Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சக்களின் கணக்கு - வன்னியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ராஜபக்சக்களின் கணக்கு - வன்னியில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிமல்
01 பெப்ரவரி 2013
 
Gota%20Mahinda_CI.jpg

சரணடைந்தவர்கள் பற்றிய பிரச்சினை என்பது வெறுமனே புலிகளுடைய பிரச்சினை மாத்திரமல்ல. அது மக்களுடய பிரச்சினையாகவும் உள்ளது. புலிகள் சரணடைந்த பொழுது லட்சம் மக்களும் படைகளிடம் சரணடைந்தனர். விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் பல பொதுமக்களும் கொண்டு செல்லப்பட்டார்கள். யுத்தம் முடிந்து இலங்கை அரச படைகளினால் அவர்களின் வாகனங்களில் இவர்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள்? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் வீடுகள் ஒவ்வொன்றிலும் இன்னும் காத்துக் கிடக்கிறது.


மகிந்த ராஜபக்சவின் அழைப்பு


 'ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டுப் படையினரிடம் சரணடையுமாறு நான் மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுக்கின்றேன். இதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது. எக்காரணத்தைக் கொண்டும் படைநடவடிக்கை நிறுத்தப் படமாட்டாது. அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக புலிகள் ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைய வேண்டும். புலிகளை கடலில் தள்ளவும் முடியாத சூழலே தற்போது தோன்றியுள்ளது' 


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது 2009 பெப்ருவரி மாதம் முதல் வாரத்தில்இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். இலங்கை அதிபர் ராஜபச் யுத்தம் தொடங்க முன்பே புலிகளை சரணடையுமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்தார். விடுதலைப் புலிகளுக்கு மக்களில் அக்கறை இருந்தால் அவர்கள் சரணடைவார்கள் என்றெல்லாம் உலக அளவில் பிரசாரத்தில் ஈடுபட்டது இலங்கை அரசு. முதலில் சரணடைய மறுத்து தொடர்ந்து யுத்த்தில் ஈடுபட் புலிகள் இறுதியுத்தத்தில் தமது ஆயுதங்களை மௌனிப்பதாகக் கூறி சரணடைந்தார்கள். 


சரணடைந்தவர்கள் தொடர்பில் தமிழ் மக்களை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கடுமையாக ஏமாற்றி அலைக்கிழித்து வருகிறது. எங்கள் பிள்ளைகளை விடுங்கள்! எங்கள் உறவுகளை தாருங்கள்! என்று தமிழர் நகரங்களில் மக்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜபக்ச அரசு உயிரோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. 


கோத்தபாய ராஜபக்சவின் கணக்கு


'வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது படையினரால் பதியப்பட்டு பொறுப்பேற்கப்பட்ட எவரும் காணாமற்போகவில்லை. இறுதிப்போரில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்கள், இந்திய வைத்தியசாலைகள் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஆகியவற்றினூடாகவே வருகை தந்தனர். எனவே, அவர்களிடம் போய்ச் சேர்ந்தவர்கள் தொடர்பில் இந்தியாவும் ஐ.சி.ஆர்.சி.யுமே பொறுப்புக்கூறவேண்டும்'


இப்படி அண்மையில் பேசியிருக்கிறார் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச. காணாமல் போனவர்கள் என்ற வகையில் இலங்கை அரச படைகளால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்ற உண்மையை மறைக்க யாரும் சரணையவி;ல்லை என்று ராஜபக்ச சொல்லுகிறார். இறுதிப்போரின் பொழுது படையினரிடம் சரணடைந்த எவரும் காணமற்போகவில்லை என்று ராஜபக்ச சொல்லுகிறார். முன்பு ஒருமுறை தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை என கருத வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 


சரணடைந்த மக்கள் முன்னிலையில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி, எழிலன், ஞானம், அரசண்ணா போன்ற பல முக்கியஸ்தர்கள் சரணடைந்திருந்தார்கள். இவர்களுடன் பல போராளிகளும் பல பொதுமக்களும் சரணடைந்தார்கள். காணாமல்போனது என்பது இந்த முக்கிய போராளிகள் மட்டுமல்ல. பல அப்பாவி இளைஞர்களும் யுவதிகளும்தான். 


