Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகிளிலும் கைவைத்துவிட்டனர் புலிகள்

Featured Replies

கீழ் உள்ள பெடியங்களின் பதிவு ஒரு நையாண்டிப் பதிவு என்பதை கூறிக் கொண்டு அதனை இடுகிறேன்,இணயத்தில் ஜன நாயகம் மக்கள் போராட்டம் என்று பிதற்றிக் கொன்டிருப்பவர்களை நோக்கி இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது.சும்மா சொல்லாக்கூடாது நல்லாத் தான் ரீல் விட்டிருகிறாங்கள் பெடியங்கள்....

பாசிசப்புலிகளின் மற்றுமொரு காட்டுமிராண்டி நடவடிக்கை.

கூகிள் ஏர்த் எனப்படும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிவீர்கள். உலகில் நாம் விரும்புமிடத்தைத் துல்லியமாகப் பார்க்கும்படி அதில் வசதியுள்ளது. வாகனங்கள், வீடுகள், மரங்கள்கூடத் தெளிவாகத் தெரியும்படி பல பகுதிகள் துல்லியமாகக் காண்பிக்கப்படுகின்றன.

இம்மென்பொருள் கொண்டு இலங்கைத் தீவையும் நாம் பார்க்கலாம். அதிக பாதுகாப்பு கொடுக்கப்படும் பல இடங்களை எந்தவிதத் தடையுமின்றி மிகத் தெளிவாக நாம் காணலாம். கொழும்பின் முக்கிய கட்டடங்கள், கொழும்புத்துறைமுகம், இராணுவ நிலைகள், வான்படை முகாம், திருகோணமலைத் துறைமுகம் என்பன போன்று அதியுயர் இரகசிய இடங்களைக்கூட மிகமிகத் தெளிவாக நாம் பார்த்துக்கொள்ளலாம்.

யாழ்ப்பாணப்பக்கம் போனீர்களென்றால் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானப்படைத்தளம் முதற்கொண்டு அனைத்தும் மிகத்தெளிவாகத் தெரிகின்றன. அதாவது அரசின் இரகசிய இடங்களைக்கூட கூகிள் தணிக்கை செய்யவில்லை. மிகத்தெளிவாக அனைத்தையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.

ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியைப் பார்ப்போம் என்று நீங்கள் யாராவது முயன்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளும் வவுனியா மாவட்டத்தின் சிலபகுதிகளும் காட்டப்படுகின்றன. ஆனால் வன்னியின் புதுக்குடியிருப்பை உங்களால் பார்க்க முடியாது. சுண்டிக்குளம், வெத்திலைக்கேணி, கட்டைக்காடு உட்பட முக்கிய கடற்கரைப்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. (முக்கியமான கடற்புலிகளின் பகுதிகள்). விசுவமடு உட்பட பல இடங்களை உங்களால் பார்க்க முடியாது. கிளிநொச்சி நகர்ப்பகுதியை மையமாக வைத்து பெரும்பகுதியை உங்களால் பார்க்க முடியாது. இத்தாவில், முகமாலை, கிளாலி, நாகர்கோவில் என்று புலிகளின் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகள் உள்ள எந்தப்பகுதியையும் உங்களால் பார்க்க முடியாது.

ஆம். மேற்கண்ட அனைத்துப்பகுதிகளும் கூகிள் ஏர்த் மென்பொருளில் மறைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் யாழ்.கோட்டைப் பகுதியை அண்டிய சிறுபகுதி மட்டும் மறைக்கப்பட்டுள்ளது. (ஆனால் காங்கேசன்துறை, பலாலி, காரைநகர் போன்றன மிகத்தெளிவாகக் காட்டப்படுகின்றன). அதைவிட தென்மராட்சியில் இராணுவத்தினரின் முன்னரங்கப் பகுதிகளும் மறைக்கப்பட்டுள்ளன. அவைகூட புலிகளின் பகுதிகளை மறைக்க முற்பட்ட வேளையில் சேர்ந்து மறைக்கப்பட்டவையே என்று கருத இடமுண்டு.

