Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழதமிழர்- கலைஞர் கூட்டணி தீர்மானம்... BBC திருகுதாளம்..???

Featured Replies

தமிழர்கள் மீது தாக்குதல் : மத்திய அரசு தலையிட தி.மு.க. கூட்டணி கோரிக்கை!

திங்கள், 19 ஜூன் 2006 (20:14 ஐளுகூ)

இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்தும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி வலியுறுத்தியுள்ளது!

இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு இலங்கைத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்வதாகவும், அதனை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலரும், நிதியமைச்சருமான அன்பழகன், மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் டி.கே. ரங்கராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித் தலைவர் காதர் மொஹ்தீன் ஆகியோருடன் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, இத்தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்புவது மட்டுமின்றி, நானும் தொலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டு பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

http://www.webulagam.com/news/regional/060...060619011_1.htm

இந்தக் செய்தியை வெப்புலகம் வெளியிட்டது..! ஆனால் BBC வேறுமாதிரி தடம் மாற்றியுள்ளது... எது உண்மை...????

  • தொடங்கியவர்

இலங்கை பிரச்சினை குறித்து சென்னையில் திமுக தலைமையில் கூட்டணி கட்சிகளின் கூட்டம்

இலங்கையில் அதிகரித்துவரும் வன்முறை பற்றியும், அதன் காரணமாக தமிழகத்துக்குவரும் இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினை பற்றியும் விவாதிப்பதற்காக, தமிழகத்தைஆளும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை சென்னையில், திமுக தலைமையகத்தில் நடந்தது.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு கருணாநிதியின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் சுதர்சனம், திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்தலைவர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர் தா.பாண்டியன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழகத் தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவன செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு குறிப்பாக என்ன செய்யவேண்டும் என்று வெளிப்படையான எந்த கருத்தும் இந்த தீர்மானத்தில் இல்லை. இதுபற்றி செய்தியாளர்கள் மீண்டும் மீண்டும் கேட்டபோதும், அதற்கு நேரடியான தெளிவான பதில் தருவதை கருணாநிதி கவனமாக தவிர்த்தார். அதேசமயம், இலங்கையின் சமாதான பேச்சுக்கள் மீண்டும் தொடர இந்தியா உதவுவது ஒரு வழி என்று கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

இன்றைய தீர்மானத்தில் இரண்டு முக்கிய அம்சங்களை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், கடந்த காலங்களில் இலங்கை இனப்பிரச்சினையில் பாதிக்கப்படும் தமிழர்கள் பற்றி குறிப்பாகவும், விரிவாகவும் கவலையும் கரிசனமும் வெளியிடுவது வாடிக்கை. ஆனால் இன்றைய தீர்மானத்தில், இலங்கை தமிழர்கள் என்று எந்த இடத்திலும் கூறப்படாததோடு, இலங்கையின் அப்பாவி மக்கள் கண்ணிவெடிகளாலும், விமானத்தாக்குதலாலும் கொல்லப்படும் சம்பவங்கள் என்று பொதுவாக கூறப்பட்டிருப்பது, இலங்கையின் வன்முறைக்கு பலியாகும் அனைத்து இன மக்களுக்காகவும் தமிழக கட்சிகள் தங்களின் கவலையை வெளிப்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக, இன்றைய தீர்மானத்தில், இலங்கையின் வன்முறை காரணமாக, தமிழ்நாட்டை நோக்கி அகதிகள் வந்து குவிவதும், இந்தியா இலங்கை இரண்டுக்குமிடையே வாழ்கின்ற மக்களின் மனங்களை பெரிதும் பாதிக்குமளவுக்கு அமைந்துள்ளதையும், இந்த பிரச்சினை ஏற்கெனவே விரும்பத்தகாத பல விபரீத வேதனையான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததையும் ஆழமாக எண்ணிப்பார்த்து என்கிற வாசகம் இடம் பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது, தமிழக அரசியல் கட்சிகள், இலங்கையின் தமிழ் ஆயுத குழுக்கள், கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் நடத்தியதாக கருதப்படும் சர்ச்சைக்குரிய வன்முறை சம்பவங்களை நினைவில் கொண்டிருப்பதை இந்த வாசகங்கள் குறிப்புணர்த்துவதாகவும், அதன் அடிப்படையிலேயே தமிழக அரசியல் கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்னையில் தமது எதிர்கால அணுகுமுறையை வகுக்கும் என்பதை இந்த தீர்மான வாசகங்கள் சுட்டுவதாகவும் அரசியல் அவதானிகள் சிலர் கருதுகின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

