சுங்கர்களின் ஆட்சியிலேயே எழுதப்படத் தொடங்கி இருத்தல் வேண்டும்.

 
குப்தர்களின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வந்தநிலையிலும், இந்தியக் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் மீது பிராமணம் ஒரு இரும்புப் பிடியினை ஏற்படுத்திக் கொண்டது. அரச நிலைக்கு உயர்ந்த பிராமணர்கள் தமது அதிகாரங்களை தக்க வைப்பதற்காக மக்களை அடங்கிப் போகவும், அறியாமையில் மூழகும் படியும் செய்தனர். இதுவே பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தன.
 
நாம் நமதுக் கலாச்சாரத்தின் மீதும், மதத்தின் மீதும் பெருமிதம் கொள்ள பேசத் தொடங்கியதற்கு முக்கிய காரணம் நமது ஆழ்மனதில் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையே ஆகும். காரணம் 1500 ஆண்டுகளாக நமதுக் கலாச்சாரம் மந்தக் கதியிலேயே வளர்ந்தது. கலாச்சாரத் தொய்வு நிலையை மறுக்கவும், முன்னையக் காலத்தில் ஏற்பட்ட மந்த நிலையை மறைக்கவுமே இன்று பலர் கலாச்சார பெருமிதங்களை பற்றி பேசி வருகின்றனர். பகுத்தறிவு வாதிகள் இந்தியக் கலாச்சாரத்தின் குற்றம் குறைகளை எடுத்து சொல்லும் போது, பலரால் அதனை செரித்துக் கொள்ள முடிவதில்லை. முக்கியமாக பிராமணர்களால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனெனில் அவர்களின் மூதாதையர்களே ஒரு பெரும் கலாச்சாரத்தை வளரவிடாமல் தடுத்ததில் பெரும் பங்காற்றியவர்கள். முதிர்ச்சியான சமூகத்தை ஏற்படுவதில் தடையாக இருந்தவர்களும் அவர்களே.

இந்தியக் கலாச்சாரத்தின் குறைகளை சுட்டிக் காட்டும் போது குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் அவர்கள் கேள்வி எழுப்பும் போது, தீக்கோழி மண்ணுக்குள் தலை மூடிவைப்பது போல, இந்தியக் கலாச்சாரத்தின் தொய்வு நிலையை மறைக்க மார்சிய வாதிகளும், மேற்கத்திய கிருத்தவர்களுமே இந்தியக் கலாச்சார அழிவுக்கு காரணம் என காட்டிவருகின்றனர் இந்துத்துவாவாதிகள் பலர். இல்லாவிட்டால் தாமாகவே புதிய வரலாறுகளை புனைந்துக் கொண்டு உண்மையை மறைக்கும் போக்கினைச் செய்கின்றனர்.

 

நிர்முக்தா என்னும் இந்திய நாத்திக இதழில் வெளியான 
கட்டுரையின்
தழுவலே இந்தப் பதிவாகும். இதன் மூல ஆசிரியர் திரு. ரங்கநாதன் அவர்களுக்கும், நிர்முக்தா இதழுக்கும் எமது நன்றிகள்.

 

http://www.kodangi.com/2012/07/hindu-caste-apologetics-and-the-culpability-of-the-pre-adi-sankara-era.html

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவைக்கேற்ற, அத்தியாவசியமான இணைப்பு, நுணாவிலான்!

 

இந்தக் கட்டுரையின் மூலம், நாம் இந்திய சாதீய அடிப்படையையும் அதன் பரிணாமங்களையும், எவ்வாறு தவறாகப் புரிந்து கொள்கின்றோம், அல்லது தவறாக புரிந்து கொள்ள வைக்கப் படுகின்றோம். என்பதை அறிந்து கொள்ள முடியும்.

 

உண்மையில், ஹிந்துக்களின் சாதி அமைப்பே, பிரித்தானியர்களிடம், சாதி அமைப்புத் தோன்றக் காரணமாக இருந்தது! இன்று கூட, உயர்குடி எனக் கருதப்படும் பிரித்தானியர்கள், காதல் மணம், போன்றவற்றை ஏற்றுக்கொள்வதில்லை என்பதும், இதற்காகப் பல கொலைகள் , தற்கொலைகள் கூட இடம்பெறுகின்றன என்பது, எமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மையாகும்.

 

பகவத் கீதையே, வருணாச்சிரம தர்மத்தின் அடித்தளம்! இப்போது உலகத்துக்காக, அதற்கும் வெள்ளை வேட்டி, கட்டப்படுகின்றது என்பதே உண்மையாகும்!

 

இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையே, அவர்கள் செய்யும் எந்தச் செயலுக்கும், தார்மீகப் பொறுப்பு ஏற்காமல், மற்றவர்களில் பழியைப் போட்டுவிட்டுத் தப்பி விடுவது!

இதுவே அவர்களது தேசியக் குணாதிசயமாகிப் போய்விட்டதென்பதே, வரலாறு காட்டி நிற்கும் உண்மை!

 

முள்ளி வாய்க்காலை விடவும், மிகச் சிறந்த உதாரணம் வேறொன்றும் இருக்க முடியாது என்பதே எனது கருத்து! 

 

பெண்ணடிமைத்தனமும், சாதீயமும், இந்தியாவின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை! 

 

காலம் இதற்குக் கட்டாயம் பதில் சொல்லி நிற்கும் என்பதே எனது நம்பிக்கை!

 

வல்வை எழுதிய, தீட்சைக்கு நாள் குறிக்கும் நாள் நெருங்கி வருகின்றது, என்ற கவிதையின் மனநிலையிலேயே எம்மில் பலர் உள்ளார்கள்! :D

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.