இதன்மூலம் புலிகள் கூகிள் ஏர்த் மெல்பொருள் வல்லுநர்களிடம் தங்கள் கைவரிசையை காட்டிவிட்டனர் என்று நம்பத் தோன்றுகிறது. பாசிசப்புலிகள் உலகில் எவரையும் விட்டுவைப்பதில்லை. எங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதில்லை. அரசபடையின் அதிமுக்கியமான இடங்களே எந்த மறைப்புமின்றி துல்லியமாகக் காட்டப்படும்போது புலிகளின் தளங்கள், நிலைகள், கடற்கரைகள் மட்டும் மறைக்கப்படுவதன் மர்மம் என்ன?

இதைப்பற்றி கூகிள் நிர்வாகம் எதுவும் சொல்லப்போவதில்லை. அவர்களை வெருட்டி வைத்துள்ளனர் நாசகாரிகள். ஜனநாயக வாதிகளான நாங்கள்தான் இவற்றையெதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். மக்களை அணிதிரட்டி மக்கள் புரட்சிமூலம் கூகிள் ஏர்த்தைக் காப்பாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சிமூலம் பாசிசத்தை ஒழிக்க வேண்டும். இதற்கான செயற்றிட்டம் எம்மிடமுண்டு.

எம்மோடு தோள்கொடுக்க நினைக்கும் மக்கள் போராளிகள், புரட்சியாளர்கள், ஜனநாயகக் காவலர்கள் அனைவரும் அணிதிரண்டு வாருங்கள்.

"புதியதோர் உலகம் செய்வோம் -கெட்ட

போரிடும் புலிகளை வேரொடு சாய்ப்போம்"

(கூகிள் ஏர்த் பற்றிய எமது குறிப்பில் நம்பிக்கையில்லாதவர்கள் தயவுசெய்து நாம் சொன்ன இடங்களைத் தேடிப்பாருங்கள். அதன்பின் எம்மோடு போராட்டத்தில் இணையுங்கள்.)

-உம்மாண்டி-

http://tamizboyz.blogspot.com/2006/06/blog...og-post_23.html

ம் ம்..............

நல்ல றீல்தான். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரியான புலிக்காச்சலுக்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டு! சிறிறங்கன் ரேஞ்சுக்கு உயர வாழ்த்துவோம்! :wink: :P

  • தொடங்கியவர்

'சிரி' ரங்கனின் மிளகாய் அரைப்புக்கும் ஒரு பதிவு....

மிளகாய் அரைப்பு

உறைக்கிறது தலை.

யாரோ ஒருவனின் அரைப்புக்கு

அம்மியாயின எங்கள் தலைகள்

உச்சியிலடித்த உறைப்பு

தெரிந்த பின்னும்

சேர்ந்தே அரைப்பர் சிலர்

அறியாமல் அரைபடும் தலைகளுக்கு

ஆழ்ந்த அனுதாபங்கள்

-உம்மாண்டி-

பட உதவி: மகிழன்

அம்மிக்கும் குழவிக்கும் அவ்விரு கைகளுக்கும் நன்றி.

Comments:

என்னடாப்பா, பெடியங்களை முடக்கிட்டாங்கள்/ முடங்கிப்போட்டாங்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தால் இப்ப திருப்ப வெளிக்கிட்டிட்டாங்கள் போல :-)

# posted by டிசே தமிழன் : 5:31 AM

அண்ணே டி.சே,

நாங்கள் எழுதாததுக்குப் பத்துக் காரணங்கள் வச்சிருக்கிறன். "டக்"கெண்டு ஒண்டைச் சொல்லும். ஒரு காரணம் சொல்லிறன்.

# posted by பெடியன்கள் : 7:03 PM

அனாமதேயமாக வந்த ஒருவரின் பின்னூட்டம் மட்டுறுத்தலில் நீக்கப்பட்டுள்ளது.

ஐயா, நாட்டு நடப்பு கண்டபடி கிடக்க, நீங்கள் குறுக்கால பூந்து விளையாட்டுக் காட்டாதையுங்கோ. தனியொரு மனிதனுக்கு எம்பதிவுமூலம் நேரடியாகப் பங்கம் விளைவிப்பதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.

