Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவசாயிகள் போர்வையில் 2000 சிங்களவர்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகள் போர்வையில் 2000 சிங்களவர்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திட்டம்
ஜன 22, 2013
 
வடக்கு மாகாணத்தின் எல்லையில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் என்ற போர்வையில் 2000 சிங்கள குடும்பங்களை படையினரின் பாதுகாப்பில் குடியமர்த்துவதற்கு அரசு திரைமறைவில் திட்டம்.
 
இதற்கான வேலைகள் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் குடி யேற்றப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
 
மனிதாபிமான விவசாய உற்பத்தி நடவடிக்கைச் செயற்றிட்டத்தின் கீழ், வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவுக்குட் பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 
சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 
30 வருடப் போரின் பின்னர் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டே வடக்கில் இந்த நடவடிக்கைகள். எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேச பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதவியா, சம்பத்நகர், போகஸ்வௌ ஆகிய கிராமங்களில் படையினரின் 56 ஆவது படைப்பிரிவின் அனுசரணையுடன் ஆயிரம் சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.
 
மேலும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் படையினரின் 72 ஆவது படைப்பிரிவின் அனுசரணையுடன் ஆயிரம் சிங்களக் குடும்பங்களும் குடியேற்றப்பட்டுள்ளன.
 
ஏற்கனவே திட்டமிட்டுக் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கு வவுனியா தெற்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
 
விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் முகமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு ஏக்கர் காணி வீதம் 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் காணிகள் பங்கிட்டு வழங்கப்படவுள்ளன.
 
இந்தக் குடியேற்ற நடவடிக்கைக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் சிங்களக் குடும்பங்களுக்கும் படையினராலும், ஏனைய அரச நிறுவனங்களினாலும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான நவீன உபகரணங்கள், விதைகள் என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.
 
இதற்கு மேலதிகமாக விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்தயாப்பா அபயவர்த்தனவால், குடியேற்றப்படும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக 10 மில்லியன் ரூபா நிதியும் உடனடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
 
விவசாயிகள் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்களை வடக்கில் அதிகரிப்பதற்கே அரசு முனைப்புடன் செயற்படுவதாகத் தெரிவிக்கிப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.