Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். தாக்குதலுக்கு ஹத்துருசிங்க காரணம்: ரணில்

Featured Replies

'வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


'எதிர்க்கட்சினராகிய நாம் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்றைய தினம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிப்பதினை எதிர்த்து பொதுமக்களினால் ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின் அந்த நிகழ்வினைக் குழப்பும் நடவடிக்கையில் இருவர் ஈடுபட்டுள்ளனர்.

 

அவரில் ஒருவரை மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் நான் அறிந்தேன். உண்மையில் இவர்களை பொலிஸாரே கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவிறிவிட்டனர்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.


'இந்த விடயம் தொடர்பாக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவிற்கு தெரியும். அவர் இராணுவத்தினை மட்டுமல்லாது, அதற்கு அப்பாற்பட்டு ஆயுதக் குழுக்களையும் செயற்படுத்தி வருகின்றார் என்று நான் சந்தேகிக்கின்றேன். அவ்வாறு இல்லாவிடின் யாழ். கட்டளைத் தளபதி எனக்கு இவ்விடயம் தொடர்பாக எழுத்து மூலமாகத் தெரியப்படுத்த வேண்டும்.

 

ஏனெனில் நான் அங்கு உரையாற்றிவிட்டுச் செல்லுகையில் நிகழ்வு நடந்த வாயிலில் 8865 இலக்கமுடைய ஒரு இராணுவ கனரக வாகனம் ஒன்று தரிக்கப்பட்டிருந்ததை நான் அவதானித்தேன். அதில் சீருடையின்றி சிலர் நின்றதை அவதானித்தேன். அங்கு நின்றவர்கள் கஜபாகு றெஜிமெண்டின் 16ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள். இது பற்றி யாரும் எமக்கு சொல்லவேண்டிய தேவையில்லை.


தாக்குதல் நடத்தியவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது நான் கொழும்பு சென்றவுடன் இவர்கள் யார் அவர்களின் குடும்பங்கள் பற்றிய விபரங்களை வெளியிடவுள்ளேன். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பான விபரங்கள் எனக்கு ஒரு பொழுதினில் கிடைக்கப் பெற்றுவிட்டது. இந்த விபரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்தோ எவரும் தரவில்லை. எனக்கு கொழும்பில் இருந்து இவைகள் கிடைக்கப் பெற்றுள்ளன'  என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் அவர் தெரிவித்தார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59033-2013-02-16-11-25-21.html

  • தொடங்கியவர்

இரா­ணுவக்­ கட்­ட­ளைத் தள­­பதி மஹி­ந்த ஹத்­து­ரு­சிங்கவிடம் இரகசிய ஆயுதக்குழு?: ரணில் சந்தேகம்

 

இரா­ணுவக்­ கட்­ட­ளைத் தள­­பதி மஹி­ந்த ஹத்­து­ரு­சிங்க இரா­ணுவச் செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் இர­க­சி­ய­மாக ஆயு­தக்­கு­ழுவை நடத்­தி­ வ­ரு­­வ­தாகச் சந்­தே­கிக்­கின்றேன் என பிர­தான எதிர்கட்­சி­யான ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்தில் தெரி­வித்­தார்.

 

வலி.வ­டக்கு மக்கள் நடத்­திய உண்­ணா­வி­ரதப் போரா­ட்­டத்தில் இரா­ணு­வத்­தினர் நடந்­­துகொண்ட விதம் சிங்­க­ள மக்கள் உள்ளிட்ட முழு இலங்­கை­ய­ருக்­கும் அப­கீ­ர்த்­தியை ஏற்­ப­டுத்தும் விடயம் என்­பதால் உட­­ன­­டி­யாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும் என அவர் தெரிவித்தார்.

