Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சின்- கவச குண்டலங்களை இழந்த கிறிக்கற் கடவுள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 



sir-sachin-tendulkar-agni-chemburkar.jpg

 

 

கோடி ரசிகர்களின் கரவோசம் வான்பிளக்க.. தனது பாரமான துடுப்பினை உயர்தியபடி சச்சின் வருகிறார். அது பிடரி மயிர் சிலிர்க்க சிங்கம் ஒன்று கம்பீரமாக நடந்துவருவது போலிருக்கும். சுருண்ட குட்டை முடி காற்றில் பறக்க, தனது கரகரத்த குரலில் நன்றி சொல்லிக் கொண்டிருப்பார்.  உறையாத அந்தக்  கணத்தினை தொலைக்காட்சிகள் திரும்ப திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும்.  

 

அப்பாவும் அவர் நண்பர்களும் 16 வயசு சிறுவனின் பழம் பெருமைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். நாங்களோ சச்சின் உச்சமாக இருந்த தொன்னூறுகளின் இறுதியையும் , இரண்டாயிரத்தின் தொடக்கங்களையும் பெருமை பொங்க உரையாடிக் கொண்டிருப்போம். சித்தியின் பெடியனுக்கோ சச்சின் குறியீடாகி எல்லைகளை கடந்தவராக பாடக் கொப்பியின் முன்னட்டையில் உறைந்திருப்பார். நான் விரும்பியது சச்சினின் இப்படி ஒரு ஓய்வினைதான். சச்சின் ஒருநாள் போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு பெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டியிலாவது கொளரவமான ஓய்வினை கொடுத்தால் சந்தோசமடைவேன். உச்சங்களின் இறுதி அத்தியாயங்கள் கசப்பானதாகவும் , வலி நிரம்பியதாகவும் கடப்பது ஒன்னும் புதிதல்ல.

 

கங்குலி, லாரா , சனத் , பீட்டர்சன்  என அண்மைக் கால உதாரணங்களே நிரம்ப இருக்கின்றன. லாரா ஓய்வு பெற்று, மீண்டும் வந்து ஒரு 'உள்ளே வெளியே' ஆட்டம் ஆடியிருப்பர். சனத்தின் தீவிர விசுறிகளே "ஏன் இந்தாள் இன்னும் விளையாடுகிறார் ஓய்வு பெற்று தொலைக்கலாம் தானே" என சினந்து கொண்டிருந்த கட்டத்தில் அடித்தாட முயன்று தோற்று விடை பெற்றார். பறப்பதற்கு அவதிப்படுக் கொண்டிருந்த பறவை கனமான , முறிந்த இறகை உதிர்த்து விட்டு பறப்பது போலிருந்தது சனத்தின் ஓய்வு. அதன் பின்னர்தான் இலங்கையால் கொஞ்சமேனும் எம்பிப் பறக்க முடிந்தது.

 

 காலம் சாதனைகளையும் , உணர்ச்சி பொங்க ஆடிய அற்புத ஆடங்களயும் , பிரத்தியோக ஷாட் களையும் ஒரு போதும் நினைவில் வைத்திருக்காது. வெறும் உணர்ச்சிகளற்ற எண்ணிக்கைகள் மட்டுமே எஞ்சியிருக்கும். எங்களுடன் பிரட்மன், லோயிட், அம்புறோஸ் எண்ணிக்கையில் உரையாடியது போலவே, சச்சினும் , லாராவும் , சனத்தும் , கங்குலியும் , டிராவிடும் , பாண்டிங்கும் , முரளியும் , வார்னேயும் , அக்ரமும் இனிவரும் சந்ததியினருடன் எண்ணிக்கையில் உரையாடிக் கொண்டிருப்பார்கள்.

