Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படத்தினை முற்றாக தடை செய்ய வேண்டும் : இலங்கை தவ்ஹீத் ஜமாஅத்

Featured Replies

கமல் ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தினை முற்றாக தடை செய்ய வேண்டும் என சற்று முன்னர் இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் படத்தினைப் பார்த்த இலங்கை தவஹீத் ஜமாஅத் தீர்க்கமாக முடிவு செய்துள்ளதாக அவ்வமைப்பின் துணைச் செயலாளர் ரஸ்மின் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

 

 

தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள விஸ்வரூபம் படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் தவ்ஹீத் அமைப்பினர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் போன்றோருக்கு இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் தணிக்கை குழுவினருடன் காண்பிக்கப்பட்டதனையடுத்தே மேற்கண்டவாறு ரஸ்மின் மௌலவி தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், படம் முழுக்க முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டியதோடு தீவிரவாதிகளை வழிநடத்தும் ஒரு வழிகாட்டி நூலாக குர்ஆனையும் காட்டியுள்ளார் கமல். எனவே நிச்சயமாக இப்படம் தடை செய்யப்பட வேண்டிதொன்றே.

 

தற்போது படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தினை வெளியிட தணிக்கை குழு முயற்சிக்கின்றது. ஆனால் இப்படத்தின் அனைத்து காட்சிகளும் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் தவறான முறையிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளதனால் இப்படத்தினை முற்றாக தடை செய்வதே சரியானது என எங்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.


எனவே இன்ஷா அல்லா இப்படத்தினை வெளியிடாமல் தடுப்பதற்கு நாங்கள் முழு முயற்சி எடுப்போம் என்றார்.

இதேவேளை இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கை சபை தலைவர் காமினி சுமனசேகர கருத்துத் தெரிவிக்கையில், விஸ்வரூபம் திரைப்படம் எந்தவொரு மதத்திற்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இல்லையென தாங்கள் கருதுவதாகவும் சில காட்சிகளை மட்டும் நீக்கி விட்டு விரைவில் இப்படத்தினை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படத்தின் தடை மீதான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2749

  • தொடங்கியவர்

'விஸ்வரூபம் விரைவில் வெளியாகும்' : இலங்கை தணிக்கைச் சபை

 

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர பிபிசியிடம் தெரிவித்தார்.



எனினும் வெளியிடுவதற்கு முன்னதாக முஸ்லிம் தலைவர்களுக்கு திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

 

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இந்த மாதம் 25-ம் திகதி வெளியான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தொடர்ந்தும் தடை உள்ளது.

 

படத்தை வெளியிட முடியாதவாறு தமிழக அரசு இருவார கால தடைவிதித்த நிலையில், அடுத்தக் கட்டமாக இலங்கையிலும் படத்தை வெளியிடாது நிறுத்தி வைத்திருப்பதாக இலங்கை அரசாங்கமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

 

'இந்த நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் தடைகள் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் இந்தப் படத்தில் எந்தவொரு மதத்தவர்களுக்கோ இனக்குழுக்களுக்கோ அநீதி ஏற்படுத்தும் விதத்தில் ஏதும் இல்லை என்பதுதான் எமது கருத்து' என்று பிபிசியிடம் கூறினார் இலங்கை தணிக்கைச் சபை தலைவர்.


படத்தில் ஆட்களைக் கொல்லுகின்ற வன்முறைக் காட்சிகள் உள்ளதாகவும் அவற்றை நீக்கிவிட்டே படத்தை வெளியிடத் தீர்மானத்துள்ளதாகவும் இலங்கை தணிக்கைச் சபை கூறுகிறது.

 

இந்தியாவில் விஸ்வரூபம் படம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாக காமினி சுமனசேகர தெரிவித்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2013/01/130128_viswaroopamlanka.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.