குறைந்தபட்சம் எங்களின் நேர்மையைப் புரிந்துகொள்ள வேணும்.

நாங்கள் அமெரிக்கராக இருந்துகொண்டு ஈழத்தவரெண்டு சொல்வதில்லை.

மட்டக்களப்பானாக இருந்துகொண்டு யாழ்ப்பாணத்தான் எண்டு கதை விடுவதில்லை.

டாக்குத்தராக வேலை செய்துகொண்டு சோற்றுக்குச் சிங்கியடிக்கிற கூலிக்காரன் எண்டு வண்டில் விடுவதில்லை.

எங்களுக்குள் நாங்களே பின்னூட்டச் சண்டையிட்டுப் பதிவைத் தூக்கி நிறுத்த நினைப்பதில்லை.

மாறாக இவற்றையெல்லாம் செய்தால்தான் அவர் நேர்மையான, ஜனநாயக, மாற்றுக்கருத்துப் பன்னாடை என்றால் எங்களுக்கு அந்தப்பட்டம் வேண்டாம்.

திரும்பவும் சொல்கிறேன், உங்கள் தளம் வேறு, எங்கள் தளம் வேறு.

காரணங்கள் பற்றித் தனிப்பதிவே போட்டாச்சுத் தம்பி.

(தொடக்கத்தில ஐயாவாக தொடங்கி இறுதியில தம்பியாகி முடிஞ்சிருக்கிறதில விசயம் கிடக்கு. விளங்குதோ?)

# posted by பெடியன்கள் : 7:54 PM

//நாங்கள் எழுதாததுக்குப் பத்துக் காரணங்கள் வச்சிருக்கிறன். "டக்"கெண்டு ஒண்டைச் சொல்லும். ஒரு காரணம் சொல்லிறன்.//

பெயரிலி இதே மாதிரி சொன்னவரெல்லோ?

# posted by Anonymous : 8:01 PM

எழுதிக்கொள்வது: yaro

milakaay araippu URaikkiRathu....

23.4 15.6.2006

# posted by Anonymous : 2:06 PM

எழுதிக்கொள்வது: சேதுக்கரசி

நல்லா உறைக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க!

21.12 15.6.2006

# posted by Anonymous : 6:17 PM

ஐயா அனாமதேயம்,

முதல் வந்து மட்டுறுத்தப்பட்டவர் தானோ நீங்கள்?

ஓம். பெயரிலி டீ.சேக்கு இதேமாதிரியொரு பதில் சொல்லியிருக்கிறார். நீங்கள் வேற ஒரு அருத்தத்திலயும் சொல்லேலதானே?

# posted by பெடியன்கள் : 12:36 AM

பெடியன், (கள்)?

# posted by கானா பிரபா : 6:21 AM

யாரோ, சேதுக்கரசி, கானாபிரபா,

வருகவருக.

முதல்முதலா வந்திருக்கிறியள்.

பிரபா,

என்ன கேக்கிறியள் எண்டு விளங்கேல. நாங்கள் பன்மையா எண்டு சந்தேகம் எண்டா, முந்தின பதிவுகளைப் படியுங்கோ.

அல்லது ஏதாவது இலக்கணப்பிழை இருந்தா, ஐயா ஆளைவிடுங்கோ சாமி. எங்களுக்கு உது கனதூரம்.

# posted by பெடியன்கள் : 7:28 A

http://tamizboyz.blogspot.com/2006/06/blog-post.html

என்ன சொல்லுவது என்று தெரியவில்லை

மனநோயளிகளை குனப்படுதுவதா இல்லை அதுகளை அப்படியே அதுகளின் வழியில் விடுவத என்று :P

  • 4 weeks later...

ஏன் இப்படியும் இருக்கலாமே? அந்த கூகிள் ஏர்த் வளர்ச்சிக்கு உதவி செய்தது சிங்களவர்களாக இருந்தால், அவர்களுக்கு வன்னி பிரதேசம் தெரியாமல் இருந்திருக்கும் அல்லவா?

