Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிக்கான நெடும் பயணத்தில்... ரொறன்ரோவில் மாபெரும் கண்டனப் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Canada-thesiya-avai.150.jpg

19ம் நூற்றாண்டில் கிட்லரால் நடத்தப்பட்ட யூத மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை விஞ்சுகின்ற அளவிற்கு 21ம் நூற்றாண்டில் சிறிலங்கா அரசபயங்கரவாதம் மேற்கொண்ட இனப்படுகொலையைச் 'சனல் 4' தொலைக்காட்சி ஆதாரங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக வெளிக்கொணர்ந்து வருகின்றது. இவையெல்லாம் மானிட சமூகத்தையும் உலக நாடுகளையும் உறைய வைத்திருக்கின்றது என்பது உண்மையே!

  

அந்த வகையில் கடந்த திங்களன்று (19-02-2013) தமிழ் மக்களின் அன்புக்கும் மரியாதைக்குமுரிய தேசியத் தலைவரின் புதல்வன், பன்னிரண்டு வயதேயாகிய இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா அரசபயங்கரவாத இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும் ஏனைய போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதையும் சர்வதேசத்திற்கு ஆதாரபூர்வமாகச் சனல் 4 வெளிக்கொணர்ந்துள்ளது.

 

இக்கொடூரச் செயல்கள் மீண்டுமொருமுறை அனைத்துத் தமிழ் பேசும் மக்களை மட்டுமன்றி மானிட சமூகத்தையே ஒருகணம் உறைய வைத்துள்ளது. தமிழர் என்றோர் இனம் இவ்வுலகில் வாழ்வதற்கு நாதியில்லையா? என்கிற கேள்வியே அனைத்துத் தமிழ் மக்கள் மனங்களிலும் எழுகிறது.

 

எங்கள் இனவிடுதலைக்காகவும் எங்கள் இனத்திற்கெதிராக நடைபெறும் இன அழிப்பிற்கு எதிராகவும் ஒன்றாகி உரத்துக் குரல்கொடுக்க வேண்டிய தரணமிது. தமிழகத்தில் எங்கள் தொப்புள்கொடி உறவுகள் மாபெரும் கண்டனப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருக்கும் சமநேரத்தில் தமிழர் நாம் வாழும் அனைத்துத் தேசங்களிலும் அறப்போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு உலக நாடுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் இந்த உண்மையை ஆதாரபூர்வமாக எடுத்துச்சொல்வதன் மூலம் மனித குலத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி நீதி கேட்போம்.

 

-இனப்படுகொலை மேற்கொண்ட சிங்கள இனவெறி ராஜபக்ச அரசைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும்

 

- சிறிலங்கா அரசு மீது சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தவும்

 

- போர்க்குற்ற விசாரணை முடியும்வரை சிறிலங்காவைத் தனிமைப்படுத்தி அதன்மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

 

- தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஜ.நா தலைமையிலான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்

 

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேரணியாக ஒன்றுதிரள்வோம். கனடா வாழ் ஈழத்தமிழ் மக்களாகிய நாம் எம் தேசியக் கடமையிலிருந்து விலகாமல் காலம் எமக்களித்துள்ள அரிய வாய்ப்பை எமக்கானதாக்கிக் கொள்வோம்.

 

இப்போராட்டத்தில் சமூக, அரசியல் அமைப்புக்கள், ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், பிராந்திய ஒன்றியங்கள், பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

இடம்: சிறிலங்காத் துணைத்தூதரகம்

 

36 Eglinton Ave., West, Suit 301

Toronto, ON

M4R 1A1

 

காலம்: மார்ச் 04, 2013, திங்கட்கிழமை.

 

நேரம்: மாலை 3:00 � 7:00

 

அன்று பொங்கியெழுந்தோம் போராட இன்று புயலாய் வருவோம் நீதி கேட்க

 

கனடியத் தமிழர் தேசிய அவை

 

முகவரி: 1235 McCown Road, PO Box 4016 MCCOWN SQUARE, SCARBOROUGH, ON M1H-0A4

தொலைபேசி: 416-830-7703 | மின்னஞ்சல்: info@ncctcanada.ca |

இணையத்தளம்: www.ncctcanada.ca

 

 

நாளை என்பதினை நீக்கி திருத்தம் செய்துள்ளேன் 

http://www.seithy.com/breifNews.php?newsID=76750&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பங்குனி 4 நடப்பதை நாளை என்று போட்டிருக்கினம்?

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பிழை திருந்தம் செய்யட்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்குனி 4 நடப்பதை நாளை என்று போட்டிருக்கினம்?

 

திருத்தி உள்ளேன். 
சுட்டி காட்டியதற்கு நன்றி இசைக்கலைஞன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.