 

 

 நான் உனர்சிவசப்படு கலங்கிய கண்களுடன் அனுப்பிவைத்தது இருவரை. ஒருவர் அரவிந்த டீசில்வா, மற்றவர் முரளி. அரவிந்தா 2003 உலக கிண்ணத்தின் அரையிறுதி ஆட்டத்துடன் விடை பெற்றார். அது மழை விளையாடிய ஆட்டம். ரண்வுட் முறையில் ஆட்டமிழந்து கலங்கிய கண்களுடன் வருவார். மழை , உலககிண்ண கனவு என நெகிழ்ச்சியான தருணமாக முடிந்து போனது அவரின் ஓய்வு. அரவிந்தா ஓய்வுபெற்று நடந்துவரும் கணத்தில் இரண்டுபக்க காதினையும் மறைக்கும் பிளாஸ்ரிக் தடுப்புகள் கொண்ட கெல்மட் தான் நினைவில் வந்தது. முரளி தனது இறுதி டெஸ்டில் கூட இந்தியாவிற்கு எதிராக பத்துவிக்கற்கள் எடுத்திருப்பார். அதன் பின்னர் நீண நாட்கள் டெஸ்விளையாடவில்லை. உலக கிண்ணத்துடன் ஓய்வினை அறிவித்தபோது, முரளியின் மந்திரப்பந்து வீச்சினை இனி பார்க்க முடியாது என்ற ஏக்கமே மிகுந்திருந்தது. முரளியின் பலமே ஆட்டத்தின் போக்கினை சடுதியாக மாற்றுவது. ஒரு சம்பவம் இன்னும் நினைவிலிருக்கிறது. எந்த போட்டி என்று மறந்துவிட்டது. ஒரு உலககிண்ன அரையிறுதி நியூசிலாந்துடனான ஆட்டத்தில், முக்கியமான கட்டத்தில் ஸ்ராரூஸை கோட் அண்ட் போல் முறையில் ஒரு சர்சைக்குரிய பிடி பிடித்து ஆட்டமிழக்க செய்த கணம் இன்னும் நினைவிலிருக்கிறது.  ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும், டெஸ்டில் தொடர்ந்து ஆடுவார் என்றே நினைத்திருந்தேன். ம்ஹும் இரண்டிலிருந்தும் தன்னை ஒரேயடியாக விடுவித்துக் கொண்டுவிட்டார். நான் கிறிக்கற் போட்டியின் ஆட்ட , பந்துவீச்சு நுணுக்கங்களை ரசித்து பார்க்க தொடங்கிய காலத்தில் பல மேதைகள் கிறிக்கற்றிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

 

கடந்த கால் நூற்றாண்டு கிறிக்கற்றில் சச்சின் மட்டுமே மாறாதிருந்தார். சச்சினின் பின்னால் வந்தவர்கள் பலர் உச்சம் தொட்டு ஓய்வும் பெற்றும் விட்டார்கள். சச்சினுக்கு எதிராய் ஆடியவர் ஒய்வு பெற்று சச்சினுக்கு பயிற்சியாளராகவும் வந்தும் விட்டார். சச்சின் உலக கிறிக்கற்றில் நீக்கமற கலந்திருந்தார். கிறிக்கற் தனி நபர் சாதனைகளின் கடல். நின்றால் சாதனை , இருந்தால் சாதனை , ஓடினால் சாதனை. சச்சின் ஓடிக் கொண்டிருந்தார். இயற்கயை , வயதை , காலத்தினை எதிர்த்து. இரண்டு வருடங்களிற்கு முன்னர்வரை அவரால் அவற்றை எல்லாம் எதிர்த்து ஓட முடிந்தது. 99 சதத்தை அநாயசமாக அடித்தவருக்கு நூறவது சதம் சறுக்கிக்கியது. இதுதான் கிற்றிகற் வாழ்வில் சச்சினுக்கு வீழ்ந்த மிகப் பெரிய அடி.இதுதான் அவரை பதட்டமாணவராகியது.

 

ஊடகங்களின் அதீத கற்பனைகளையும் , ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புக்களும் சச்சினை பாரமாய் அழுத்தின. அந்த அழுத்தங்களுள் அவர் மெல்ல மெல்ல அமிழ்ந்து போக தெடங்கினார். தனது நூறாவது சதத்தினை கடக்க அவருக்கு இரண்டுவருடங்கள் தேவைப்பட்டது. அதுவும் வங்களாதேசத்திற்கு எதிரான மந்தமான ஆட்டமூலம் பெறப்படதுதான் அந்த சதம் எனும் விமர்சனமும் அவரை தெடர்ந்து கொண்டிருக்கிறது. சச்சினின் நூறவது சத ஆட்டத்தில் இந்தியா வங்காளத்திடம் தோற்றுப் போனது. சதத்தில் சதம் எனும் தேவையில்லாத ஒரு புள்ளியில் சச்சினின் கிறிக்கற் வாழ்வின் இறுதி அத்தியாயம் தொடங்கியது.


