Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் குழப்பும் முயற்சி தோல்வி

Featured Replies

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் குழப்பும் முயற்சி தோல்வி [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 00:28 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] hunger-srike.jpgவலி-வடக்கில் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தைக் குழப்பும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் நேற்றுக்காலை தொடங்கிய போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். 

இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐதேக. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். 

ரணில் விக்கிரமசிங்க உரையாற்றி விட்டுச் சென்ற பின்னர், உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களுடன் கலந்து நின்ற சில சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்கள், குழப்பம் விளைவிக்க முயன்றனர். 

இதனால், பொதுமக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதன்போது உதயன் ஊடகவியலாளரின் காணொளிப்பதிவு கருவியை குழப்பம் விளைவித்தவர்களில் ஒருவர், பறித்து சேதப்படுத்தியுள்ளார். 

இந்தச் சம்பவத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சிலரை சிறிலங்கா படையினர் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனால் பதற்றம் ஏற்பட்ட போதிலும், உண்ணாவிரதப் போராட்டம் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. 

இந்தப் போராட்டத்தைக் குழப்ப முயன்றவர்களை சிறிலங்கா காவல்துறையினரிடம் பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த போதும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விடுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.puthinappalakai.com/view.php?20130216107787

  • கருத்துக்கள உறவுகள்


 

உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தவர்கள் பொதுமக்களினால் விரட்டியடிப்பு
Share
By Priyarasa
2013-02-15 18:24:57

யாழில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை இனந்தெரியாத நபர்கள் தாக்க முற்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களும் தமது பாதுகாப்பிற்காக அவர்களைத் தாக்கி விரட்டியடித்தனர்.

யாழ். தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கையம்மன் ஆலயத்தில் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களினால் தங்களை மீளக்குடியேற்ற அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உண்ணாவிரதப் போராட்டத்தில் இனந்தெரியாத நபர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே புகுந்து அவர்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளை பறித்து கிழித்தெறிந்ததுடன் உண்ணாவிரதம் முடிவடைந்துவிட்டது ஓடுங்கள் என்று கூறி தாக்கியுள்ளனர்.

இதேவேளை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏனையவர்கள் உடனடியாக சென்று குறிப்பி;ட்டவர்களை சுற்றி நின்றவேளையில் அவர்கள் பொது மக்களை மேலும் தாக்க முற்பட்டதைத் தொடர்ந்து பொது மக்களும் தமது பாதுகாப்பிற்காக அவர்களைத் திருப்பித்தாக்கவே அவர்கள் தப்பி ஓடத் தொடங்கினார்.

இந்நிலையில், பொது மக்கள் தொடாந்து விரட்டியதுடன் அங்கு காவல் கடமையில் நின்ற பொலிசாரிடம் முறையிட்டபோதும் குறிப்பிட்ட நபர்களை கைது செய்வதற்க்கு பொலிசார் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்காததுடன் பொது மக்களால் பிடிக்கப்பட்ட ஒருவரை பொலிசாரிடம் ஒப்படைத்து போதிலும் பொலிசார் அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் கொண்டு சென்று தப்பிச்செல்ல விட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3050

இந்த மாதிரியான நிகழ்வுகளில் மறைவிடங்களில் கமரா பொருத்தி சிங்கள பயங்கரவாதிகளின் அடாவடித்தனங்களை பதிவு செய்து நவநீதம்பிள்ளை போன்றவர்களிடம் கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.