Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கிறது

Featured Replies

இலங்கை கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கிறது; திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு

 

சர்வதேச நாணய நிதியத்தில் தொடர்ந்தும் கடன் வாங்கப்போவதில்லை என மத்திய வங்கி அறிவித்தாலும் உண்மையான கதை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசு சர்வதேச நாணய நிதியம், சீனா மற்றும் தனியார் வங்கிகளில் வேண்டிய அளவு கடன் பெற்றுள்ளதாகவும் அதனால் நாடு சிக்கலில் விழுந்துள்ளதாகவும்,

எனவே கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்காது என்பதால் தப்பித்துக் கொள்ள கடன் பெற மாட்டோம் என அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கவே கடன் வாங்க மாட்டோம் என மத்திய வங்கி கூறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=580221832812589131

இது நல்ல செய்தி.(உண்மையாக இருக்க வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்
No more IMF loans -Central Bank
 
 Government has decided not to pursue a fresh support facility form the International Monetary Fund but will continue to maintain the close relationship with the lender under standard consultation processes similar to many other member countries. The Central Bank of Sri Lanka in a statement released today said since the completion of the 2.6 billion dollar Stand-by-arrangement in July 2012, Sri Lankan authorities and the IMF have been engaging in a dialogue on the future relationship between Sri Lanka and the Fund.
 
 The Central Bank noted, Since Sri Lanka is in a better economic position now with gross reserves amounting to 7 billion dollars than with the 1 billion dollars of reserves it had when the SBA was approved in July 2009, there is very little need for the government to build up a further cushion in external reserves through traditional IMF Balance of Payment support programs.
 
Under these circumstances, Sri Lankan authorities had expressed their interest only in a future IMF support to finance the budget to achieve government target of 5.8 percent of GDP fiscal deficit in 2013 and below 5 percent in years ahead.
 
 However, following discussion Sri Lankan authorities had with the visiting IMF delegation, the IMF has indicated that the Fund may not be in a position to consider any direct or indirect budget support to Sri Lanka, since the current improved state of the country does not warrant unconventional and exceptional financial support.
 
 According to the Central Bank, the IMF is also of the view that Sri Lanka has now developed well-established access to international capital markets and therefore budget support if necessary, could be conveniently accessed from such markets.
 
  • தொடங்கியவர்

கொடுப்பது கடன், நன்கொடை அல்ல.

 

கடனை கொடுக்கும்பொழுது திருப்பிகொடுக்கும் வல்லமை உள்ளதா? என பார்த்து தான் யாரும் கொருப்பார்கள். இது தனி மனிதனுக்கும் பொருந்தும், நிறுவனத்திற்கும் பொருந்தும்,  நாட்டிற்கும் பொருந்தும்.

 

சரிந்துவரும் சிங்கள  பொருளாதாரத்தை நம்பி ஏமாற தயாரில்லை

மேற்கு நாடுகள் "தேவை என்றால் சீனாவிடம் போய் வாங்கு" என்றிருக்கிறார்கள். போன தடவை கில்லரியை சோனியா மிரட்டியது போல மிரட்டுவதற்கு, 1).இந்த தடவை ஓபாமா அரசாங்கம் நன்றாக இப்போது காலூன்றியிருக்கிறது, 2).சோனிய, வக்கறுந்து போயிருக்கும் காங்கிரசின் நிலையில் இன்னொரு முறை யாருடனும் பலப்பரீட்சையில் இறங்கும் நிலையில் இல்லை(காங்கிரசுக்கு ஒரு காலம், IMF க்கும் ஒருகாலம்) ஆகிய காரணங்களால் முடியவில்லை. மேலும் இந்தியா இந்த முறையும் தான் கடன் கொடுப்பேன் என்றால் "அதுவும் நன்மைக்குத்தான்" என்று IMF மறைமுகமாக சொல்கிறது.