 

யாழ்ப்­பா­ணத்­தி­லு­ள்ள விருந்­தினர் விடு­தி­யொன்றில் பொது எதி­ர­ணி­யி­­னர் ஏற்­பா­டு செய்த ஊட­க­வி­யலாளர் சந்­திப்­பி­ல் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே­யே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

 

அங்கு அவர் உரை­யாற்­று­கை­யில்,

வடக்கில் எவரும் பயங்­­கரவாதத்தைத் தோற்­று­விக்கும் எண்­ணத்­துடன் செயற்­ப­டவில்லை. பிர­தேசத்தின் பாது­காப்பை மக்­களின் ஒத்­து­ழைப்­பின் ஊடாகவே பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யும். இதற்­காக மக்­களின் ஒத்­து­ழைப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள முன்­வ­ர­வேண்­டும்.

 

நேற்று முன்­தினம் நடை­பெற்ற உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் தேவையற்ற இடை­யூ­­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. நான் உரை­யாற்­றி­ய­பொ­ழுது ஊட­கங்­களைத் திட்­டு­வது போல் கூச்சல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் பொதுச் செய­லாளர் மாவை.சே­னா­தி­ராஜா அந்த இடத்­திற்குச் சென்று இடை­யூ­று செய்­த­வ­ரைத் தடுத்­ததை நான் பார்த்தேன்.

 

ராஜ­பக்­ஷ ஒழிக என மக்கள் கோஷ­மிட்­ட­போது சிலர் மக்­களை விரட்ட முயற்­சித்­தனர். நான் அந்த நிகழ்­­விற்­குச் சென்­ற­போது நிகழ்வு நடை­பெற்ற இடத்­திற்கு அண்­மையில் இரா­ணு­வத்­தி­ன­­ரு­­டைய 8865 லாண்­டோவர் ரக வாக­­னமும் நிறு­த்­த­­ப்­பட்­டி­ருந்­தது.

 

அதற்­க­ரு­கில் சீரு­டை தரித்த இரா­ணு­வ அதி­காரி நின்­ற­தையும் நான் கண்­டேன். அந்த அதி­கா­ரியைப் பார்த்து நான் சிரித்­த­போ­து அவ­­ரும் என்­னைப்­பார்த்து சிரித்தார்.

 

அங்­கி­ரு­ந்த இரா­­ணுவப் பிரி­வினர் கஜ­பாகு படைப்­பி­ரிவைச் சேர்ந்­த­­வர்கள் என எனக்குத் தகவல் கிடைத்­தது. கஜ­­பாகு படைப்­பி­ரி­ரின் 14 ஆவது படைப்­பி­ரி­வினரிட­­மி­ருந்து ஐக்­கிய தேசியக் கட்சியால் தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். உண்­ணா­வி­ரதத்­திற்கு இடை­யூறு செய்­த­­வர்­களின் விப­ரங்­க­ளையும் தக­வல்­க­ளையும் எம்மால் பெறமுடியும்.

 

உண்­ணா­வி­ரத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளை­யும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளையும் தாக்­கி­யது தொடர்­ட­பா­க­வு­ம் நாங்கள் கேள்­விப்­பட்­­டோம். இவ் விட­யத்தை ஐக்­கி­ய­­தே­சியக் கட்­சியின் இணை­யத்­தளம் உட்­பட சகல ஊட­­கங்­க­ளிலும் பிர­சு­ரிக்­கு­மாறு கூறி­யுள்­ளேன். அப்­பொ­ழு­துதான் உண்மை வெளிவரும். தாக்­குதல் நடத்­தியோரை பொலிஸார் தாமா­கவே முன்­­வந்து கைது­செய்­தி­ருக்­க­வேண்டும்.

 

ஆனால் மக்கள் கைது­­செய்து ஒப்­ப­டைத்­த­வர் மீது கூட பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இச் சம்­ப­வங்கள் கட­ந்தகால கிறீஸ் மனிதனை ஞாப­கப்­ப­டுத்­­து­கின்­றன. யாழ்.மா­வ­ட்­டத்­திற்­குப் பொறு­ப்­பான இரா­ணு­வக்­ கட்­டளைத் தள­பதி மஹிந்த ஹத்­து­ரு­சிங்­க­வுக்­கு இவ் விட­யங்கள் தெரி­ந்­தி­ருக்­கும் என நான் நம்­பு­கின்­­றேன்.

