Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமுதாயத்தை த்தை சீரழிக்கும் இந்த காதலர் நாள் என்பது தேவையா ?

Featured Replies

485182_487812244599593_388303351_n.jpg

கட்டாய காதல் என்று கட்டாயப்படுத்தி அமில வீச்சுக்கு ஆளான தங்கை வினோதினியின் உயிரழப்பிற்கு பிறகு காதலர் நாள் கொண்டாடுவது நமக்கு தேவையா ?

ஆண்டு முழுக்க காதலியுங்கள் தவறில்லை .அதை கொண்டாடும் நாள் என்பது தேவையா?ஒருவரை கட்டாயபடுத்தி காதல் செய்யவும் , வாழ்த்து கூறும் நிலையை உருவாக்கும் இந்த காதலர் நாள் தேவையா ?

வணிகர்கள் தங்கள் வணிகத்தை பெருக்குவதற் காக திட்டமிட்டு பெருக்குவதற்காக இந்த நாளை கொண்டாட இளையோர்களை தூண்டுகிறார்கள். தங்கத்தை விற்பனை செய்ய அட்சய திருதை என்ற நாளை உருவாக்கியதுபோல காதலர்நாளை உருவாக்குகிறார்கள். 

இறுதியாக தங்கை வினோதினியின் இறப்பு என்பது என் மனதிற்கு கடுமையான வலியை ஏற்படுத்தினாலும் இந்த மனித நேயமற்ற மனித தாக்குதலிருந்து அவள் விலகி சென்று விட்டாள். கண் இழந்து ,புற தோற்றத்தை இழந்து அவள் படும் துன்பத்திலிருந்து இன்று மீண்டு விட்டாள்.மனித நேயமற்று உதவி செய்ய மறுக்கும் அரசுகளிட மிருந்து வெகு தூரம் சென்று விட்டாள்.

வினோதினியின் பெற்றோர் தங்கள் சாதிய தலைவரிடம் சென்று இது போன்று பொறியியல் (B.TECH) படித்து தகவல் தொழில் நுட்ப நிறுவனத் தில் வேலை செய்யும் என் பெண்ணை, கொத்தனார் கூலி வேலை செய்யும் ஒருவன் காதல் என்ற பெயரில் துன்புறுத்து கிறான் என்று கூறி உதவி கேட்டதற்கு ,அவர் நம் சாதிகாரன் தானே திருமணம் செய்து விடுங்கள் என்று கூறிய அந்த சாதிய வெறியன் கூட்டத்திலி ருந்து தப்பி விட்டாள்.அவன் மகளாக இருந்தால் இப்படி பேசியிருப்பானா ? .

அமில வீச்சால் அவள் பட்ட வலியை எக்காலத் திலும் நாம் உணர முடியாது .அவள் இவ் உலகை விட்டு விலகிய நாள் வலியிலிருந்து விடுபட்ட எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாள்.என்பது (என் தனிக் கருத்து

பிப்ரவரி 14 உலக காதலர் நாள் :நமக்கு தேவையா ? 

உலகம் முழுதும் கொண்டாடப் படும் பிப்ரவரி 14 உலக காதலர் நாள் : 'வாலண்டைனின் தினம்' 1800 ஆண்டுக ளுக்கு முன் பிறந்தது. ஆனால் சங்க கால சோழர் காலத்தில் தமிழர்களால் காதல் நாள் (விழா )பிறகு காமத் திருவிழாவாக ஆண்டு தோறும் ஒரு திங்கள் முழுக்க கொண்டாடப் பட்டு வந்துள்ளது .

பண்டைய தமிழகத்தில் காதலும் வீரமும் தமிழர் பண்பாடு என்பதனால்,தமிழர்தம் மறத்தையும் காதல் அறத்தையும் இணைத்து உலகுக்கு உணர்த்தும் திருவிழாவாகக்,உண்மைக் காதலையும் காதலரையும் போற்றும் விழாவாக காதலர் விழாவை கொண்டாடியுள்ளனர் .

