Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொக்கட்டிசோலை படுகொலை: நினைவு நிகழ்வுக்கு இராணுவம் திடீர் தடை! - ஆலய முன்றலுக்கு நிகழ்வு மாற்றம்!!

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுதின நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மதியம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறவிருந்தவேளை திடீரென அம்மண்ட வாயிலை இராணுவமும், பொலிஸாரும் பூட்டித் தடைவிதித்தனர். எனினும், நினைவுதின நிகழ்வை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய முன்றலில் கூட்டமைப்பினர் நடத்தியுள்ளனர்.

 

இந்தச் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தவை வருமாறு:

 

'மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் 1987 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் தமிழ் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் 26 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்வு நேற்று மதியம் 2 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில், நண்பகல் 12 மணிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக நடந்த விசேட பூஜைகளில் கலந்துகொண்ட நாம் நினைவுதின நிகழ்வு நடைபெறும் கலாசார மண்டபத்திற்கு சென்றோம்.

 

மதியம் 1.30 மணியளவில் திடீரென அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் மண்டப வாயிலுக்கு பூட்டுபோட்டு நினைவுதின நிகழ்வுக்குத் தடைபோட்டனர்.

      
காரணம் என்ன என்று நாம் அவர்களிடம் வினவியபோது, 'இது அரசின் மண்டபம். இதில் நினைவுதின நிகழ்வை நடத்த அனுமதிக்கவேண்டாம் என மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளது' என்று பதிலளித்தனர். அத்துடன் எம்மை அங்கிருந்து உடனே வெளியேறுமாறும் கடும் தொனியில் விரட்டினர்.

 

ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த நினைவுதின நிகழ்வை நடத்த கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்நிகழ்வை அரசு திட்டமிட்டுத் தடுத்துள்ளது.

 

எனினும், நாம் எதற்கும் அஞ்சாமல் இந்த நினைவுதின நிகழ்வை நேற்று மாலை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய முன்றலில் நடத்தியுள்ளோம்' என அரியநேத்திரன் தெரிவித்தார்.

 

நேற்று மாலை 3 மணியளவில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய முன்றலில் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தலைமையில் இந்த நினைவு தின நிகழ்வு நடைபெற்றது. 

 

இதில் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், கி.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம் (ஜனா), மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார், மு.இராஜேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் இணைத் தலைவர் சேயோன் மற்றும் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், கொக்கட்டிச்சோலை படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நினைவுதின உரைகள் ஆற்றினர்.

 

இந்த நினைவு தின நிகழ்வு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலய முன்றலில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இராணுவம் மற்றும் பொலிஸ் சி.ஐ.டியினர் அங்கு வந்து நோட்டமிட்டுக்கொண்டிருந்தனர் என்று தமிழ்க் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=b56d81d1-8600-49b6-870e-7660fbb4331a

  • தொடங்கியவர்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று : http://www.yarl.com/forum3/index.php?showtopic=115905

 

62312_469793236415361_2033774639_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.