Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஸ்ஸுக்குள் பாம்புகள் பயணிகள் பீதி

Featured Replies

பஸ்ஸுக்குள் பாம்புகள் பயணிகள் பீதி

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 00:05    
cobra-60-60.jpgபயணிகள் போக்குவரத்து பஸ்ஸிற்குள் பாம்புகள் படையெடுத்தமையினால் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் பீதியடைந்த சம்பவம் ஒன்று கலகெதரவில் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து குருநாக்கல் நோக்கி பயணித்த பஸ்ஸிலேயே இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பஸ்ஸில் பாம்பாட்டிகள் நால்வர் பயணித்துள்ளனர். அவர்களுடைய பெட்டிகளில் 9 நாகப்பாம்புகளும் மலைப்பாம்புகள் இரண்டும் இருந்துள்ளன. அத்துடன் குரங்கொன்றும் இருந்துள்ளது.

பாம்பாட்டிகள் போதையில் இருந்த சமையத்தில் பெட்டிக்குள்ளிருந்த பாம்புகள் வெளியே வந்து பஸ்ஸிக்குள் உலாவ ஆரம்பித்துள்ளன. இதனைகண்ட பயணிகள் செய்வதறியாது அபாயக்குரல் எழுப்பினர்.

அதற்குள் பாம்பொன்று சாரதியின் இருக்கைகே சென்று அவரின் கழுத்துக்கு அருகில் ஆடிக்கொண்டிருந்துள்ளது.

போதையில் இருந்த பாம்பாட்டிகளுக்கோ பாம்புகளை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை.

கடும் முயற்சிக்கு மத்தியில் சாரதி பஸ்ஸை கலகெதர பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதணையடுத்து தப்பினோம் பிழைத்தோம் என பயணிகள் பஸ்ஸிலிருந்து இறங்கிவிட்டனர்.

அதற்கு பின்னர் பாம்பாட்டிகளை கைது செய்த பொலிஸார் பஸ்ஸிற்குள் இருந்த பாம்புகளை பிடித்து பெட்டிக்குள் அடைக்குமாறு உத்தரவிட்டவே பாம்பாட்டிகள் பாம்புகளை பிடித்து அடைத்துக்கொண்டனர்.

அதற்கு பின்னர் பொலிஸார் அவர்களிடமிருந்த குரங்கு உள்ளிட்ட பாம்புகளை தம்வசப்படுத்தினர்.

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு பஸ்ஸை, சாரதியுடன் கடத்த முற்பட்டிருக்குது.

 

 

பஸ்ஸுக்குள் பாம்புகள் பயணிகள் பீதி

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013 00:05    
cobra-60-60.jpgஅதற்குள் பாம்பொன்று சாரதியின் இருக்கைகே சென்று அவரின் கழுத்துக்கு அருகில் ஆடிக்கொண்டிருந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.