Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றம்: சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

110426001002_sri_lanka.jpg

  1. இறுதி யுத்தத்தின்போது பொது மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளைக் காட்டும் சாட்டலைட் படங்கள்

இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் குறித்து லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சானல் 4 தொலைக்கட்சி வெளியிட்ட நிகழ்ச்சி குறித்து இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையம் , ராணுவம் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று அளித்த பரிந்துரையை அடுத்து, இலங்கை ராணுவத்தால் நியமிக்கப்பட்ட ராணுவ நீதிமன்றம் இன்று தனது அறிக்கையை ராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனெரல் ஜகத் ஜயசூர்யாவிடம் சமர்ப்பித்துள்ளது.

சானல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களங்கள் என்ற நிகழ்ச்சியில் வெளியான தகவல்களில், போரின் போது குண்டு வீச்சால் ஏற்பட்ட பொதுமக்களின் உயிர்ச்சேதங்கள் குறித்த பகுதிக்கு மட்டும் பதிலளித்திருக்கும் இந்த ராணுவ நீதிமன்ற அறிக்கை, அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

 

விடுதலைப் புலிகள், துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுட்ட போதும் கூட, இலங்கைப் படையினர், திரும்ப அந்தப் பகுதிகளுக்குள் குண்டு வீசவில்லை என்றும் இந்த நீதிமன்றம் கூறியது.இறுதி கட்டப்போரை மனித நேய நடவடிக்கை என்று அரசு வர்ணித்த சொற்றொடரைப் பயன்படுத்தும் இந்த ராணுவ நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்த 'ஒரு சிவிலியன் கூட கொல்லப்படக்கூடாது' என்ற உத்தரவை இலங்கை ராணுவம் எல்லாக் கட்டங்களிலும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டது என்று கூறியுள்ளது.

'மக்கள் மீது குண்டு வீசவில்லை': இராணுவம்  
110803135001_srilanka_channel4_video_304

சரணடைந்த விடுதலைப் புலிகளை படையினர் சுட்டுக்கொன்றதாக சானல்4 வெளியிட்ட காட்சி ஒன்று.

இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை , இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது.

 

சர்வதேச மனித நேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும் , போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான ராணுவமாகவே இலங்கை ராணுவம் இருந்திருக்கிறது என்றும் இந்த ராணுவ நீதிமன்றம் கூறியது.

 

சிவிலியன் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.

 

இலங்கை ராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, தமிழோசைக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த நீதிமன்றம் தனது இரண்டாவது பகுதியில் , சானல் 4 தொலைக்காட்சி எழுப்பிய மற்றுமொரு பிரச்சினையை, அதாவது சரணடைந்த விடுதலைப்புலிகள் விசாரணையின்றி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை பரிசீலித்து தீர்ப்பளிக்கும் என்றார்.

 

 

ராணுவ நீதிமன்றம் இன்னும் அதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறது. அது குறித்த அறிக்கை பின்னர் தனியாக சமர்ப்பிக்கப்படும் என்றார் பிரிகேடியர்.

சானல் 4 பதில்
120118160635_channel_4_304x171_afp_nocre

பிரிட்டனிலிருந்து ஒளிப்பரப்பாகும் சானல் 4 தொலைக்காட்சியின் தலைமையகம்

ராணுவ நீதிமன்றத்தின் இந்த அறிக்கை பற்றி சானல் 4 தொலைக்காட்சியின் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர் கேலம் மக்ரேயிடம் தமிழோசை கேட்டபோது, 'இதுபோல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக்கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது புதிதாக எதையும் சொல்லவில்லை. எங்களிடம் யாரும் பேசவில்லை, யாரும் எங்களை கலந்தாலோசிக்கவில்லை' என்று அவர் கூறினார்.

'

இலங்கை ராணுவம் குண்டுத்தாக்குதல் நடக்கக்கூடாத பகுதி என்று அறிவித்த பகுதிகளிலும் குண்டு தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுபகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இது ராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது' என்றார் கேலம் மக்ரே.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130215_sri.shtml

சிவிலியன் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.

ஆதார பூவமாக 146,000 தமிழ் மக்களைக்காணவில்லை. இவர்கள் அரசின் குண்டடிகளால் இறந்ததாக போர்க்குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் இந்த கொலையை இதுவரை அரசு மறுத்துத்தான் வந்தது. இப்போது நான்கு வருடத்திற்கு பிறகும் அதே மறுப்பு மட்டும்தான். ஆனால் ஒரு புதிய கண்டுபிடிப்புடன் "அதை செய்தது புலிகள்". அப்போது ஆதரபூர்வமாக  146,000 மக்கள் இறந்ததை இவ்வளவு காலமும் அரசு மறைத்ததின் காரணம் புலிகள் செய்த கொலைகள் வெளியில் வந்துவிடக்கூடாது எனபதற்காகவா?

இப்போது புலிகள் மட்டும்தான் கொன்றார்கள் என்றால் இனி அரசு 146,000 மக்கள் இறந்ததை ஒத்துக்கொள்ளுமா?

இவர்கள் என்ன சொன்னாலும் செம்மதி மற்றும் இராணுவ புலிகள் தரப்பால் வெளிவிடப்பட்ட செய்திகளை ஒருங்கிணைத்து விஜ்ஜான (scientific approach) ல் நடந்தவற்றை ஆராய்ந்தால்  துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிளில் (civilian safety zones) இலங்கை இராணுவம் எவாறு நடந்துகொண்டது என்பது பற்றி சர்வதேச தரப்புக்கு தெரியவரும். இதன் அடிப்படையில் தான் அமெரிக்க விஜ்ஜான முன்னேற்றத்துக்கான சங்கம் (AAAS) அங்கிருந்த குண்டு குழிகளையும் அவற்றின் பரிமாணங்களையும் குழிகள் பரந்திருக்கின்ர விதத்தையும் ஆராய்ந்து பெற்ற தகவல்களை இராணுவ தாக்குதல் உக்திகள் மற்றும் வெடிபொருட்களின் தன்மை ஆகியவற்றுடன் உறுதுணையுடன் நடந்த விடயங்களை ஆதாரபூர்வமாக சொல்லியிருந்தார்கள். உண்மையில் இவர்களுக்கு துணிவு இருக்குமானால் விஜ்ஜான ரீதியாக தங்கள் பக்க நியாயங்களை எங்கே நீருபியுங்கள் பார்க்கலாம்.

 
எது எப்படியிருப்பினும் இந்த இராணுவ அறிக்கை தமிழருக்கு மேலும் உதவக்கொடியது. அதாவது இலங்கையின் உள்நாட்டு சட்ட, இராணுவ மற்றும் அரசிய பொறிமுறைகளில் இருந்து தமிழருக்கு என்றுமே நீதி கிடைக்கபோவதிலை  என்பதால் நாம் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையை சம்பந்தப்பட தருப்புகளுக்கு வலியுறுத்த இது மேலும் ஒரு ஆதாரம். 

நன்றி புதல்வன் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.