Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு, புதுடெல்லி, ஜெனிவா, வொசிங்டன் என நடக்கும் இராஜதந்திரப் போர் - " வெல்லப்படுமா தமிழருக்கான நீதி

Featured Replies

  Sri-Lankan-war-criminals.jpg

நான்கு நகரங்களுக்கு இடையில் நடக்கும் இராஜதந்திரப் போர்

  • புதுடெல்லியோ இந்த அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக எந்த இறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்கத் தீர்மானத்தை அது பெரிதாக வரவேற்கவில்லை என்பது மட்டும் உண்மை. அதாவது சர்வதேச விசாரணையைக் கோரும் எத்தகைய தீர்மானத்தையும் புதுடெல்லி விரும்பாது. இதற்கிடையே, புதுடெல்லியுடன் முன்னைய நெருக்கத்தைக் கொண்டிருக்காது போனாலும், ஜெனிவா தீர்மானத்தின் அழுத்தத்தில் இருந்து, தம்மை இந்தியா, கைவிடாமல் காப்பாற்றும் என்று இலங்கை நம்புவதாகத் தெரிகிறது. தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது போனாலும், அதன் கடுந்தன்மையைக் கடந்தமுறை போலக் குறைப்பதற்கு, இந்தியாவின் உதவியை இலங்கை நாடியதாகத் தெரிகிறது. என்கின்றார் இன்போ தமிழ் குழுமத்தின் பிராந்திய அரசியல் இரானுவ ஆய்வாளர் ஹரிகரன் அவர்கள்.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்றும், அவ்வாறு எதிர்த்தால், வாக்கெடுப்பில் படுதோல்வியை இலங்கை சந்திக்கும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு இரகசியத் தகவல் அனுப்பியதாகவும் ஒரு செய்தி உள்ளது. ஆனால், அமெரிக்கப் பிரதிநிதி எஸ்தர் பிறீமர், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்போவதாக ஜெனவாவில் அறிவித்ததும், இலங்கைப் பிரதிநதி பிரியங்கா விக்கிரமசிங்க அந்த தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் என்று பதில் அளித்தார்.   இந்தியா கொடுத்த ஆலோசனையை மீறி, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்க இலங்கை துணிந்து விட்டது.  எனக் குறிப்பிடும் அவர், 

தனது விரிவான ஆய்வில்,

  • நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையினால், கொழும்பு, புதுடெல்லி, ஜெனிவா, வொசிங்டன் - இந்த நான்கு நகரங்களுக்கும் இடையில் ஒரு வெளிப்படையான இராஜதந்திரப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பெருங்கடலின், சிறிய தீவான இலங்கைக்கு எதிராக, கடந்த ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், அந்தத் தீர்மானத்தை மதித்து நடக்க இலங்கை தவறியது, அதன் தொடர்ச்சியாக மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா தயாராகியுள்ளது - இவை தான் இப்போதைய இராஜதந்திரப் போருக்கான அடித்தளங்கள்.

    இலங்கை மீது அமெரிக்கா கொண்டுள்ள கரிசனைகளுக்கு பல காரணங்கள் உள்ளன.

    பூகோள ரீதியான நலன்களை மட்டுமன்றி, சமகால அரசியல், இராஜதந்திர நலன்களையும் முன்னிறுத்தியே இலங்கையைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

    சீனாவின் நலன்களுக்கு சார்பாக இலங்கை செயற்படுவது மட்டும், அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டுக்கு ஒரே காரணம் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், அதற்கும் அப்பால், அமெரிக்காவின் எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் வகையில் இலங்கை நடந்து கொள்ளாதது, அதன் கருத்துகளை மீறி ஆட்சியாளர்கள் நடந்து கொள்வது என்பன, அமெரிக்காவின் சினத்துக்கும், கரிசனைக்கும் முக்கிய காரணிகள் என்பதை மறுக்க முடியாது.

    விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு சங்கலித் தொடரான பல நிகழ்வுகள், முடிவுகள் எவ்வாறு காரணமாக அமைந்ததோ, அதுபோன்றே. இலங்கை மீதான அமெரிக்க அழுத்தங்களுக்கும் தொடரான பல நிகழ்வுகளும், முடிவுகளும் காரணமாகியுள்ளன.

