Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த, கோத்தபாய, பொன்சேகா ஆகியோரே பாலச்சந்திரனின் படுகொலைக்கு முழுப்பொறுப்பு!

Featured Replies

'பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் படையினர் ஆகியோரே முழுப்பொறுப்பாகும். எனவே, பாலச்சந்திரன் உட்பட தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அரச படைகளால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உலகத் தமிழினம் எதிர்பார்த்து நிற்கின்றது.'

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் பிரிவுத் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரனின் படுகொலை குறித்த புதிய ஆதாரமாக, அவர் வன்னியில் இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டார் எனக் கூறப்படும் புதிய புகைப்படங்களும், செய்திகளும் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

பிரபாகரனின் இளையமகன் வன்னியில் இறுதி யுத்தத்தில் அகப்பட்டுப் பலியாகினர் எனவும், தமது படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி நிலப்பரப்பைக் கைப்பற்றியவேளை, முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் அவரின் உடலைக் கைப்பற்றியதாகவும் இலங்கை அரசு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்கள், இலங்கை அரச தரப்பு இதுவரை கூறிவந்ததற்கு மாறாக பாலச்சந்திரன் உயிருடன் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருப்பதையும் பின்னர் அவர் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டிருப்பதையும் தெளிவாகவே காட்டுகின்றது என சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பாலச்சந்திரன் படுகொலை தொடர்பான புகைப்படங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

 

சுமார் 65 வருட கால தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கைக்குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், குடும்பப் பெண்கள், குடும்பத் தலைவர்கள், வயோதிபர்கள் எனப்  பல்லாயிரக்கணக்கானோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  மிலேச்சத்தனமான முறையில் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.  உயிருடன் தூக்கிலிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுமோசமான பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆனால், இவ்வாறான படுகொலைகளைச் சந்தித்த ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை வேண்டும் என 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் தமிழினப் பேரவல இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்தது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட உலகத் தமிழர்களின் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், போர்க்குற்றம் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைளையும் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகள் எடுக்கவில்லை.

 

இந்நிலையில், இறுதி யுத்தத்தில் சிக்கிப் பலியானார் என இலங்கை அரசால் கூறப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வர் பாலச்சந்திரன் இராணுவக் காவலரணுக்கு அருகில் உயிருடன் இருப்பதும், அந்த அப்பாவிப் பாலகன் துப்பாக்கிச் சூட்டுக்களுடன் கீழே வீழ்ந்து சடலமாகக் கிடப்பதுமான புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

 

நெஞ்சைப் பிளக்கும் இந்தப் புதிய புகைப்படங்களைப் பார்க்கும்போது வெறி பிடித்த சிங்கள இராணுவத்தினரால் பாலச்சந்திரன் துன்பறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளான் என்பது அம்பலமாகியுள்ளது.

 

படுகொலைசெய்யப்பட்டு நிலத்தில் கிடக்கும் பாலச்சந்திரனின் உடலைப் பார்க்கும்போது 1985ஆம் ஆண்டு குமுதினிப் படுகொலையின்போது சிங்களக் கடற்படையினரால் குத்திப் படுகொலைசெய்யப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தையின் ஞாபகமும் மனதை உருக்குகின்றது. அதுமட்டுல்ல, இதைப்போல எத்தனையோ அப்பாவிச் பாலகர்கள் தமிழர் தாயகத்தில் இனவெறி, மதவெறி பிடித்த சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

எனவே, பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனின் படுகொலை தொடர்பாக தற்போது சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களைப் பார்த்தாவது உலக நாடுகள் விழிப்படையவேண்டும். சிங்கள அரசினதும் படைகளினதும் ஈவிரக்கமின்றிய காடைத்தனச் செயல்களைப் பார்க்கவேண்டும்.

 

 

பாலச்சந்திரன் படுகொலைக்கு சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் படையினர் ஆகியோரே முழுப்பொறுப்பாகும். இதனை, சர்வதேச நாடுகள் நன்றாக உணரவேண்டும்.

 

எனவே, பாலச்சந்திரன் உட்பட தமிழர் விடுதலைப் போராட்டத்தில் அரச படைகளால் படுகொலைசெய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை உலகத் தமிழனம் எதிர்பார்த்து நிற்கின்றது. இந்த எதிர்பார்ப்புக்கு அடுத்த மாதம் ஜெனிவால் நடக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் நல்லதொரு தீர்வு கிடைக்கவேண்டும்.

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் பிரிவுத் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=d885042c-f7ab-4bd9-8024-9fbef04d64e6

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த  கூட்டமைப்பு உறவுகளே.....அங்கு நின்று ..அறிக்கை விடுவதில் பலனில்லை....ஜெனிவாவிற்கு வாருங்கள்..உங்கல் பிரச்சாரங்களை முழு மூச்சில் செய்யுங்கள்.....கூட்டமைப்பு தலமை முடிவு செய்யுமென்று காத்திருபீர்கள் என்றால்...அது நடவாத காரியம்...சம்பந்தர்..ராஜபக்சவின் முடிவைத்தான் ஏற்பார்...கடந்த முறையும் அதுதான் நடந்தது....எனவே தனிப்பட்ட முறையில்  என்றாலும் வாருங்கள்....உன்களுக்கு அறிமுகமானவர்களுக்கு ...உண்மையை எடுத்து கூறுங்கள்....இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்துங்கள்..வரலற்றுத்தவறை செய்யாதீர்கள்......இதை நீங்கள் தவறவிட்டால்..அடுத்தமுறை உங்களுக்கு....அங்கத்துவமே இல்லாமல் செய்வர்கல்..அரசும் அதைஒட்டியுள்ள கூட்டங்களும்.....வெற்றுஅறிக்கை வேண்டாம்...விரைந்து செயற்படுங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.