Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் மாநாட்டை நடத்த நிபந்தனைகள் – அரசுக்கு பொதுநலவாய அமைப்பு அதிர்ச்சி வைத்தியம்!

Featured Replies

இலங்கையில் மாநாட்டை நடத்த நிபந்தனைகள் – அரசுக்கு பொதுநலவாய அமைப்பு அதிர்ச்சி வைத்தியம்!

பொதுநலவாய நாடுகள் அமையத்தின் மாநாடு இலங்கையில் நடத்தப்படவேண்டுமானால் இலங்கை அரசு முக்கியமான நிபந்தனைகள் சிலவற்றை நிறைவேற்றவேண்டுமென பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் தங்கியுள்ள பொதுநலவாய நாடுகள் அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இந்த நிபந்தனைகள் அடங்கிய கடிதத்தை அரசிடம் ஒப்படைத்திருப்பது அரசுக்கு கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.

மனித உரிமைகள், தேர்தல்கள், ஊடக சுதந்திரம் ஆகிய மூன்று துறைகளுக்கும் சுயாதீன ஆணைக்குழு நிறுவப்படவேண்டும், பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி சிவில் நிர்வாக சேவையாக மாற்றுதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அமுலாக்கம் உட்பட்ட முக்கிய கோரிக்கைகளையே பொதுநலவாய அமையம் நிபந்தனைகளாக முன்வைத்துள்ளது.

பொதுநலவாய அமையத்தின் இந்த நிபந்தனைகளால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை அரசு, இந்த நிபந்தனைகள் தொடர்பில் அவசர ஆலோசனைகளை உள்ளூர நடத்தி வருகிறது.

பொதுநலவாய நாடுகள் அமையத்தின் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படமுடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் அமையத்தின் மாநாடு இலங்கையில் நடக்கக்கூடிய வாய்ப்பு இல்லையென இராஜதந்திர வடாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமையத்தின் மாநாடு ஏற்கனவே திட்டமிட்டபடி இலங்கையில் நடைபெறாத பட்சத்தில் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து அந்த அமைப்பிலிருந்து விலகிக்கொள்வது தொடர்பில் இலங்கை ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=e4420752-8b88-40f7-9122-37a331b82880

சிங்களத்திற்கு இரண்டு தெரிவுகள் உள்ளன, மூன்று நிபந்தைகளையும் நிறைவேற்றுவது இல்லை பொதுநலவாய நாடுகளின் குழுமத்தில் இருந்து விலகுவது.
 
மகிந்த சிந்தனை என்ன முடிவை எடுக்கும்?

அநேகமாக  பங்களாதேசம் சென்ற பீரிஸ் ஊடாக சில ஏமாற்று நாடகங்களை ஆடும். ஆனால் இந்த முறை இந்த வித்தைகள் பயனளிக்காது!

பொதுநலவாய மாநாட்டுக்கான இடத்தை மாற்றவும்: ஐ.சி.ஜே
புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013 02:06  

 

பொதுநலவாய அமையத்தின் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான இடத்தினை மாற்றுமாறு சர்வதேச யூரிகள், பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இதுதொடர்பில் சர்வதேச யூரிகள் அவருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது. அந்த கடிதத்துடன்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தையும் இணைத்துள்ளது.

 

தங்களின் முன்னைய அறிக்கைகளை கருத்திற்கொண்டு 2013 பொதுநலவாய அமைய  தலைவர்களின் உச்சிமாநாட்டை இடத்தினை மாற்றும்படி நாம் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

 

சட்டவிரோதமாக குற்றப்பிரேரணை செயன்முறை இலங்கையில் மனித உரிமைகளுக்கான மற்றும் சட்டத்தில் ஆட்சி என்பவற்றுக்கான மரியாதை மோசமடைந்து வருவதை கோடிட்டு காட்டியுள்ளது. இந்த போக்கை 'பொறுப்பில்லாத அதிகாரம்'எனும் எமது அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

 

இப்போதைய சூழலில் இலங்கையை பொதுநலவாய அரசாங்க தலைவர்கள் மாநாட்டை நடத்த அனுமதிப்பது ஜனாதிபதி, சட்டத்துறையின் சுயாதீனம், சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பொதுநலவாயத்தின் அக்கறை பற்றி கடுமையான வினாக்களை எழுப்ப வழிவகுக்கும்.

 

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படின் எம்முடன் தொடர்புகொள்ள தயவுசெய்து தயங்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58804-2013-02-12-16-38-28.html

குறித்த ஒரு நாட்டின் சனநாயக விளுமிங்கள் மீறப்படும் இடத்து அந்த நாட்டில் பொதுநலவாய நாடுகளின் கூட்டம் தடுக்கப்படும் இடத்து அந்த நாட்டின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு சரிசெய்யப்படும் வரை அந்த நாட்டின் ஒருப்புரிமை ஒத்திவைக்கப்படும்.

 

இந்த அவலம் தமக்கு நடக்க முன்னர் தாமே விலகுவதாக சிங்களம் அறிவிக்க உள்ளது.

 

அதாவது பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு தாகமாக இலங்கையை ஒதுக்கி வைத்தால் அவர்களின் மீது விசாரணையை மேற்கொள்ளமுடியும் தாமாக விலகினால் விசாரிக்கப்பட்டம்ல் தப்பிக்கொள்ள முடியும்.

 

முடிந்தளவு போதுலவாய நாடுகளின் கூட்டமைப்பை பயன்படுத்துவது இலாத பொது வெருட்டிப் பார்ப்பது இதுவே சிங்களத்தின் திட்டம்.

 

எடுபடுமா பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பு?

Statement by Commonwealth Secretary-General Kamalesh Sharma on conclusion of his official visit to Sri Lanka

 

As a result of consultations during this visit, we have agreed to enhance collaboration in the areas outlined below:

 

  • Electoral institutions and processes
  • Human Rights Commission
  • Reconciliation
  • Judiciary
  • Independent media

Contact:

Mr Richard Uku
Spokesperson / Director of Communications and Public Affairs
Commonwealth Secretariat
Mobile Tel (Sri Lanka): +94 (0) 78 888 0384 [until 19:30 hrs Colombo time 13 Feb)
Tel: +44 (0) 20 7747 6380
Mobile Tel: +44 (0) 7711 187784
Email: r.uku@commonwealth.int
Website: www.thecommonwealth.org



http://www.thecommonwealth.org/news/34580/253210/130213srilankasgdeparture.htm

பொதுநலவாய மாநாடு: மனோ கணேசன்

 

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் ஷர்மா இங்கு வந்து சொன்னது என்ன? பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறும் என்பதை உறுதி செய்யவே அவர் வந்தார் என்று அரசாங்கம் சொல்லி திரிகிறது.

 

அது உண்மை அல்ல. மாநாடு நடைபெறுவது சம்பந்தமாக அவர் எந்த ஒரு உறுதிமொழியையும்  தரவில்லை என பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது.


உண்மையில் மாநாடு நடைபெற வேண்டுமானால் அரசாங்கம் மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவை தொடர்பில் பொதுநலவாய  கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்வதற்கே அவர் வந்தார்.

 

இன்று இந்த அரசின் மனித உரிமை, ஊடக சுதந்திரம் என்பவை பற்றிய வரலாறு எமக்கு தெரியும். எனவே இன்று, பொதுநலவாய அமைப்பை ஏகாதிபத்திய அமைப்பு என்று சொல்லி அதிலிருந்து வெளியேற அரசாங்கத்திற்குள் ஆலோசிக்கப்படுகிறது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/58848-2013-02-13-10-18-34.html

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.