 

The Central
Bank noted, Since Sri Lanka is in a better economic position now with gross reserves amounting to 7 billion dollars than with the 1 billion dollars of reserves it had when the SBA was approved in July 2009, there is very little need for the government to build up a further cushion in external reserves through traditional IMF Balance of Payment support programs.

உந்த பழம் புள்ளிக்கும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

மத்திய வங்கியில் உள்ளவர்களும் தங்கள் பங்கிற்கு 'உழைக்கின்றார்கள்'

 

The United National Party (UNP) yesterday urged the government to sack Central Bank Governor Ajith Nivard Cabaral and Treasury Secretary P. B. Jayasundera over allegations that they were responsible for the ‘fraudulent deal’ between the EPF and The Finance Company.

 

http://www.dailymirror.lk/news/25610-sack-cabraal-and-pbj-unp.html

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வழங்காமைக்கு ஜெனீவா விவகாரமே காரணம் : பிமல் ரத்னாயக்க        

ஜெனீவா விவகாரம் கரணமாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க விரும்பவில்லையெனத் தெரிகின்றது. அது தான் உண்மை நிலையாகும் என்று ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

 

பத்தரமுல்லையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற சேஷலிச இளைஞர் முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு, ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

சர்வதேச நாணய நிதியத்திடம் தாம் கடன் வாங்க மாட்டோமென இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இது உண்மையல்ல. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான மனித உரிமை விவகாரம் காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்கவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகத் தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2995

Public Accounts Committee Member R. Yogarajan. இந்த ஆளு யாரின் வாலு? எப்படி அங்கே போய் உட்காந்திருக்கிறார்? சிராணியின் கதை இவர் கேள்விப்படாதா? அல்லது நிவாட், ஜெயசுந்த கோமாளிகளை அரசுதான் வீட்டுகு அனுப்ப ரணிலுக்கு கப்பம் கொடுத்திருக்கா?

  • தொடங்கியவர்

Public Accounts Committee Member R. Yogarajan. இந்த ஆளு யாரின் வாலு? எப்படி அங்கே போய் உட்காந்திருக்கிறார்? சிராணியின் கதை இவர் கேள்விப்படாதா? அல்லது நிவாட், ஜெயசுந்த கோமாளிகளை அரசுதான் வீட்டுகு அனுப்ப ரணிலுக்கு கப்பம் கொடுத்திருக்கா?

 

அவர் தமிழர் என்பதால், மகிந்தவிற்கு எதிராக செயல்பட்டால் 'பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு' 'புனர்வாழ்விற்கு' அனுப்பப்படுவார் :(

  • தொடங்கியவர்

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறாவிட்டால் வர்த்தக வங்கிகளில் பண புழக்கம் குறையலாம்??

 

cartoon-of-the-day-14_02-600-1.jpg

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் பெறாவிட்டால் வர்த்தக வங்கிகளில் பண புழக்கம் குறையலாம்??

 

cartoon-of-the-day-14_02-600-1.jpg

IMF இடமிருந்து கடன் பெறாமல், அதே நேரம் இலங்கையில் மட்டும் செயல்படும் வங்கிகளில் கடன் பட்டால் இலங்கைக்குள் பணப்புழக்கத்திற்கு கஸ்டம் ஏற்படும். அப்படி ஒரு நிலைமை இருந்திருந்தால் இலனகை IMF இடம் போயிருக்காது. இலங்கையில் பணவீக்கம் குறைவது வன்ங்கிகளில் வறட்சி காணப்டுவதனாலா தெரியாது.   இதனால் இந்த கடன்கள் வெளியில் இருந்து மட்டும்தான் வருகிறது என்று கொள்ளலாம். இந்த வர்த்தகடன்களுக்குள்  சீனா அரசு கொடுப்பதும் அடங்குகிறதாகத்தான் கொள்ள வேண்டும். சீனாவின் கடனானது வேலைகளுக்கும், தொழில்களுக்குமே. IMF இன் கடன்மாதிரி இறக்குமதி ஏற்றுமதி சமன் பாட்டுக்கு உதவாது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.