எனக்கு தெரிந்தவரை கூகிளிற்கு உதவி செய்தவர்கள், கொழும்பு பல்கலைக்கழக(கணனி) 3 சிங்கள மாணவர்களே!

கூகிள் ஏர்த்தில் இலங்கையில் உள்ள அநேகமான பிரதேசங்களின் பெயர்கள் சிங்களத்தில் அல்லவா உள்ளது,. இதிலிருந்தே தெரியவில்லையா?

கூகிளைவிட அமெரிக்க இராணுவ செய்மதிகள் திறமையா படம்பிடிச்சு..கொடுக்க வேண்டியவைக்குக் கொடுக்குமே..! இது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமில்லாம...ஆளில்லா விமானங்கள் வேற அழகாப் பறக்கின்றன..! கூகிளை நம்பித்தான் இலங்கைப் படைகள் இருப்பது போல..அப்பாவியா கட்டுரை வரைஞ்சிருக்கு...அதை வேற அப்பாவித்தனமா இங்க வேற வைச்சிருக்கு...! ஏதோ...ஏமாறிறவை இருக்கும் வரை ஏமாற்றுப்படைப்புகளும் இங்கு வரத்தான் செய்யும்..! :wink: :P :idea:

ஏன் இப்படியும் இருக்கலாமே? அந்த கூகிள் ஏர்த் வளர்ச்சிக்கு உதவி செய்தது சிங்களவர்களாக இருந்தால், அவர்களுக்கு வன்னி பிரதேசம் தெரியாமல் இருந்திருக்கும் அல்லவா?

எனக்கு தெரிந்தவரை கூகிளிற்கு உதவி செய்தவர்கள், கொழும்பு பல்கலைக்கழக(கணனி) 3 சிங்கள மாணவர்களே!

கூகிள் ஏர்த்தில் இலங்கையில் உள்ள அநேகமான பிரதேசங்களின் பெயர்கள் சிங்களத்தில் அல்லவா உள்ளது,. இதிலிருந்தே தெரியவில்லையா?

சுட்டி நீங்கள் சொல்வதும் ஓரளவு சரி போலத்தான் தெரியுது..காரணம்..கூகிள் ஏத்தில் சில தமிழ் பிரதேசங்கள் சிங்களப் பெயரில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன..! :P :idea:

  • தொடங்கியவர்

கூகிளைவிட அமெரிக்க இராணுவ செய்மதிகள் திறமையா படம்பிடிச்சு..கொடுக்க வேண்டியவைக்குக் கொடுக்குமே..! இது சாதாரணமா எல்லோருக்கும் தெரியும். அது மட்டுமில்லாம...ஆளில்லா விமானங்கள் வேற அழகாப் பறக்கின்றன..! கூகிளை நம்பித்தான் இலங்கைப் படைகள் இருப்பது போல..அப்பாவியா கட்டுரை வரைஞ்சிருக்கு...அதை வேற அப்பாவித்தனமா இங்க வேற வைச்சிருக்கு...! ஏதோ...ஏமாறிறவை இருக்கும் வரை ஏமாற்றுப்படைப்புகளும் இங்கு வரத்தான் செய்யும்..!

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒண்டுமில்லை நாரதர்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமாம். ஊரில் பக்கத்து வீட்டுச் சமாச்சாரத்தை சந்தியில் வைத்து அசிங்கமாக கதைச்சு வைச்ச குணம் மாறிப் போகுமா?

அது ஒண்டுமில்லை நாரதர்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்குமாம். ஊரில் பக்கத்து வீட்டுச் சமாச்சாரத்தை சந்தியில் வைத்து அசிங்கமாக கதைச்சு வைச்ச குணம் மாறிப் போகுமா?

