Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் சர்வதேசத்தின் கேள்விகளுக்கு மஹிந்த சமரசிங்க பதிலளிக்கவில்லை! - லக்ஷ்மன் கிரியெல்ல கருத்து!!

Featured Replies


                                             69d3c9e3-78a4-4241-a309-ca95b88a6aa41.jp
'ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை எந்தப் பயனுமற்றதாகும். சர்வதேச சமூகம் சிறிலங்கா மீது தொடுத்திருக்கும் கேள்விகளுக்கு அரசு சரியான பதிலளிக்கவில்லை என்பது அமைச்சரின் உரையினூடாகத் தெளிவாக எடுத்துக்

காட்டப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அரங்கில் சிறிலங்கா அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது' என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்

'2012ஆம் ஆண்டு  மார்ச் மாதம் இடம்பெற்ற ஜெனிவா கூட்டத் தொடரில் என்ன கூறினாரோ அதையேதான் இம்முறையும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். இதனூடாக நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளின் அமுலாக்கத்திற்கு சர்வதேசத்திடம் மீண்டும் கால அவகாசம் கோரவே அரசு திட்டமிடுகின்றது' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெறுகின்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 22வது கூட்டத் தொடரில்
சிறிலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை குறித்து கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது மற்றொரு தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படுவது தேவையற்ற ஒன்று.அத்துடன், அது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது' என்று சிறிலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தமது உரையில் தெரிவித்திருந்தார்.

மேலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் சிறிலங்கா அரசாங்கம் அதிகபட்ச
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் தெரிவித்த அமைச்சர், இலங்கையின் சமகால நிலைவரங்கள் தொடர்பிலும் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சிறிலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் மேற்படி உரை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தவை வருமாறு:

'ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்த ஜெனிவா கூட்டத் தொடரின் போது என்ன கூறினாரோ அதைத்தான் இம்முறையும்
கூறியுள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளின் அமுலாக்கம் குறித்து கடந்த கூட்டத் தொடரின் போதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், சர்வதேச சட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் மீறுகின்றமை, இலங்கையின் நீதித்துறை சுயாதீனம், 17வது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டமை, காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடல், உள்நாட்டில் இயங்கி வருகின்ற ஆயுதக்குழுக்கள் பற்றிய தகவல்கள், ஊடகத்துறை சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.


கடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கும், இலங்கையின் சமகால நிலைவரங்கள் குறித்து சர்வதேச சமூகம் நாட்டின் மீது தொடுக்கின்ற கேள்விகளுக்கும் அரசு இம்முறை சரியான பதிலளிக்கவில்லை. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரையினூடாக இது தெளிவாகத் தெரிகிறது. அவர் ஆற்றிய உரையில் எந்தப்பயனும் இல்லை.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், வடக்கில் பாதைகள் அபிவிருத்தி
செய்யப்படுகின்றன. பாலங்கள் அமைக்கப்படுகின்றன. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன என அமைச்சர் ஜெனிவாவில் கூறிக்கொண்டிருக்கின்றார்.

சர்வதேச சமூகத்தின் கேள்விகளுக்கு சிறிலங்கா அரசு வழங்கியுள்ள பதிலால் அதன் முன்னிலையில் நாடு அபகீர்த்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த சர்வதேச சமூகத்திடம்
மீண்டும் கால அவகாசம் கோரவே அரசு திட்டமிட்டுள்ளது' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=69d3c9e3-78a4-4241-a309-ca95b88a6aa4

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.