    வெளிப்படையாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியதாக, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதாக, 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், இவையெல்லாம் தான் இலங்கை மீது கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு காரணமல்ல.

    இவற்றுக்கு அப்பால், தெரிந்தும் தெரியாமலுமான பல நிகழ்வுகள், முடிவுகளும் காரணமாக இருந்துள்ளன.

    வெளிப்படுத்த முடியாத காரணங்களை நியாயப்படுத்துவதற்கு அமெரிக்கா, போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களைக் கையில் எடுத்துள்ளது.

    13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறியதையும் இலங்கை மீதான ஒரு குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச்செயலர் றொபேட் ஓ பிளேக்.

    அதேவேளை, அரசியலமைப்பின் 18வது திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரையறையின்றி நீடித்தது, சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரங்களை முடக்கியது, பிரதம நீதியரசர் மீதான நடவடிக்கை என்பன இலங்கை அரசாங்கம் ஜனநாயகத்தைப் பின்நோக்கித் தள்ளி வருவதாக அமெரிக்கா உணர்ந்துள்ளது.

    இதை முன்னிறுத்தி ஆட்சிமாற்றம் ஒன்றை அமெரிக்கா விரும்புகிறது என்று கூடச் சொல்லலாம்.

    ஆனால் அதற்கான புறச்சூழல் இலங்கையில் இல்லாத நிலையில், அமெரிக்க தனது அழுத்தங்களை அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.

    ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானம் கடுமையானதாகவே இருக்கும் என்று கடந்தவாரம் கொழும்பு வந்த யுஎஸ்எய்ட் அதிகாரியான டெனிஸ் றோலின்ஸ் கூறியிருந்தார். கடந்தமுறையை விடவும், தீர்மானம் கடுமையை வெளிப்படுத்தும் போக்கில் இருக்க வேண்டியதே யதார்த்தம். அவ்வாறு இல்லாவிடின் தீர்மானத்தைக் கொண்டு வரவேண்டிய தேவையும் அமெரிக்காவுக்கு இருக்காது. அதைக் கொண்டு வருவதிலும் அர்த்தம் இல்லை.

    அதேவேளை,

    புதுடெல்லியோ இந்த அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக எந்த இறுதியான முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்கத் தீர்மானத்தை அது பெரிதாக வரவேற்கவில்லை என்பது மட்டும் உண்மை. அதாவது சர்வதேச விசாரணையைக் கோரும் எத்தகைய தீர்மானத்தையும் புதுடெல்லி விரும்பாது. இதற்கிடையே, புதுடெல்லியுடன் முன்னைய நெருக்கத்தைக் கொண்டிருக்காது போனாலும், ஜெனிவா தீர்மானத்தின் அழுத்தத்தில் இருந்து, தம்மை இந்தியா, கைவிடாமல் காப்பாற்றும் என்று இலங்கை நம்புவதாகத் தெரிகிறது. தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது போனாலும், அதன் கடுந்தன்மையைக் கடந்தமுறை போலக் குறைப்பதற்கு, இந்தியாவின் உதவியை இலங்கை நாடியதாகத் தெரிகிறது.

