Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கு சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வித்திடுமா?

Featured Replies

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண் காட்சி இடம்பெற்று வருகின்றது. சர்வதேசம் என்ற அகலித்த பெயர் சூட்டப்பட்டு நடத்தப்படு கின்ற வர்த்தகக் கண்காட்சியால் யாழ்.குடா நாட்டு மக்களுக்கு ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன? என்பதும் இத்தகைய கண்காட்சிகள் எங்கள் இளம் சந்ததியிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் ஒரு கணம் நாம் சிந்திப்பது அவசியமானதாகும். தனித்து இலாப நோக்கத்தை மட்டும் மைய மாகக் கொண்ட கண்காட்சியாக இது இருக்கு மாக இருந்தால் அதனால் யாழ்.குடாநாட்டில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பது திண்ணம்.

 

 

சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை வருடந் தோறும் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக உள்ளன. இதற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் காத் திரமான ஆதரவை வழங்கிவருகின்றது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஆதரவை வைத்துக்கொண்டு,

 

சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்ப்பாணத் தில் இடம்பெறுவதால் குடாநாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கின்றது என்ற முடிபுக்கு வர வேண்டியுள்ளது.  ஏனெனில் யாழ்ப்பாண வர்த்தகர்கள் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவதை மட்டுப்படுத் திக் கொள்ள வேண்டும் என்று யாழ்.வணிகர் கழகம் ஊடகங்கள் மூலமாக அறிவித்திருந்தது.


எனவே யாழ்.குடாநாட்டின் வர்த்தகத்திற்கு எதிர்காலப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அம்சங் களை நிவர்த்திக்கக் கூடிய வகையிலும், நுகர்வோர் தரமான பொருட்களையும் நுகர் வுக்குத் தேவையான பொருட்களையும் இனங் கண்டு கொள்ளவும் இக்கண்காட்சி உதவும் என நம்பலாம். எனினும் அதனை சான்றாதாரங்கள் மூலம் நிரூபிக்க முடியவில்லையயன்று கூறவேண்டும். ஏனெனில் கடந்த சில வருடங்களாக, யாழ்ப் பாணத்தில் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நடந்து வருவதற்குப் பின்னதாக தென்பகுதி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்பதும், இவை யாழ்.குடா நாட்டைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு கட் டாய ஓய்வு கொடுக்கப் போகிறது என்ற கணிப் பீடுகளும் யதார்த்தமானவை.

 

எதுவாயினும் யாழ்ப்பாணத்தில் நடைபெறு கின்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சி அரசியலையும் வர்த்தகத்தையும் ஒற்றுமையாகப் பார்க்கின்ற ஊடகப் பண்பாட்டை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமான உண்மை.

 

தென்பகுதியில் உள்ள நிதிநிறுவனங்கள் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து யாழ்.குடாநாட்டு மக்களின் நிதி வளத்தை வசூலித்துக் கொண்டு செல்கின்றதென்ற பலத்தக் குற்றச்சாட்டுக்களின் மத்தியில், சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யேனும் குடாநாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப் பிற்கு புதிய சிந்தனையை வகுத்துக் கொடுக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=438:2013-01-20-10-04-40&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.