அதுவும் இல்லப் பாருங்கோ.. நையாண்டி என்று போட்டு...எதையும் இங்க வைக்கலாம் பாருங்கோ..அப்படி இருக்கேக்க...நாங்கள் மட்டும் நையாண்டி பண்ணினா..அதையேன் தூக்கிப் பிடிக்கிறியள்..! ஏதோ பிரச்சனை போல..! :P :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இல்லப் பாருங்கோ.. நையாண்டி என்று போட்டு...எதையும் இங்க வைக்கலாம் பாருங்கோ..அப்படி இருக்கேக்க...நாங்கள் மட்டும் நையாண்டி பண்ணினா..அதையேன் தூக்கிப் பிடிக்கிறியள்..! ஏதோ பிரச்சனை போல..! :P :wink:

ஒரே ஆளையே தொடர்ந்து குறி வைத்து எழுதுவதற்குப் பெயர் நையாண்டி இல்லை பாருங்கோ! அதற்கும் முகமூடி( நையாண்டி) போட்டு தப்பிக்க பார்க்கின்றீர்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உம்மாண்டி எழுதியதை நாரதர் சீரியசாக எடுத்ததன் விளைவு தான் இது. உம்மாண்டி தனது பெயருக்கேற்றால் போல் தான் எழுதியுள்ளார். ஒரு அரசாங்கம் இலவச மென்பொருளை பாவித்து தன் எதிரியின் இருப்பிடங்களை பார்க்கிறான் என்பது எவ்வளவு ஒரு அறிவுபூர்வமான விடயம். அத்துடன் அவர் அந்த மென்பொருளில் உலகின் எத்தனையோ இடங்கள் காண்பிக்கப்படவில்லை என்பதையும் அதிலே உல்ல படங்கள் எவ்வளவு பழையது என்பதையும் உம்மாண்டி பார்க்கவில்லை.

மட்டுறுத்தினர்கள் இதை நகைச்சுவை பகுதிக்கு நகர்த்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அதில் வடிவாகப் படித்துப் பாருங்கள். புலிகளை பாசிட்டுகளாக எழுதியிருக்கும் போது அதைச் சும்மா நகைச்சுவை என்ற விதத்தில் எடுத்துக் கொள்ளமுடியுமா?

எந்த சந்தர்ப்பத்திலும், அவர்களை அவமதி;க்கும் விதத்தை அனுமதிக்கச் சொல்கின்றீர்களா?

ஒரே ஆளையே தொடர்ந்து குறி வைத்து எழுதுவதற்குப் பெயர் நையாண்டி இல்லை பாருங்கோ! அதற்கும் முகமூடி( நையாண்டி) போட்டு தப்பிக்க பார்க்கின்றீர்களோ?

ஒருவரே..அடிக்கடி தன்னிலை அறியாமல் எழுதேக்க...சுட்டிக்காட்டத்தா

  • கருத்துக்கள உறவுகள்

இதை நாரதர் இணைத்த எண்ணம் எப்படியோ? ஆனால் புலிகளைப் புறம்பாடுவதற்கே என்று அலையும் கூட்டம் எதற்கெடுத்தாலும் புலிகளைத தான் குற்றம் சாட்டும் என்ற குட்டு, இலகுவாக வெளிப்படுத்தப்பட்டபோது அதை இங்கே அனைவருக்கும் காட்டியதில் தவறில்லை.

இப்போது எனக்கு எழுகின்ற கேள்வி என்னவென்றால் மதிவதனனையும், இவ்வாறான கேலிக்குரிய நபரோடு ஒப்பிட்டு செய்தவன் மூலம் மதியையும் அப்படிக் கருதுகின்றீர்களா?

இதை அப்பவே சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சனை களத்தில் வந்திருக்காதல்லவா!

ஆனால் இருவரின் கருத்துக்களும் வேறுபாடு உண்டு. உம்மாண்டி எழுதுவது அப்பட்டமாகவே புலி எதிர்ப்பு என்பதை வெளிப்படுத்துகின்றது. ஆனால் இரண்டாம் நபர் புலி எதிர்ப்பை உருவாக்குவது மட்டுமல்ல, அதற்குக் தீர்வாக துரோகக் கும்பலைச் சுட்டிக் காட்டுவது தான். மேலும் புலிகளின் மீதான நம்பிக்கையைக் குறைப்பதற்கு விசமத்தனமான கருத்துக்களும் வைக்கப்படுகின்றது!