 

உண்மையில் இரா­ணுவக்­ கட்­ட­ளைத் தள­­பதி மஹி­ந்த ஹத்­து­ரு­சிங்க இரா­ணுவச் செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் இர­க­சி­ய­மாக ஆயு­தக்­கு­ழுவை நடத்­தி­ வ­ரு­­வ­தாகச் சந்­தே­கிக்­கின்றேன். இது தவ­றாயின் அவர் எழுத்­து­­மூலம் அறி­விக்­க­வேண்டும். இந்தச் செயல் இரா­ணு­வத்­திற்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் அப­கீ­ர்த்­தியை ஏற்­ப­டுத்தி தமி­ழ் மக்­க­ளு­டைய கட்­ட­மைப்­புடன் மோத­­வைக்கும் செய­ல் என்­ப­தால் உட­ன­டி­யைாக தடுக்­கப்­ப­ட­வேண்­டியதொன்­றா­கும்.
 

பிச்­சைக்­கா­ர­னின் காயம் போல் இத்­த­கைய செயல்­களைச் செய்து இந்த அர­சா­ங்கம் பிச்­சைக்­கா­ரன்போல் அர­சியல் செய்­­கி­றது. இவ்வாறு செயற்­ப­டாமல் அர­சியல் செய்ய எங்­­க­­ளுத் தெரியும். நாம் இது தொடர்­பாக இரா­ணுவத் தள­பதி ஜெகத் ஜெய­சூ­ரி­ய­விடம் இச் சம்­ப­வத்­திற்கும் இரா­ணுவத்­திற்கும் தொடர்­பில்­லையா என வினா­வ வி­ரும்­பு­கின்­றேன்.

 

இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களும் இது­தொ­டர்பில் விசாணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என நான் கோரு­கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் எனக்குத் தக­வல் தர­வி­ல்லை. நான் இத்­த­­வல்­களைக் கொழும்பில் இருந்தே பெற்­றுக்­கொண்­டேன் இவ்­வி­டயம் தொடர்­பாக நான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்க­ளு­டன்­ சேர்ந்து சர்­வ­தேச ஜன­நா­ய­கத்­தி­டமும் எழுத்­து­மூலம் முறை­யி­ட­வு­ள்ளேன் என்­றார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3066

செய்யுங்கோ கெதியென்டு இல்லாட்டி உங்களுக்கும் ஆப்புத்தான் விரைவில்.

  • தொடங்கியவர்

வடபகுதி மக்கள் மீதான அழுத்தத்தை யாழ். தாக்குதல் உணர்த்தியது: மனோ

 

வலி. வடக்குப் பகுதியில் இடம்பெற்ற உண்ணாவிரத நிகழ்வின் போது இடம்பெற்ற தாக்குதலானது, வடபகுதியில் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடிக்குள் வாழ்க்கின்றனர் என்பதையும் அவர்கள் மீதான அழுத்தத்தையும் உணரக்கூடியதாகவுள்ளது' என்று இன்று காலையில் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

 

'எதிர்கட்சியிக் குழுவானது யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது வலி. வடக்கில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்வினில் உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்ட பின் அந்நிகழ்வினை குழப்பும் முகமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றதினை நாம் அறிந்தோம்.


இவற்றிலிருந்து தமிழ் மக்கள் தமது வாழ்க்கையில் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினையினை வெளிப்படையாக புலப்படுகின்றது. நாம் வலிவடக்கில் மட்டுமல்லாது இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிதரனின் கிளிநொச்சி காரியாலயத்திற்கும் சென்றிருந்தோம். அவருடைய அலுவலகம் பாதுகாப்பு படையினாரால் முற்றுகையிடப்பட்டது அவதானிக்கப்படக்கூடியதாக இருந்தது இது மேலும் ஒரு அடக்கமுறையினைப் புலப்படுத்துகின்றது' என்றார்.