அகத்திய மாமுனிவர் இட்ட ஆணையை ஏற்று, தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன், காதல் திருவிழாவை, ஒழுக்க பெருமக்கள் வாழ்ந்த காவேரி பூம்பட்டினத்தில் விழாக் கோலம் பூண்டு 28 நாட்கள் திங்கள் முழுக்க கொண்டாடினான் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

ரோமாபுரியினரால் தொடங்கப்பட்டு நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்ற காதலர் நாள் (VALENTINES DAY) தமிழகத் திலிருந்து சென்றதாகவே இருக்க வேண்டும்! காரணம், காதல் திருவிழா நடத்திய சோழர்களின் காலத்தில், சோழர் மாளிகையில், மன்னர்க்கு மெய்க்காப் பாளர்களாக, போர் வீரர்களாக,வணிகம் செய்ய வந்தவர்களாக ரோமாபுரி வீரர்களே இருந்தனர். அவர்கள் காதல் விழாவை கண்டு அந்த பழக்கத்தை தங்கள் நாட்டிருக்கு கொண்டு சென்றிருக்க் வேண்டும் 

கிருத்துவ காதல் நாள் உருவான கதை :-

1800 ஆண்டுகளுக்கு முன் ரோமப் பேரரசை கிளாடியஸ் என்னும் பேரரசன் ஆண்டு வந்தான் .அவனது ஆட்சி காலத்தில் மக்கள் போர் படையில் சேர நாட்ட மில்லாமல் காதல் குடும்பம் என்று இருந்து வந்தனர் .எனவே தன்னுடைய ஆட்சியில் யாரும் காதலிக்க கூடாது என்று தடை விதிதான். 

இதை எதிர்த்து கிருத்துவ அருட்தந்தை வாலண்டைன் என்பவர் காதல் திருமணங்களை கமுக்கமாக நடத்தி வந்தார்.இதை அறிந்த அரசன் அவரை கி.பி. 14-2-270 அன்று கொடூரமாக படுகொலை செய்தான். அவரது நினைவாக போப் ஆண்டவர் கி பி .14-2-498 இல் காதலர் நாளாக அறிவித்தார்.இதுவே நாளடைவில் உலக மக்கள் கொண்டாடும் விழாவாக மாறியுள்ளது.1980 இல் இருந்து இந்தியாவில் தங்கள் காதலை தெரிவிக்கும் நாளாக இங்குள்ள இளையோர்கள் கொண்டாடி வருகின்றனர் .

தமிழர்களின் காதலர் திங்கள் விழா :

சங்க கால இலக்கியங்களில் காதலும் வீரமும் தமிழர் வாழ்வியலின் இரு அங்கங்களாக இருந்தன.ஆண்கள் வீரமுடையவர்களாக இருக்க வேண்டும் என பெண்கள் விரும்பினர்.அவர்கள் மீதே காதல் வயப்பட்டனர்.பெண் அடிமைத்தனம் அன்று இருந்ததில்லை.

காதல் வாழ்க்கை களவு என்றதுபோல் திருமண வாழ்க்கை கற்பு எனப்பட்டது. தொடக்கத்தில் கற்பு என்பதன் பொருள் தாயும் தந்தையும் கற்பித்தபடி நடத்தல் என்றுதான் இருந்தது.பெற்றோற் ஓப்புதலி ன் கீழ் நடக்கும் காதல் திருமனத்தையே ஆதரித்த னர் ஒருதாரக் குடும்ப அமைப்பு இறுகியபோது, ஆண் தலைமைத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட் டபோது, கற்பு என்பதன் பொருள் கணவனுடன் மட்டும் உடல் உறவு கொள்ளுதல் என்று ஆனது. 

காதலுடன் காமத்தின் உச்சியில் தங்கள் காம உணர்வை வெளிக்காட்டும் வகையிலும் ,தலைவனும் தலைவி யும் மன நிறைவுடன் புணர்ச்சி கொள்ளுதல்,என காதல் ரசம் சொட்ட சொட்ட பண்டைய இலக்கியங்கள் காதலை பற்றி எடுத்தியம்பு கின்றன .அதில் பெண்ணின் உச்சக்கட்ட காம உணர்வு, நீண்டநாள் பிரிவின் ஏக்கம் பற்றி ஏராளமான் பாடல்கள் உள்ளன . அதில் ஒன்று 

“கன்றும் உண்ணாது கலத்தினுள் படாது

நல் ஆன் தீம் பால் நிலத்தில் உக்கா அங்கு

எனக்கு அகாது என்னைக்கும் உதவாது

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமைக் கவினே.