இப்பிடி இருக்கு BBC செய்தி...! :roll: :roll: :roll:

அவர்கள் மறந்தாலும் இவர்கள் ஞாபகம் ஊட்டத்தான் இருக்கிறார்கள்.

எரியிற தீயிலை எண்ணை வாக்கிறதுக்கு என்றுகூட ஒரு கூட்டம் திரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பு) இலங்கையில் இந்திய அரசு தலையிட கருணாநிதி தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்

[திங்கட்கிழமை, 19 யூன் 2006, 19:09 ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையில் நோர்வே நாடு ஈடுபட்டு நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து அங்கே அந்த மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளில் சிறிலங்கா அரசும் போராளிகளும் அக்கறை காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமல் மீண்டும் இருசாரரும் மோதிக் கொள்ளும் நிலையில் அந்நாட்டு அப்பாவி மக்கள் கண்ணிவெடிகளாலும் விமானத் தாக்குதல்களாலும் கொல்லப்படும் சம்பவங்களும் அதன் விளைவாக தமிழ்நாட்டை நோக்கி அகதிகள் வந்து குவிவதும் இந்தியா - இலங்கை இரண்டுக்கும் இடையே வாழ்கின்ற மக்களின் மனது பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

இந்தப் பிரச்சனை ஏற்கனவே விரும்பத்தாகத பல விபரீத வேதனையான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததையும் ஆழமாக எண்ணிப் பார்த்து இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவண செய்திட வேண்டும் என்று அடியில் கையொப்பமிட்டுள்ள இயக்கங்களைச் சார்ந்த நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும் அந்த மீனவர்களுக்கு உயிர் உடைமை உரிமை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவும் இந்திய-சிறிலங்கா அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி (தி.மு.க.), சுதர்சனம் (காங்கிரஸ்), மருத்துவர் இராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி), கி. வீரமணி (திராவிடர் கழகம்), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி), தா. பாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லிக்) ஆகியோர் இத்தீர்மானத்தின் கீழ் கையொப்பப்பமிட்டுள்ளனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

கேள்வி: என்ன மாதிரியான நடவடிக்கை?

பதில்: அவர்கள் எது எடுத்தாலும் நடவடிக்கைதான். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

கேள்வி: அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே?

பதில்: கோரிக்கை வைப்பவர்கள்தான் அது பற்றி விளக்க வேண்டும்

கேள்வி: தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகிறதா?

பதில்: அகதிகளின் நிலை, தேவைகளைக் கண்டறிந்து வர அமைச்சர்கள் சு.ப.தங்கவேலன், பெரிய கருப்பன் ஆகியோர் நேரில் சென்று வந்துள்ளனர்.அதுபற்றி அறிக்கையும் தர இருக்கிறார்கள்.

கேள்வி: இதை பிரதமரிடம் வலியுறுத்தினீர்களா?

பதில்: உரிய செயல்களை ஆற்ற பிரதமரிடம் கேட்டு வலியுறுத்தியுள்ளோம். அதுதவிர மத்திய அரசுக்கு எதுவும் யோசனை கூறவில்லை.

கேள்வி: இந்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறதா?

பதில்: இதுவரை எடுத்த நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.

கேள்வி: எந்த மாதிரியான நடவடிக்கை?