இதை விட, என்னை நடுநிலமையாளர் என்று கருதாதீர்கள். தமிழிலேயே பிடிக்காத வார்த்தை அது தான். நான் இனச் சார்புள்ளவனாகவே இருக்க விரும்புகின்றேன்.

  • தொடங்கியவர்

அப்ப யாழ் களம் நையாண்டிப் பதிவுகளுக்குமான இடமாக மாறிவிட்டுதோ..இல்ல ஆரம்பத்தில..நகைச்சுவைக்குள்ள

  • தொடங்கியவர்

உம்மாண்டி எழுதிய மற்றப்பதிவுகளையும் வாசித்தால் 'அவர்கள்' தமது நையாண்டியின் மூலம் யாரை விமர்சிக்கின்றனர் என்பது தெளிவாகும்.மிளகாய் அரைப்பது என்ற பதிவுக்கு போடப்பட்டுள்ள படத்திற்கு ஒருவருக்கு நன்றி தெரிவிச்சிருக்கு.

கூட்டிக் கழிச்சுப் பாத்தா இதை இட்டவர் யார் என்று தெரியும்.

பெடியங்களின் பதிவுகளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிந்திக்க வேணும்.அது யாழ்க் களத்தில் உள்ள சிலரால் சாதியப் படாத விடயம் எண்டு விளங்குது.

  • தொடங்கியவர்

ஓமங்கோ...எனி இப்படித்தான் திரிச்சுச் சமாளிக்க வேணும். உம்மாண்டினதை இங்க ஒட்டுறதுக்கு ஒரே வழி அதில நையாண்டி என்று போட்டு உங்களுக்க உருவான சீரியஸ்நெச்ஸை இங்க எப்படியாவது காட்டிட வேணும்

அளவு மிகுந்த கற்பனை :lol::lol::lol::(

உம்மாண்டி எழுதிய மற்றப்பதிவுகளையும் வாசித்தால் 'அவர்கள்' தமது நையாண்டியின் மூலம் யாரை விமர்சிக்கின்றனர் என்பது தெளிவாகும்.மிளகாய் அரைப்பது என்ற பதிவுக்கு போடப்பட்டுள்ள படத்திற்கு ஒருவருக்கு நன்றி தெரிவிச்சிருக்கு.

கூட்டிக் கழிச்சுப் பாத்தா இதை இட்டவர் யார் என்று தெரியும்.

பெடியங்களின் பதிவுகளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் சிந்திக்க வேணும்.அது யாழ்க் களத்தில் உள்ள சிலரால் சாதியப் படாத விடயம் எண்டு விளங்குது

ஓமங்கோ..எவனோ..உம்மாண்டி எழுதி..அதை நீங்கள் நையாண்டி என்று காட்டி...இங்க ஒட்டினா.அதை வைச்சு அலசி ஆராய்ஞ்சு.. சிந்திக்கனும்..எல்லோரும்...!ஆன

  • தொடங்கியவர்

ஓமங்கோ..எவனோ..உம்மாண்டி எழுதி..அதை நீங்கள் நையாண்டி என்று காட்டி...இங்க ஒட்டினா.அதை அவைச்சு அலசி ஆராய்ஞ்சு.. சிந்திக்கனும்..எல்லோரும்...ஆனா தாத்தா எழுதிட்டா...அதைப் பற்றி சிந்திக்காமலே..புலிக்காய்ச்ச

சுருக்கமாச் சொன்னாங்கோ..உங்கட சிந்தனைல..உம்மாண்டி ஏற்படுத்தின தாக்கத்தைத்தான்..யாழிலையும் எதிர்பாக்கிறீங்க என்றீங்க..!