கன்றும் குடிக்காமல், பாத்திரத்திலும் கறக்காமல், நிலத்தில் வீணே வழிந்துபோகும் பசுவின் பாலைப் போல, எனக்கும் உதவாமல், என் தலைவனுக்கும் இல்லாமல் என் அழகும்,இளமையும் என் பெண்மையும் என் தலைவனின் ஆண்மையும் விணாகிக் கொண்டிருக் கின்றதே.என் பெண்மை என் தலைவனின் ஆண்மைக் காக ஏங்கி தவிக்கிறதே (இப்படித்தான் கொஞ்சம் மறைச்சு பொருள் விளக்கம் தரமுடியும்) என்னும் பொருள் பட கூறப்பட்டுள்ளது . 

சங்க கால இலக்கியங்களில் திருமணம் மிக எளிமையாகக் குறிப்பாகப் பிராமணச் (ஆரிய ) சடங்குகள் இன்றி நடைபெற்றிருக்கிறது. அகநானூற்றில் இரண்டு திருமண விவரங்கள் பேசப்படுகின்றன.

வளர் பிறை நாளன்று காலையில் திருமணம் செய்வதையே தமிழர்கள் நல்ல நேரமாக நம்பியிருக் கிறார்கள். நிறைய கால்களை நட்டுப் பெரிய பந்தல் போட்டு, மலர் மாலைகள் தொங்கவிட்டுத் தரையில் புதுமணல் பரப்பி இருக்கிறார்கள். ஒரு பக்கம் உளுந்தம் பருப்பு கூட்டிச் செய்த பொங்கலும் சோறும் விருந்தாகப் பரிமாறப்பட்டுள்ளது. மங்கள மகளிர் தலையில் நீர்க் குடத்தினை எடுத்துவந்து வைக்கிறார்கள். 

மக்களை பெற்ற நான்கு மகளிர் கூடிநின்று, ‘கற்பினின்று வழுவாது உன்னைக் கொண்ட கணவனைப் பேணிக் காப்பாற்றுவாயாக’ என்று வாழ்த்தி, பூக்கள் மிதக்கும் நீரை அப்பெண்ணின் மேல் தெளிக்கிறார்கள். சுற்றத் தார்கள் வந்து, பெரும் மனைக் கிழத்தி ஆவாயாக’ என்று வாழ்த்துகிறார்கள்.அன்றே முதல்இரவு நடைபெறுகிறது.

பிற்காலத்தில் கோவலன் கண்ணகி திருமணம் மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டவும் பிராமணச் சடங்கோடும் தான் நடந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது .

தமிழர் முறைப்படி .

காதல் என்பது ஒழுக்கம், திருமணம்,குடும்பம் என்ற அளவு கோளை நோக்கியே இருந்து வந்ததுள்ளது .

பெற்றோர் அனுமதியுடன் காதல் திருமணம் செய்வதையே தமிழர்கள் ஆதரித்து வந்துள்ளனர் .

தமிழர்கள் முறைப்படி ஆண் பெண் இருவரும் சமமானவரே என்ற நடை முறையே இருந்து வந்துள்ளது.(அதற்கு பிறகு ஆரியர் ஆதிக்கத்தால் மதம் தோன்றிய பிறகே தமிழர்களிடத்தில் பெண் அடிமைத்தனம் ஆழமாக வேரூன்றியது )

அதனால் ,

ஆரியனால் உருவாக்கப்பட்ட சாதி மதங்களை தகர்த்தெறிந்து ஒன்று பட்ட தமிழ்ச் குமுகாயம் படைக்க தமிழர்களே காதல் செய்வீர் .அதை மாற்று இனக் கலப்பின்றி செய்வீர்.

தமிழ்ச் சாதி மறுப்பு திருமணம் வேண்டும். தமிழ் மத மறுப்பு திருமணம் (மதம் மாறிய தமிழர்கள்) வேண்டும் , தமிழரல்லாத மாற்றினத்தவருடன் காதல், திருமணம் அறவே கூடாது என்ற உறுதி மொழி ஏற்போம். சாதி மதமற்ற தமிழ் குமுகாயம் படைப்போம். 

காதல் நாள் என்பது சங்க கால தமிழர்களின் விழா என்ற உரிமையோடு தமிழ் இளையோர்களே களங்கமில்லாது காதல் மேல் காதல் கொள்ளு ங்கள் .

 

நன்றி முக நூல்

www.eelamboys.net

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.