Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏ9 வீதியில் 30 படை முகாம்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ9 வீதியில் 30 படை முகாம்கள்
news
ஏ9 பிரதான வீதியில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் 30 படைத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய படை முகாம்களும் உள்ளடங்கு கின்றன.
 
பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 30 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
இவ்வாறு தகவல் வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

 
பூநகரிப் பிரதேசத்தில் மாத்திரம் 806 ஏக்கர் நிலப்பரப்பில் 10 படைமுகாம்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதில் 30 ஆயிரம் படையினர் வரை நிலைகொண்டுள்ளனர். இதனைவிட ஏ9 வீதியில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான பகுதியில் 30 படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
வவுனியாவில் சென்.ஜோசப் படை முகாம், மாந்தை படை முகாம், தாண்டிக்குளத்தில் 56 ஆவது ரெஜிமென்ட், புளியங்குளத்தில் விசேட படைப்பிரிவு, குருசிடம் குளத்தில் விசேட படைப்பிரிவு, கனகராயன் குளத்தில் 19 ஆவது கஜபாகு ரெஜிமென்ட், கனகராயன் குளத்தில் 561 ஆவது ரெஜிமென்ட், கனகராயன் குளத்தில் 19 ஆவது இலங்கை படைப் பிரிவு, பெரிய குளத்தில் விசேட படைப் பிரிவு,
 
மாங்குளதில் 574 ஆவது ரெஜிமென்ட், மாங்குளத்தில் 53 ஆவது ரெஜிமென்ட், கொக்காவிலில் 632 ஆவது ரெஜிமென்ட், அறிவியல்நகரில் விசேட படைப்பிரிவு , இரணைமடுவில் தகவல் படைப்பிரிவு, கிளிநொச்சியில் 571ஆவது ரெஜிமென்ட்,
ஆனையிறவு, மாஞ்சோலை, புலோப்பளை, பளை, முகமாலை, எழுதுமட்டுவாள், வரணி, நுணாவில், நணாவில் மத்தியில் படைத்தளங்களும், மிருசுவிலில் கெமுனுபடைப்பிரிவும், கைதடியில் 3 ஆவது ரெஜிமென்ட், கைதடியில் 52 ஆவது படைப்பிரிவு, கைதடியில் 523 ஆவது படைத் தலைமையகமும் அமைந்துள்ளனஎன்றார்.
 
31 ஜனவரி 2013, வியாழன் 10:00 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=555271805031226509

மகிந்த சமர சிங்கா வடமாகாணம் முழுவதிலும் 13,000 இராணுவத்தினர் என்று முழு பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.

 

இந்த சமரசிங்காவுடன் பேசித்தான் புலம் பெயர் மக்களால் உசுப்பேற்றப்பட்டு குற்றச்சேயல்களில் ஈடுபடும் மணவர்களை வசந்தி விடுவிக்கிறாவாம். இந்த உண்மைகளை சொல்ல வருவதால் சிறீதரன் கிளிநொச்சியில் இருந்து புளுபிலிம் பார்க்கிறார் என்று பட்டம் கட்டப்படுகிறது.  இதில் புலம் பெயர் மக்களால் உசுபேற்றப்பட்டு புளும் பிலிம் பார்த்த சிறீதரனின் உதவிகளை விடுவித்து முடிய ஜெயராஜா கீதாஞ்சலியின் கருணைகளை பற்றி கட்டுரை எழுதுவராக்கும்.

 

எதோ நேரத்தை மினக்கெடுத்தி படித்தற்கு ஜெயராஜாவும் நிமிர்ந்திடட்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.