Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வீட்டுத்திட்டம் யாருக்கு?; இந்திய உயர்ஸ்தானிகரிடம் மக்கள் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்திய வீட்டுத்திட்டம் யாருக்கு?; இந்திய உயர்ஸ்தானிகரிடம் மக்கள் கேள்வி
ஞாயிற்றுக்கிழமை, 24 பெப்ரவரி 2013 11:21    
-நவரத்தினம்
c1(704).jpg
வடக்கில் நிர்மாணிக்கப்படும் இந்திய வீட்டுத்திட்டமானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா? அல்லது வீடுகள் இன்றி இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கா? என்று போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
 
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவினால் வழங்கப்பட்டுவரும் 50,000 வீட்டத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பில்; ஆராயும் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
 
வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா இது தொடர்பில் ஆராய்ந்தார். இதன்போதே மக்கள் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினர்.
 
இந்த சந்திப்பு வவுனியா நெல்லி ஸ்டார் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை  மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 3 கட்டங்களாக நடைபெற்றன.
 
வவுனியா மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு,  வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும்; வடமாகாண சிவில் அமைப்பின் பிரதிநிதிகளுடனேயே இந்த சந்திப்புகள் நடைபெற்றன. 
 
வீட்டுத்திட்ட தெரிவில் முறைகேடுகள் இடம்பெறுவதுடன்,  தனிப்பட்ட ரீதியான அரசியல் செல்வாக்கு மேலோங்கி காணப்படுவதாகவும் இதன்போது வடமாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். 
 
மேலும் இந்த வீட்டுத்திட்டம் வீடுகள் அற்ற இலங்கையர்களுக்கா அல்லது யுத்தத்தால் வீடுகளை இழந்த இலங்கையர்களுக்கா எனவும் அவர்கள் வினவினர். வீட்டுத்திட்டத்தை பெறுவதில் அரசாங்கம் சார்பான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் மக்கள் பயந்த நிலையில் வாழ்வதாகவும் தமது ஆதங்கத்தை அவர்கள் தெரிவித்தனர்.
 
எனவே, இந்த வீட்டுத்திட்ட தெரிவில் இந்தியா பக்கச்சார்பற்ற முறையில் சுயாதீனமான குழு ஒன்றை நியமிக்க வேண்டும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகரிடம், வடமாகாணத்தைச் சேர்ந்த சிவில் அமைப்பின் பிரதிநிதிகள்  கோரிக்கை விடுத்தனர்.
 
இதற்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் குழு அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.  இந்த வீட்டுத்திட்டம் முற்றுமுழுதாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  முதற்கட்ட வீட்டுத்திட்டத்தில் 8036 வீடுகள் இதுவரையில் முழுமையடைந்துள்ளன. எஞ்சிய வீட்டுத்திட்டங்களை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும், வீட்டுத்திட்ட  தெரிவு முறையில் முறைகேடுகள் இடம்பெறுமாயின்; பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள துணை அலுவலகத்தில் முறையிட முடியும் எனக் கூறிய அவர், எதிர்காலத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் விபரம் கிராம அலுவலகர் பிரிவு, பிரதேச செயலகம் மற்றும்; பொது இடங்களில் 15 நாட்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். 
 
இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே.மகாலிங்கம் இந்திய தூதுவராலயத்தின் அலுவலகர் எஸ்.ஸ்ரீகாந், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் சி.கஜேந்திரகுமார் உட்பட அந்தக் கட்சியின் பிரமுகர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் கந்தையா சிவலிங்கம், வவுனியா நகரசபையின் உறுப்பினர் அப்துல் பாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.