 

இப்பயணத்தின் போது மக்கள் எதிர்நோக்கும் இரண்டு பிரச்சினைகளை நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. ஒன்று மக்கள் தங்களது உறவுகளைக் காணாமல் போயுள்ளமை, சிறைப்பிடிக்கப்பட்டமை மற்றொன்று, பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் தமது காணிகளினை இழப்பதையும் உணர முடிகின்றது. இவ்வாறான அழுத்தத்தினை ஏற்க முடியாது. இப்பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ன அறிக்கை மூலம் சமர்ப்பணம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/59035-2013-02-16-11-46-03.html

  • கருத்துக்கள உறவுகள்

'யாழ். இராணுவத் தளபதி சட்டவிரோத ஆயுதப் பிரிவுகளை நடத்துகிறார்'
 
130216175327_ranil_jaffna_sri_lanka_304x

ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில்

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் 

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்றையும் நடத்தியிருக்கின்றார். இதில் எதிர்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ன, அசாத் சாலி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில், தமது வாழ்விடங்களில் தம்மை மீள்குடியேற அனுமதிக்கக் கோரி வலி வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் நடத்திய அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தில் சிலர் குழப்பம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு இராணுவ புலனாய்வாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விசாரணை நடத்த வேண்டும் அல்லது தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய உண்ணாவிரதத்தைக் குழப்பிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

'சர்வதேச நாடாளுமன்ற அமைப்புகளிடம் முறையிடப்படும்'
130216175548_tna_sritharan_sri_lanka_304

காணாமல்போனவர்களின் உறவினர்கள் தமது துயரத்தை ரணிலிடம் முறையிட்டனர்

முன்னதாக கிளிநொச்சிக்குச் சென்ற அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தைப் பார்வையிட்டுவிட்டு, சிறிதரனின் உதவியாளர்கள் அவதூறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து சர்வதேச மட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்புக்கள் மற்றும் பாராளுமன்றங்களின் கவனத்திற்குத் தானே நேரடியாகக் கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடிய ரணில், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இதற்கு அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சர்வதேசத்திற்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ள அரசாங்கம், தானே நியமித்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் வலியுறுத்தியிருக்கின்றார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/02/130216_jaffnaranil.shtml

  • தொடங்கியவர்

ஒரு நாட்டின் எதிர்க்கட்சி தலைவரே அந்த நாட்டின் இராணுவம் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகின்றது என்கிறார். இதைவிட இந்த நாடு ஒரு பயங்கரவாத ஆட்சி செய்யும் நாடு என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

அங்­கி­ரு­ந்த இரா­­ணுவப் பிரி­வினர் கஜ­பாகு படைப்­பி­ரிவைச் சேர்ந்­த­­வர்கள் என எனக்குத் தகவல் கிடைத்­தது. கஜ­­பாகு படைப்­பி­ரி­ரின் 14 ஆவது படைப்­பி­ரி­வினரிட­­மி­ருந்து ஐக்­கிய தேசியக் கட்சியால் தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். உண்­ணா­வி­ரதத்­திற்கு இடை­யூறு செய்­த­­வர்­களின் விப­ரங்­க­ளையும் தக­வல்­க­ளையும் எம்மால் பெறமுடியும்.

 

 

துணிவுள்ள  எதிர்க்கட்சி தலைவர் எனில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை அம்பலப்படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்

மகிந்தா ஜே.வி.பி. மனித உரிமைகளுக்காக ஜெனீவா சென்றவர்.

இரணில் செல்வாரா? அங்கே இதை கூறுவாரா?

கூறினால் தமிழர் தரப்பிற்கு நம்பிக்கை வரலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லையென்ற நினைப்பில் சிங்களப் பயங்கரவாதிகள் கழிவொயில் சந்திரசிறியும் ஹத்துருசிங்கவும் தமது இனத்தின் இரத்தத்தில் ஓடும் காடைத் தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.



ஹிந்திய அரச பயங்கரவாதிகளைப் பொறுத்தவரையில் இதெல்லாம் "ஜனநாயக" செயல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.