பசில் ராஜபக்சவின் கணக்கு


'பெயர் குறிப்பிடப்படாத விடுதலைப்புலிகளின் நபர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும்' 


இது ராஜபக்சவின் இன்னொரு தம்பியும் இலங்கை அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச சரணடைந்தவர்கள் தொடர்பில் முன்பொருமுறை குறிப்பிட்ட விடயம். இலங்கை அரசு சரணடைந்தவர்கள் என்ற பெயரில் பதினொராயிரம் இளைஞர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. அப்படியெனில் அவர்களுக்கு என்ன நடந்தது? 


தமிழ் மக்களை யுத்தத்தில் கொல்லவில்லை என்று எப்படி இனப்படுகொலையை மூடி மறைத்ததோ அப்படித்தான் காணாமல் போகவில்லை என்றும் பட்டியலில் இல்லாதவர்கள் உயிரோடு இல்லை என்றும் ராஜபக்சக்கள் குறிப்பிடுகின்றனர். விடுதலைப் புலிகள் எப்பொழுது எப்படிச் சரணடைந்தார்கள் என்பதும் யார் யார் சரணடைந்தார்கள் என்பதும் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் இந்த உலகம் அறிந்தததே. ஆனால் ராஜபக்சக்களின் இந்த மரண விளையாட்டை - இனப்படுகொலையை யாரும் தட்டிக்கேட்க முடியாத நிலைமையே காணப்படுகிறது. இதனாலேயே இவர்கள் யாரும் சரணடையவில்லை இல்லை என்றும் பட்டியலில் இல்லாதவர்கள் உயிருடன் இல்லை என்றும் மிகவும் சாதாரணமாகச் சொல்லிவிட்டு இருக்கிறார்கள். 


காணாமல் போனவர்களின் கணக்கு


நாலரை லட்சம் மக்கள் போருக்கு முன்னர் வன்னியில் வாழ்ந்துள்ளார். ஆனால் வெறும் எழுபதாயிரம் பேரே வசிப்பதாக இலங்கை அரசு சொன்னது. இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆனைக்குழுவுக்கு அரச அதிபர்கள் வழங்கிய எழுத்துமூல புள்ளிவிபர சாட்சயத்தின்படி 2008ஆம் ஆண்டு  ஐப்பசி வரையில வன்னியில் 429, 059 பேர் வசித்துள்ளார்கள். ஆனால் இறுதியுத்தத்தின் பின்னர் தடுப்புமுகாங்களுக்கு வந்த மக்களை 2009 ஜீலையில் செய்ய ஆய்வின் பொழுது 146, 679 பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இறுதியுத்தம் முடிந்த பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தகவல்களின்படி 17500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்திருப்பதாக சொல்லப்பட்டது. பின்னர் அதற்குப் பிறகு 15000 வரையான புலிகள் தம்மிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 13500, 12500, 11500 என்று சரணடைந்த புலிகளின் எண்ணிக்கை மாற்றப்பட்டு இறுதியில் பதினொராயிரம் பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியெனில் 6500 பேரும் யார்? அவர்கள் எங்கே? யுத்தத்திற்கு முன்பு இருந்தவர்களது புள்ளி விபரங்களையும் யுத்த்திற்குப் பின்னர் எஞ்சியவர் புள்ளி விபரங்களும் சரணடைந்தவர்களின் மாறிக்கொண்டு எஞ்சிய புள்ளி விபரங்களும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கணக்கை தெளிவாகச் சொல்லுகின்றன. 


சரணடைந்து காணாமல்போனவர்களின் உறவுகள் கண்ணீரும் வாழ்க்கையுமாக இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள்! என்றுதான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்ச் சனங்கள். தமிழர்களை எப்படி இரக்கமற்ற வகையில் தொகை தொகையாக கொன்றாழித்ததே அப்படித்தான் இரக்கமற்ற வகையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலும் ராஜபக்சக்கள் பேசுகின்றனர். காணாமல்போனவர்கள் தொடர்பில் ராஜபக்சக்கள் குறிப்பிடும் கணக்கு அவர்களது இனப்படுலையையும் போர்க் குற்றத்தையுமே அம்பலப்படுத்துகிறது. காணாமல் போனவர்களுக்கு இலங்கை அரசம் அதன் படைகளும் என்ன செய்தன என்று இலங்கை அரசை விசாரணை செய்ய வேண்டும். 


குளோபல் தமிழச் செய்திகளுக்காக நிமல்

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/88151/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.