    கடந்த ஆண்டு ஜெனிவாவில் கொண்டு வர அமெரிக்கா திட்டமிட்ட தீர்மானத்தின் பல வாசகங்கள், இலங்கைக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்கும் வகையிலும், காலக்கெடு வழங்கும் வகையிலும் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்தியா தான், அதற்குள் புகுந்து, தாம் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால், கடும்போக்கை குறைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதன்படியே அமெரிக்காவும், இணங்கி மென்போக்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அப்போது இலங்கைக்கு எதிராக இந்தியா நடந்து கொண்டு விட்டதே என்று ஆதங்கப்பட்ட, இலங்கையிடம், அமெரிக்கத் தீர்மானத்தை வலுவற்றதாக்கி, அதனைச் சமநிலைப்படுத்தியது இந்தியா தான் என்று சாதனைப் பாணியில் கூறியிருந்தார் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங். இப்போது, இலங்கையை நம்பினோம், ஏமாற்றி விட்டது என்று அமெரிக்காவும் சொல்கிறது, இந்தியாவும் சொல்கிறது. இதனால், அமெரிக்கா எத்தகைய கடும்போக்கான தீர்மான வரைபை முன்வைத்தாலும், அதை எதிர்க்க முடியாத நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்றும், அவ்வாறு எதிர்த்தால், வாக்கெடுப்பில் படுதோல்வியை இலங்கை சந்திக்கும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு இரகசியத் தகவல் அனுப்பியதாகவும் ஒரு செய்தி உள்ளது. ஆனால், அமெரிக்கப் பிரதிநிதி எஸ்தர் பிறீமர், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்போவதாக ஜெனவாவில் அறிவித்ததும், இலங்கைப் பிரதிநதி பிரியங்கா விக்கிரமசிங்க அந்த தீர்மானத்தை இலங்கை எதிர்க்கும் என்று பதில் அளித்தார்.

    இந்தியா கொடுத்த ஆலோசனையை மீறி, அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்க இலங்கை துணிந்து விட்டது.

    அதேவேளை, இந்தியாவின் இன்னொரு ஆலாசனையையும் இலங்கை கரிசனைக்கு எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

    ஜெனிவாத் தீர்மான வரைபு குறித்து அமெரிக்காவுடனேயே பேசிக் கொள்ளுமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், இடையில் நாம் புகுந்து எதையும் செய்ய மாட்டோம் என்பதே.

    கிட்டத்தட்ட இலங்கையை கைவிட்டது போன்றதே இது.

    ஆனால் இந்தியாவின் பேச்சை ஏற்று அமெரிக்காவுடன் இலங்கை பேசுமா என்று தெரியவில்லை.

    எனினும், இலங்கை விவகாரத்தில் அமெரிக்க அணுகுமுறையும், இந்திய அணுகுமுறையும் வேறுபட்டவை என்பதை உணரமுடிகிறது.

    இந்திய நாடாளுமன்றத்தில், கடந்த புதன்கிழமை உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், 13வது திருத்தம், பொறுப்புக்கூறல் போன்றன குறித்து இலங்கையுடனான ஒவ்வொரு அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும் வலியுறுத்துவதாகவும், இதற்கு மேல் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் கைவிரித்திருந்தார். அதற்கு, திமுக, அதிமுக, பாஜக உறுப்பினர்கள், உள்நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்றால், போருக்கு எப்படி உதவினீர்கள்?

    படைகளை எப்படி அனுப்பினீர்கள்?

    என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தனர். ஆனால், அதையெல்லாம் சல்மான் குர்ஷித் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை.

    இலங்கை விடயத்தில் இந்தியா இன்னும் கண்டும் காணாத போக்கில் இருப்பதையே விரும்புகிறது. அதற்காகவே, அது உள்நாட்டு விவகாரம் என்ற ஆயுதத்தை பயனபடுத்திக் கொண்டு ஒதுங்கப் பார்க்கிறது. ஆனால் அமெரிக்காவோ, அடிமேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்ற பாணியில் செயற்படுகிறது. அதற்காகவே அடுத்தடுத்த தீர்மானங்களை முன்வைக்க முடிவு செய்துள்ளது.

    இலங்கை ஒன்றில் அமெரிக்காவுக்கு நல்லபிள்ளையாக நடந்து கொண்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு நல்லபிள்ளையாக இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் கைவிட்டு, சீனாவின் செல்லப்பிள்ளையானதால், ஒரு முட்டுச்சந்தியில் முடங்கிப் போயுள்ளது. இந்தநிலையில், ஜெனிவாத் தீர்மானத்தில் இருந்து இலங்கையை மீட்க யாருமே முன்வராத நிலைதான் உள்ளது.

    ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் கென்யாவும், உகண்டாவும் தான் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என்று வெளிப்படையாக கூறியுள்ளன.

    அதுவும் அதிகாரபூர்வ அறிவிப்புக் கிடையாது.

