Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனித உரிமை மீறல்களை தடுக்கவும்: ஜூலி பிஷப்பிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

Featured Replies

இலங்கையில் குறிப்பாக வடக்கில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இராணுவ நெருக்குவாரங்கள், மற்றும் சட்டவிரோதமான குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன. இவைகளை தடுத்துநிறுத்துமாறு அவுஸ்திரேலியாவின் எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

 

 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப்பிற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இந்த சந்திப்பு தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்றுக்காலை நடைபெற்றது.

 

இந்த சந்திப்பின் போது,


இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கான பிரதான நோக்கம் என்ன? சட்டவிரோமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக  என்ன? என்ன? வழிவகைகளை கையாள்கின்றனர். என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் கேட்டறிந்துக்கொண்டார்.

இதேவேளை, இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்வோரை தடுப்பதற்கான நோக்கத்துடனேயே தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிப் பிரதித்தலைவர் ஜூலி பிஷப் கூறினார்;.

அச்சுறுத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும்  சட்டவிரோத குடியேற்றங்கள்  ஆகியன காரணமாகவே யாழ். மாவட்டத்தில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு மக்கள் சட்ட விரோதமாக செல்கின்றனர். என்று எடுத்துரைத்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பிரதிநிதிகள் யாழ்.மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஆளும் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்விவை பெற்றுத்தருவதாக அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரிடம் எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது, யாழில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஊடக அடக்குமுறை தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.

 

aus2(27).jpg



aus3(10).jpg



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/57857-2013-01-28-09-47-21.html

  • தொடங்கியவர்

யாழ். அசம்பாவிதங்களின் பின்னணி படையினரா? துணைப்படையினரா? ஆஸி.எதிர்க்கட்சி பிரதித் தலைவர் கேள்வி



யாழ். மாவட்டத்தில் கடந்த சிலமாதங்களாக இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னணியில் உள்ளவர்கள் படையினரா? துணைப் படையினரா? .இவ்வாறு கேள்வியெழுப்பினார் யாழ். வந்த ஆஸ்திரேலிய எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் ஜீலிபிஷப்.

யாழ்.மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த ஆஸ்திரேலியக் குழுவினர்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி நிதிகளுடன் கலந்துரையாடினர்.

ஆஸ்திரேலியாக் குழுவில் எதிர்க்கட்சியின் பிரதித்தலைவர் , ஆஸ்திரேலிய எல்லைப்
பாதுகாப்புப் பேச்சாளர் மைக்கல் கீன்,லிபிரல் கட்சியின் பேச்சாளர் பிஷப் ஆகியோர் அடங்கியிருந்தனர்
.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பிரதேசசபைகளின் தலைவர்கள்,மாநகரசபை  முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆஸ்திரேலியாவுக்கு அதிகளவான தமிழ் மக்கள் இங்கிருந்து தஞ்சக் கோரிக்கையுடன் வருகின்றனர். அவர்கள் அருகிலுள்ள இந்தியாவுக்குச் செல்லாமல் ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு  ஏன் ஆஸ்திரேலியாவுக்கு வருகின்றனர்? என ஆஸ்திரேலியக் குழுவினர் இதன்போது கேள்வி எழுப்பினர்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை
இதற்கு பதில்அளித்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைத் தலைவர்கள் தமிழ் மக்கள் இங்கு வாழ்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமையே காணப்படுகின்றது.

படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் மிரட்டல்களினால் அவர்களால் இங்கு வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது.

தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவளித்தோர் மற்றும்  எமது கட்சிக்கு  (தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ) ஆதரவுஅளிப்போரை  அச்சுறுத்தும் வகையிலேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசை விமர்சித்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள்  காரணமின்றிக்கைது செய்யப்படுகின்றனர் .கடந்த இரண்டு மாதங்களில் 46 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி  நகரசபையில் உறுப்பினரொருவர்  சபையின் கூட்டத்தொடரில்  இராணுவ அத்து மீறல் தொடர்பில் எடுத்துரைத்தமைக்காக அவர் இராணுவத்தால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்
.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றியமைக்காக ஆண்,பெண் விடுதிகளுக்குள் படையினர் அத்துமீறிப் புகுந்து அராஜகத்ததில் ஈடுபட்டனர். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களும்  கைதுசெய்யப்பட்டனர்.

நிம்மதியாக வாழ முடியாது
இதனால் தமிழ் மக்கள் போர் முடிந்த பின்னர் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதனாலேயே இந்தியாவை விட பாதுகாப்பான நாடு என்று ஆஸ்திரேலியாவை அவர்கள் கருதுவதால் அங்கு வருகின்றனர் என்று பதில்அளித்தார்.

இதன் பின்பு கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலியக்குழுவினர், இதற்காக எவ்வளவு பணத்தைச் செலவு செய்கின்றனர்?  அதனை அவர்கள் அவ்வாறு மீளச் செலுத்துகின்றனர் எனக் கேள்வி எழுப்பினர்.

பத்து இலட்சம் ரூபாவரை ஆஸ்திரேலியப் பயணத்துக்காக  செலவு செய்கின்றனர். முதலில் ஒரு இலட்சம் ரூபா  பணத்தைக் கட்டி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு தரையிறங்கிய பின்னர்  இங்குள்ள உறவினர்கள் மிகுதிப் பணத்தைச் செலுத்துகின்றனர்  என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்  பதிலளித்தனர்.

ஆஸ்திரேலிய அரசு தமிழர்கள் அங்கு வருவதை தடை செய்தால்  தப்பித்துச் செல்லும்  மக்கள் என்ன  செய்வார்கள்  என்று ஆஸ்திரேலியக் குழுவினர் கேள்வியெழுப்பினர்.

இன்னொரு  நாட்டுக்கு நிச்சயமாக அவர்கள் தப்பித்துச் செல்வார்கள்  என்று பிரதேச  சபைத்தலைவர்கள் கூறினார்கள்
.
சரி,இங்கு கடந்த ஆறுமாதகாலமாகப் பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றன என்று சொல்கின்றீர்கள்.இவற்றைச் செய்வது  படையினரா அல்லது துணைப்படையினரா என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவர்  கேள்வியெழுப்பினார்.

யார் செய்கின்றார்கள்  என்று சொல்ல முடியாது. ஆனால் அரசை விமர்சிப்பவர்கள்,  அரசுக்கு எதிராகச் செயற்படுபவர்கள்  அச்சுறுத்தப்படுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர் .

இதேவேளை நேற்றுக்காலை மல்லாகத்தில் உள்ள கோணபுலம் நலன்புரி நிலையத்திற்கு ஆஸ்திரேலியக் குழுவினர் சென்றனர். அவர்களுடன் வலி.வடக்குப் பிரதேச சபைத்தலைவர் சோ. சுகிர்தனும் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகள்  தொடர்பில் விளக்கியிருந்தார்.



http://onlineuthayan.com/News_More.php?id=741011799029629862

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.