பதில்: அங்கு அமைதி ஏற்படுமளவுக்கு நடவடிக்கை.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுமா?

பதில்: இன்று நடந்ததே அனைத்துக் அக்ட்சிக் கூட்டம்தான்.

கேள்வி: எல்ல்லாக் கட்சி சார்பில் பிரதமரை வலியுறுத்துவீர்களா?

பதில்: முதல் கட்டமாக நாங்கள் பேசி 7 கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளோம். இந்த கோரிக்கை பிரதமருக்கு அனுப்பப்படும்.

நான் இதுபற்றி பிரதமருடன் தொலைபேசியில் பேசுவேன்.

கேள்வி: தமிழகக் கட்சிகள் சொல்லிக் கேட்கும் நிலையில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்களா?

பதில்: அது எனக்குத் தெரியாது.

கேள்வி: மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் பற்றி?

பதில்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியாகவே அது இருக்கிறது

எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாமும் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் இது தொடர்கிறது என்றார் கருணாநிதி.

-புதினம்

தல.... நீங்கள் வெப் உலகம் தளத்தில் இருந்து படித்த செய்திகளைத் தான் இன்று தமிழ்நாட்டின் எல்லா ஊடகங்களிலும் போட்டிருக்கிறார்கள்.... BBC நிருபருக்கு யாராவது தினமலரில் இருந்து செய்தி எழுதித் தருகிறார்களா என்று தெரியவில்லை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூக்கு வின் கையொப்பம் போல் இந்தியன் என்றும் "இமயம்" போல் பார்த்தும் பாராததுமாக நிற்பான் என்பதற்கு ஒப்ப "கருணா" நிதியின் பதில்கள் அமைந்துள்ளனவோ!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மாநில முதல் அமைச்சர் "தெரியாது" என்று ஒரு பதில் சொல்வது கேவலமான விடயம்! உண்மையிலயே தெரியாவிட்டாலும் அதை "தெரியாது" என்று ஒரு வார்த்தையில் நறுக்கென்று சொல்வது அவரின் முட்டாள் தனத்தை காட்டுகின்றது.

ஒரு மாநில முதல் அமைச்சர் "தெரியாது" என்று ஒரு பதில் சொல்வது கேவலமான விடயம்! உண்மையிலயே தெரியாவிட்டாலும் அதை "தெரியாது" என்று ஒரு வார்த்தையில் நறுக்கென்று சொல்வது அவரின் முட்டாள் தனத்தை காட்டுகின்றது.

யோவு ளொள்ளாாாாாாாாாாாாாாாாாாா பதிலை திருத்திச்சொல்லும் படித்த முட்டாள்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு வயசு போன காலத்தில ஞாபகமறதி அதிகமாகிட்டுது போல. சம்மந்தமே இல்லாம எழுதியிருக்கிறியள் அது தான்.

ஒரு மாநில முதல் அமைச்சர் "தெரியாது" என்று ஒரு பதில் சொல்வது கேவலமான விடயம்! உண்மையிலயே தெரியாவிட்டாலும் அதை "தெரியாது" என்று ஒரு வார்த்தையில் நறுக்கென்று சொல்வது அவரின் முட்டாள் தனத்தை காட்டுகின்றது.

தெரியும் என்று சொல்லிவிட்டால் மட்டும் நன்றி தெரிவித்து விடுவீர்களோ.... உங்கள் நன்றிகெட்ட தனம் தான் அவரை கொஞ்சம் உஷாராக இருக்கச் செய்திருக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அமைதி திரும்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

இலங்கையில் அமைதி திரும்ப இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் இராணுவமும், விடுதலைப் புலிகளும் நடத்தி வரும் தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதும் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகம் வருவதும் தமிழக மக்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்து வருகின்றது.

இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதி நிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

-புதினம்

பி.பி.சி தமிழோசையினைப்போல ஜெயலலிதாவின் அறிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.