Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வம்சாவளியினருக்கு இந்தியா உதவ வேண்டும்: பிரபா கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

praba-ganeshan(9).jpg

'அரசியல் தீர்வானது 15 இலட்சம் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்வாங்கியதாக இருத்தல் வேண்டும் என்பதுடன் இலங்கையில் இருக்கின்ற இந்திய வம்சாவளியினருக்கு இந்தியா உதவவேண்டும்' என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய இனப்பிரச்சினையை பொருத்தவரையில் அனைத்து சிறுபான்மையினரும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா ஒரு முக்கிய பங்கை ஆற்றவேண்டுமென எதிர்ப்பார்க்கின்றனர். என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் 64 ஆவது குடியரசு தினத்தை நாளை கொண்டாடுகின்ற இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், இந்திய தூதுவர் ஸ்ரீ அசோக் காந்தா ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ள வாழத்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியா குடியரசு கடந்த ஆறு தசாப்த காலத்தில் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளில் பாரிய முன்னேற்றங்களைக் கண்டு இன்று 64ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுகின்ற இந்திய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன.

உலகளாவிய பல வல்லரசு நாடுகள் இன்றைய இந்தியாவின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் கண்டு வியப்பு தெரிவிக்கின்றன. இந்தியா பொருளாதார முன்னேற்ற பாதையில் வெற்றிகரமாக பல சாதனைகளை புரிந்து ஆசிய பிராந்தியத்தில் ஒரு வல்லரசாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டு; தனக்கு கிடைத்த சுதந்திரத்தை நன்றாக பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. சுதந்திரம் பெற்ற பின் நாட்டிற்கு தலைமைதாங்கிய ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்ராவ், வாஜ்பாய், ராஜீவ்காந்தி, டாக்டர் மன்மோகன்சிங் ஆகியோர் அனைத்து உலக தலைவர்களாகவும் அங்கீகாரம் பெற்றனர். 

எல்லா வகைகளிலும் இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்பதை இந்த குடியரசு நன்நாளில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
இலங்கை தேசிய இனப்பிரச்சினையை பொருத்தவரையில் அனைத்து சிறுபான்மையினரும் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா ஒரு 
முக்கிய பங்கை ஆற்றவேண்டுமென எதிர்ப்பார்க்கின்றனர். 

எதிர்காலத்தில் வரவிருக்கும் அரசியல் தீர்வானது 15 இலட்சம் மலையக மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் உள்வாங்கியதாக இருத்தல் வேண்டும். எமது கருத்துக்களை செவிமடுத்த சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் மலையக மக்களுக்கும் அரசியல் அதிகாரம் வழங்கும் வகையில் பல புதிய ஏற்பாடுகளையும், நிறுவன அமைப்புகளைப்பற்றியும் பரிந்துரை செய்துள்ளனர். இந்திய அரசும் இவ்விடயத்தில் கூடிய அக்கரை செலுத்தி மலையக மக்கள் தமக்குரிய அரசியல் உரிமைகளையும், அதிகாரங்களையும் பெற்றுக் கொள்வதற்கு உறுதுணையாக அமைய வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களை தொடர்புபடுத்துதல் இந்திய வளர்ச்சி வரலாறு (நுபெயபiபெ னுயைளிழசய் வுhந ஐனெயைn புசழறவா ளுவழசல)என்ற தொணிப்பொருளில் கொச்சினில் நடைபெற்ற 11வது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் மாநாட்டை (Engaging Diaspora; The Indian Growth Storyகடந்த 8ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய கருத்துக்களை  வரவேற்பதோடு இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் மேம்பாட்டுக்கு இந்தியா உதவ வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பாகும்.

எமது நாட்டில் வாழ்கின்ற சகல தமிழ் பேசும் மக்களும் எந்தவித பாகுபாட்டிற்கும் அநீதிக்கும் உட்படாது முழுமையான சுதந்திரமும், சமத்துவம் மற்றும் அந்தஸ்து உடையவர்களாக வாழ்வதற்கு இந்தியா பங்காற்ற வேண்டும்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57704-2013-01-25-06-53-02.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.