Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்க எதிராக அமெரிக்கா பாயும்?; ஜெனிவா மாநாட்டில் பிரேரணை வரும்

Featured Replies

இலங்கைக்க எதிராக அமெரிக்கா பாயும்?; ஜெனிவா மாநாட்டில் பிரேரணை வரும்
america.jpg

இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது. ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான மிக முக்கிய தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 

 
இதற்கான இராஜதந்திர முன்னேற்பாடுகளை இப்போதே அமெரிக்கா முடுக்கிவிட்டிருப்பதாக அறியமுடிகின்றது.
 
இதன்படி மார்ச் மாத கூட்டத்தொடரில் பங்கேற்கும் நாடுகளின் தூதுவர்களுக்கு இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
 
இலங்கை தொடர்பில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்திவருவதாகவும், மார்ச் மாத மாநாட்டில் அது தொடர்பில் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் சாத்தியம் தொடர்பிலும் ஜெனிவாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இராஜதந்திர மட்டத்தில் முன்னறிவித்தலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இலங்கை தொடர்பில் இந்த முறை ஜெனிவா மாநாட்டில் மூன்று நாள்கள் தனித்தனி அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இறுதி நாள் விவாதம் மார்ச் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஆகையால் மார்ச் 15ஆம் திகதியளவிலேயே அமெரிக்கா தனது பிரேரணையை முன்மொழியுமென எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதன்போது சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்காவின் பிரேரணைக்கு தற்போது இறுதி வடிவம்கொடுக்கும் முயற்சிகள் முடிவடைந்து விட்டதாக அமெரிக்க இராஜதந்திர உயர்மட்ட வட்டாரங்கள் நேற்று "உதயனி'டம் உறுதிப்படுத்தின. 
 
 
 
 
பேர்லின் மகா நாடு.அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட கோத்தாவின்  மறைமுகத்தாக்குதல்.ஆகவே இது தேவையற்றவொன்று;இதற்கு யாரும் விலை போகாதீர்கள்.

 நீலக்குருவி

வெளிச் செய்திகளின் படி இந்த முறை இந்தியா அமெரிக்க இரண்டும் தணிவான போக்கை காட்டுகின்றன. போனவருடம் இந்நாள் வரையில் இந்தியா, நிருபம்மா, அப்துல் கலாம், கிருஸ்ணா வரையும் இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தது. பிரேரணை முடிய சிவசங்கர் மேனன் வந்தார். இவர்கள் எல்லோரும் தமிழருடன் பேச்சுவார்த்தைகளை திரும்ப ஆரம்பிக்க முயற்சித்தவர்கள். இந்த முறை விக்கிரம் சிங் வந்து இலங்கைக்கு ஆதரவுக்கு உறுத்தி அளித்திருந்தார். அதற்கு மேல் இந்தியா எதுவும் செய்யவில்லை. மகாலிங்கம்தங்களுக்கு  நிறைய உடன்படிக்கைகள் கிடைத்தாக பீத்த்தியிருந்தார். 13ம் திருத்தை திவி நெகும மேல் சென்றபின்னர், இப்போது அவர் 13ம் திருத்தம் பற்றி பேசுகிறார். அதில் வடக்கு-கிழக்கு இல்லை, பொருளாதார உரிமை இல்லை. அதாவது அதில் இப்போது ஒன்றும் இல்லை. இப்போது அது 13- தன்னும் இல்லை. அதாவது அது அரசியல் அமைப்புத் திருத்தம் என்று சொல்லத்தக்க தொன்றல்ல.

 

அமெரிக்கா உள்நாட்டில் பல சிக்கல்களை சந்தித்திருக்கு. இலங்கையில் முதலிடுவது முடியாடதது என்று பிளேக் சொன்னதின் பின்னர், அமெரிக்காவும் நாமலும் கிளினொச்சியிலும், அம்பாந்தோட்டையிலும் முதலிடுவது பற்றி பேசுகிறார்கள். 

 

நடப்பதை மாரிசில் பார்த்துவிட்டுத்தான் மேலதிக கருத்துக்கள் கூறலாம். 

அமெரிக்க அதிகாரிகளால் ஒன்றும் ஆகப்போவதில்லையாம் -ரம்புக்வெல

  • இவ் விடயம் 23. 01. 2013, புதன்கிழமை, தமிழீழ நேரம் 6:45க்கு பதிவு செய்யப்பட்டது
  • விசேட செய்தி

rampukkala.jpgஅமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் இலங்கை வருவதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை. போலி மாயையை சர்வதேசத்துக்கு காண்பிக்கவும் இலங்கை விரும்பவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் உள்நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் அனைத்து துறைகளிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்று ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஜெனிவா உட்பட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளின் அடிப்டையில் இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சர்வதேச அமைப்புகள் வந்து ஆராயலாம். அதற்கு தடை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படுகின்றது. எனவே இலங்கையை தவறாக நோக்க்கூடாது.

எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்க அதிகாரிகள் இலங்கை வருகின்றனர். இவர்களின் நிகழ்ச்சி நிரலில் நல்லிணக்க ஆணைக்குழுவின் விடயமே முக்கியமானதாக அமைகின்றது.

எவ்வாறாயினும் இலங்கைக்கு யார் வந்தாலும் உண்மைநிலையை பார்த்துவிட்டுப் போகலாம். ஆனால் உண்மைக்கு முரணான தகவல்களின் அடிப்படையில் செயற்பட முற்படக்கூடாது.

இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் மக்களின் விருப்பங்கள் என்பவற்றுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

 

http://nerudal.com/nerudal.54710.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.