Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் போர் இன்னும் ஓயவில்லை; அமெரிக்கக் குழு

Featured Replies

இன்னமும் காணாமல் போனோர் பற்றிய விவரங்கள் எமக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இந்த விவகாரத்தில் அரசு அக்கறை எடுத்திருந்தால் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்வதை தடுத்திருக்க முடியும்.

இலங்கையில் இன்னமும் போர் ஓய்ந்துவிடவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விடவும் இப்போது மக்கள் மீதான அரசின் கெடுபிடிகளும், இறுக்கமான நடைமுறைகளும் அதிகரித்தேயுள்ளன.

மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரை தாம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கழிந்த பின்னரும் கூட இன்னமும் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் நீடிக்கவே செய்கின்றன.

இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளது அமெரிக்க உயர்மட்டக் குழு. யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த 8 பேர் அடங்கிய அமெரிக்க வெளிவிவகார உயர்மட்ட அதிகாரிகள் வருகைதந்தனர்.

ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் விக்ரம் ஜேசிங், தெற்கு மற்றும் ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பதில் உதவிச் செயலாளர் ஜேம்ஸ் ஆர்.மூர், ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும்  தொழிலாளர் விவகாரங்களுக்கு பதில் உதவிச் செயலர் ஜோன்.பி.ஸிம்மர்மன் ஆகியோர் உள்ளிட்ட இந்தக் குழுவினர் யாழ்.மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினர். அதன் போதே இந்தக் கருத்தை வெளியிட்டனர்.

இலங்கையில் தற்போது தாம் அவதானித்த விடயங்கள் பற்றி அமெரிக்கக் குழு ஆயருக்கு தெரிவித்ததாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை வந்த அமெரிக்க குழு ஒன்று அவதானித்ததை விடவும் தற்போது நிலைமை இறுக்கமடைந்துள்ளது.

முன்னரைக் காட்டிலும் மக்கள் மீதான நெருக்குவாரங்களும், அரசின் கெடுபிடிகளும், இறுக்கமான நடைமுறைகளும் அதிகரித்துள்ளன. இதனையே நாம் வெளிப்படையாக  அவதானிக்க முடிந்துள்ளது.

இன்னமும் காணாமல் போனோர் பற்றிய விவரங்கள் எமக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த விவகாரத்தில் அரசு அக்கறை எடுத்திருந்தால் இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்வதை தடுத்திருக்க முடியும்.

போர் முடிவுக்கு வந்துவிட்டாதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. ஆயினும் உண்மையான போர் இன்னமும் முடிந்துவிடவில்லை என்று நாங்கள் கருதுகின்றோம். ஏனெனில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இன்னமும் களையப்படவில்லை. மாறாக இன முரண்பாடுகள் முன்னரைக் காட்டிலும் முனைப்புப் பெற்றுள்ளன என்றே கருதவேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=872151796628271109

  • தொடங்கியவர்

 போர் முடிவுக்கு வந்துவிட்டாதாக இலங்கை அரசு அறிவித்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. ஆயினும் உண்மையான போர் இன்னமும் முடிந்துவிடவில்லை என்று நாங்கள் கருதுகின்றோம். ஏனெனில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் இன்னமும் களையப்படவில்லை. மாறாக இன முரண்பாடுகள் முன்னரைக் காட்டிலும் முனைப்புப் பெற்றுள்ளன என்றே கருதவேண்டியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

 

கடைசித்தமிழன் இருக்கும்வரை சிங்களம் தனது போரை ஓயவிடாது.

 

இதைத்தான் புலிகள் உட்பட அனைத்து விடுதலை உணர்வுகொண்ட தமிழர்களும் கூறிவந்தனர், வருகின்றனர்.


இப்பொழுது என்றாலும் அமேரிக்கா உணர்வதுடன் நிற்காமல் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய காலத்தில் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.