Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது; அமெரிக்க ராஜதந்திரிகளிடம் யாழ். ஆயர்

Featured Replies

நாடாளுமன்றத்தில் இருக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று அரசாங்கம் எண்ணி பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று யாழ். ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம், அமெரிக்க ராஜதந்திரிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

JA01(1).jpg

 

 

போருக்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து ஆராய்வதற்கு இன்று யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க ராஜதந்திரரிகள், ஆயர் இல்லத்தில் சந்தித்து இங்குள்ள நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலின் போதே ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


JA02(1).jpg

 

 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

'வடபகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இருந்தபோதும் காணாமல் போனவர்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இது குறித்த தவறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார். இங்கு இப்போதும் காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எண்ணி கண்ணீர் வடித்த வண்ணமே இருக்கின்றார்கள்.


அத்துடன் வடபகுதியில் வாழும் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதோடு தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதுதான அடக்கு முறையும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் தேர்தல் ஒன்றை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதும் தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறதே தவிர அதற்கான சமிக்ஞைகள் எதுவும் இல்லை.

 

அரசாங்கம் பல செயற்பாடுகளை தன்னிச்சையாக செயற்படுத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டு நினைத்ததை சாதித்து விடலாம் என்று எண்ணிக்கொள்கிறது. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்தில் நன்மை பயக்கும்' என்றார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/57808-2013-01-27-13-09-23.html

  • தொடங்கியவர்

இதனையடுத்து, பலாலி இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேற்படி ராஜதந்திரிகள் குழு, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

U05(4).jpg

 

U06(3).jpg

 

U07(2).jpg

  • தொடங்கியவர்

இதனையடுத்து, பலாலி இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேற்படி ராஜதந்திரிகள் குழு, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

 

U07(2).jpg

 

 

வழமை போல படம் காட்டியுள்ளார்கள்.

 

எவ்வாறு தாம் நல்லிணக்கம், மீள் குடியேற்றம், அபிவிருத்தி என்பனவற்றை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றோம் என  :rolleyes:

 

இந்த பருப்புகள் வேகுமா இல்லையா என சில மாதங்களில் தெரியவரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.