Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்பிரேரணை அரசியலமைப்பிற்கு அமைவானது: ஐ.சீ.யூ

Featured Replies

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பிரதம நீதியரசர் மீதான குற்றப்பிரேரணை அரசியலமைப்பிற்கு அமைவானது. இலங்கை அரசியலமைப்பிற்கு அமைவான செயன்முறைகளை பின்பற்றி அந்த விவகாரம் மேற்கொள்ளப்பட்டதனால் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு தங்களுடைய ஆதரவை வழங்குவதாக யூரிகள் சர்வதேச பேரவை தெரிவித்துள்ளது.

 

யூரிகள் சர்வதேச பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றப்பிரேரணையானது இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தேவையான சகலதும் நிறைவேற்றப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையாலும் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குற்றப்பிரேரணை தொடர்பில் அரசியலமைப்பில் விதிக்கப்பட்ட செயன்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

 

பிழையான, பக்கச்சார்பான முறையினை குற்றப்பிரேரணை இலங்கையில் கடைப்பிடிப்பதாக கூறி இலங்கைக்கு அபகீர்த்தியை உண்டாக்கும் சில அமைப்புகள் முயலுகின்றன. அந்த செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.


இலங்கையின் சட்டங்கள் தெரியாதவர்கள் பிரதம நீதியரசர் பதவியிறக்கப்பட்டதை கண்டிப்பதையிட்டு நாம் கவலையடைந்துள்ளோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் பிரதம நீதியரசருக்கு பூரண ஆதரவை தாம் வழங்குவோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58150-2013-02-01-16-40-56.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.