கடந்த இறுதி டெஸ்டில்  சச்சின் பெறுத்கள் மிக மோசமானவையே, சொந்த ஆடுகளத்தில் இங்கிலாந்திடம் தொடரை இழந்திருக்கிறது. வெளிஆடுத்களங்களில் இந்தியா திணறினாலும், ஆசிய ஆடுகளங்களில் அடித்தாடும். இந்தியா நட்சத்திரங்கள் எவையும் சொந்த ஆடுகளங்களில் பிரகாசிக்கவில்லை, ஆரம்பத்தில் பிரகாசித்த புஜாரவினால் தொடர்ந்து நிலை கொள்ள முடியவில்லை. சச்சின் தொடர்ந்து போல்ட் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்தியா மொத்தத்தில் ஒரு புள்ளியில் தேங்கிவிட்டது.


இந்தியாவால் ருவன்ரி20 யிலும் 2007 உலககிண்ணத்தின் பின்னர் குறிப்பிட்ட தக்க வெற்றியை பெறமுடியவில்லை. கடைசியாக நடந்த பாகிஸ்தானுடனான தொடரிலும் தொடரை வெல்ல முடியவில்லை. ஒருநாள் போட்டியில் தொடரை இழ்ந்து கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது. இப்பொழுதெல்லாம் டோனியின் சில முடிவுகள், அதிகார தோரனை அணுகு முறைகளைன் மேல் விமர்சனன்கள் எழுந்துள்ளது. தொடரின் ஆரம்பத்தில் விளையாடும் வீரர்களே தொடர் முழுவதும் விளையாடுவார்கள். அணியில் மாற்றங்களை அவர் விரும்புவதேயில்லை. இதுவும் இப்போது விமர்ச்சிக்க படுகிறது. பல இளையவர்கள் எப்போதும் வெளியில் அமர்ந்திருந்து ஆட்டங்களை ரசிக்க , தொடர்ந்து தடுமாறும் ரோகித் சர்மா போன்றவர்கள் திரும்ப திரும்ப விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது எனக்கு எங்களூரின் தெருக் கிறிக்கற்றின தான் நினைவு படுத்துகிறது.


தொடர் தோல்விகள் சச்சினை சஞ்சலமடடைய வைத்திருக்கிறது. இபொழுதெல்லாம் பதட்டமானவராகவே சச்சின் காணப்படுகிறார். அது அவருக்கு அவரின் மேலிருக்கும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடே. தட்டு தடுமாறி தொடர்ந்து சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்து கொண்டிருக்கிறார். ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று ஒய்வு பெறக் கோரியவர்களுக்கு தற்காலிக தடை கொடுத்திருக்கிறர். அடுத்துவரும் அவுஸ்ரேலியாவுடனான போட்டியில் ரசிக்கலாம் சச்சினின் ஆட்டத்தினை. உள்ளுர் ஆட்டத்தில் சச்சின் சதமடித்திருப்பது சற்று ஆறுதலலிக்கிறது. சச்சின் மீண்டு வந்து கெளரவமான ஓய்வினை பெறவேண்டும் என்பதே இந்த எளிய ரசிகனின் விருப்பம்.


முரன் - சச்சின் ஓய்வு பெறலாம் தானே ஏன் இன்னும் ஆடிக் கொண்டிருக்கிறர் என சினந்துகொண்டிருந்த என்னையே கொஞ்சம் கலங்கவைத்துவிட்டது சச்சினின் இந்த ஓய்வு அறிவிப்பு.பாகிஸ்தான் தொடரையாவது விளையாடிவிட்டு ஓய்வு பெற்றிருக்கலாம் என அங்கலாய்த்தேன்.

 

http://www.dpirasath.com/2013/01/blog-post.html

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா இனி மேல் இந்திய அணிக்கு நல்ல காலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.