Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.ஊடக அமையம் (Jaffna press club) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gtn%20f11_CI.jpg

இலங்கை  ஊடக  வரலாற்றில் ஒரு மைல் கல்லாக யாழ்.ஊடக அமையம் (Jaffna press club)  இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையளரும் உதயன் நாளிதழின் பதில் பிரதம ஆசிரியருமான பி.எஸ்.பெருமாளால் இவ்வலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்.ஊடக அமைய (Jaffna press club)  பலகையினை குடாநாட்டின் மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேலு திறந்துவைத்தார்.

 

யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய விரிவுரையாளரும் தினக்குரல் பத்திரிகையின் துணை ஆசிரியருமான ஆ.சபேஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்குடநாட்டின் மூத்த பத்திரிகைத் துறை சார்ந்த நால்வர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

 

பி.எஸ்.பெருமாள்  முன்னாள் ஈழநாடு பிரதம ஆசிரியரும் தற்போதைய உதயன் நாளிதழின் பதில் பிரதம ஆசிரியருமாவார். இவரது 40வருடத்திற்கு மேற்பட்ட பத்திரிகை துறை பஙகளிப்பிற்காகவும்,

 

ஜயா. சச்சிதானந்தன்  36 வருடத்திற்கு மேற்பட்ட பத்திரிகை துறை பங்களிப்பும் ஈழநாடு தீக்கிரையாக்கப்பட்டபோது படுகாயமடைந்து தப்பியிருந்ததுடன் தற்போது வரை தொடர்ந்தும் பணியாற்றிவருகின்றமையை கௌரவித்தும்,

 

க.கதிர்காமத்தம்பி   40 வருடத்திற்கு மேற்பட்ட பத்திரிகை துறை பங்களிப்பு மற்றும் வட இலங்கை பத்திரிiகாயளர் சங்க தலைவராக பணியாற்றுகின்றமையை கௌரவித்தும்,

 

ச.கதிரவேலு 35 வருடத்திற்கு மேற்பட்ட அர்ப்பணிப்பு மிக்க புகைப்பட ஊடகவியலாளராக பணியாற்றுகின்றமைக்கும் இக்கௌரவங்கள் வழங்கப்பட்டன.

 

முன்னதாக ஊடகத் துறைக்காக பணியாற்றி மரணமமைந்த அனைத்து பத்திரிகையாளர்களுககும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகைச் சுடருமேற்றப்பட்டது.

 

அனைத்து தரப்புகளுக்கும் சம அந்தஸ்தினை வழங்கும் வகையிலும் அனைத்து தரப்புக்களதும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்த செல்வதையும் கருத்தாக கொண்டு இம்மையம் செயற்படுமென தெரிவிக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.