நல்ல முன்னேற்றங்கோ..பாசிசம் என்டது யாழில முந்தி முந்தி நீக்கப்படுற வார்த்தைகள்..இப்ப பாசிசப் புலிகள் என்டதே யாழில...உம்மாண்டிட நையாண்டியால வந்திருக்குன்னா...அது யாழின்ர சிந்தனை மாற்றம் தானேங்கோ..! ஆனா அதையே பாசிப் புலித் தலைவர் என்று தாத்தா போட்டிட்டா..அது துரோகங்கோ..! அதுக்கு வேறு யாரும் சிரிச்சிட்டா...அது.. துரோகத்திலும் துரோகங்கோ..! நீங்கள் சிந்தியிங்கோ..சரியான வழியிலதான் சிந்திக்க வழி காட்டுறியள்..விளங்குது பாருங்கோ..!

இப்படித்தான் அடிமட்டத்தில இருந்து தூண்டனுங்க..இன்னும் புளக் வழிய குப்பைகள் கிடந்தா கிள்ளி வந்து கொட்டி..அந்த துர்நாற்றத்துக்க..ஆராய்ச்சி பண்ணுங்க...அது துரோகமாவே தெரியாங்கோ...! அதுதான் சிந்தனைக் களத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுங்கோ..! :P :lol:

இங்க நாங்க உங்கட சுயசரிதை கேட்டமாங்கோ..இல்லையே..அப்புறம

  • தொடங்கியவர்

சுருக்கமாச் சொன்னாங்கோ..உங்கட சிந்தனைல..உம்மாண்டி ஏற்படுத்தின தாக்கத்தைத்தான்..யாழிலையும் எதிர்பாக்கிறீங்க என்றீங்க..!

நல்ல முன்னேற்றங்கோ..பாசிசம் என்டது யாழில முந்தி முந்தி நீக்கப்படுற வார்த்தைகள்..இப்ப பாசிசப் புலிகள் என்டதே யாழில...உம்மாண்டிட நையாண்டியால வந்திருக்குன்னா...அது யாழின்ர சிந்தனை மாற்றம் தானேங்கோ..! ஆனா அதையே பாசிப் புலித் தலைவர் என்று தாத்தா போட்டிட்டா..அது துரோகங்கோ..! அதுக்கு வேறு யாரும் சிரிச்சிட்டா...அது.. துரோகத்திலும் துரோகங்கோ..! நீங்கள் சிந்தியிங்கோ..சரியான வழியிலதான் சிந்திக்க வழி காட்டுறியள்..விளங்குது பாருங்கோ..!

இப்படித்தான் அடிமட்டத்தில இருந்து தூண்டனுங்க..இன்னும் புளக் வழிய குப்பைகள் கிடந்தா கிள்ளி வந்து கொட்டி..அந்த துர்நாற்றத்துக்க..ஆராய்ச்சி பண்ணுங்க...அது துரோகமாவே தெரியாங்கோ...! அதுதான் சிந்தனைக் களத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டுங்கோ..! :P :lol:

நீர் இப்ப என்ன சொல்லுறீர் என்று எனக்கெண்டா விளங்கேல்ல, இப்ப தாத்தாவை யாழ்க் களத்தில பாசிசப்புலிகள் என்று எழுத விட வேணும் எண்டு சொல்லுறீரா இல்லை என்னைத் தடை செய்ய வேணும் எண்டு சொல்லுறீரா?அதுக்குத் தானே ஒரு திறந்த விவாததிற்கு வாங்கோ விவாதிக்கலாம் என்று சொல்லியாச்சு.அதிலையும் விவாதிக்கலாம் புலிகள் பாஸிஸ்ட்டுக்களா இல்லை தேசிய விடுதலை வீரர்களா என்று.அதுக்குத் தானே மாட்டன் எண்டு சொல்லிப் போட்டியள்?பிறகென்ன யாழ்க் களத்தைப் பற்றிக் குற்றச் சாட்டு.அதுக்குத் தானே மோகன் தரவுகளோட பதில் சொன்னார்?

'பாஸிசஸப் புலிகள்' என்று கூறுவோரை நையாண்டி செய்வதும், புலிகள் பாசிஸ்ட்டுக்கள் என்று எழுதுவதும் எவ்வாறு ஒன்றாகும்?

குழம்பிப் போய் இருக்கிறீர், கொஞ்சம் ஆறுதலா இருந்து சிந்திக்கவும்.

:wink: :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.