    கொழும்பு வந்த உகண்டா சுகாதார அமைச்சரும், கென்ய நாடாளுமன்ற உறுப்பினரும் கூறியவை தான்.

    ரஸ்யா அவ்வாறு கூறினாலும், அதற்கு ஜெனிவாவில் வாக்களிக்கும் உரிமையில்லை.

    கடந்த முறை, அமெரிக்கத் தீர்மானத்தை 24 நாடுகள் தான் ஆதரித்தன.

    இம்முறை அதைவிட அதிகம் நாடுகள் ஆதரவளிக்க வாய்ப்புகள் உள்ளன.

    ஐரோப்பிய ஒன்றியம் ஆதரிக்க முடிவு செய்துள்ளதால், அதிலுள்ள 11 நாடுகள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக திரும்பி விட்டன. இந்தநிலையில், ஜெனிவா களத்தை கையாளும், மையங்களாக வொசிங்டனும் புதுடெல்லியும், கொழும்பும் மாறியுள்ளன. இந்த இராஜதந்திரப் போரில், இலங்கையைக் காப்பாற்றும் வெளிப்படையான முயற்சிகளில் முக்கிய நாடுகள் எதுவும் இதுவரை இறங்கவில்லை.

    இது, உலக அரங்கில் இலங்கை நண்பர்களைத் தொலைத்து வருகிறது என்பதற்கான அடையாளம் மட்டுமன்றி, சர்வதேச அரங்கில் இலங்கை எந்தளவுக்கு தனது பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ளது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது

http://www.infotamil.ch/ta/view.php?203mOggdaccJdYY24eeEEW60022ooAcdddcAAo0320egQMYCbe444Ydd4caaYgOO32

இலங்கை, இந்தியாவைத் தனது பக்கம் சாய்க்கப் பெரும் இரகசிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தியா இலங்கையைக் கையாள்வதில் மிக அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது.

 

 

இந்தியா இலங்கை மீது கடுமையான அழுத்தங்கள் மேற்கொண்டால் இலங்கை கூடுதலாகச் சீனா பக்கம் சாய்ந்து விடக்கூடும் என்ற அச்சம் எப்போதுமே இந்தியாவுக்கு உண்டு. அதன் காரணமாக, தொடர்ந்து இந்தியா, இந்த விடயத்தில் பல விட்டுக் கொடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது.


எனினும் யதார்த்தம் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு மாறாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இலங்கை மேலும் மேலும் சீனா பக்கம் சாய்வதன் மூலம் இலங்கையில் சீனாவுக்கு ஒரு பலமான அடித்தளம் உருவாகி வருகிறது.

 

அதாவது இலங்கையுடனான இந்தியாவின் விட்டுக்கொடுப்பு அரசியல், இந்தியாவின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே மாறிவருகிறது. குறிப்பாக இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம், கொழும்பின் தாமரைக் கோபுரம் என்பன இந்தியாவின் பாதுகாப்பைப் பாதிக்கும் மையங்களாகவே நோக்கப்படுகின்றன.

 

அதாவது இலங்கையை அரவணைத்து வழிக்குக் கொண்டு வரும்  இந்தியாவின் ராஜ தந்திரம் தோல்வியடைந்து விட்டதாகவே தோன்றுகின்றது. எனவே இந்தியா மாற்று வழியில் இறங்க வேண்டிய தேவை எழுந்துவிட்டது என்பது மறுக்க முடியாத  உண்மை.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118329

  விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு சங்கலித் தொடரான பல நிகழ்வுகள், முடிவுகள் எவ்வாறு காரணமாக அமைந்ததோ, அதுபோன்றே. இலங்கை மீதான அமெரிக்க அழுத்தங்களுக்கும் தொடரான பல நிகழ்வுகளும், முடிவுகளும் காரணமாகியுள்ளன.

 

யாழில் பல கட்டுரைகளை தாங்கள் சொல்வதை புலிகள் கேட்காததால்தான் புலிகள் தோற்றார்கள் என்பது போல எழுதி தூக்குவதுண்டு. ஒரு முறையான இராணுவ ஆராச்சியில் உண்மை பல சிக்கல்கலை கொண்டிருக்கிறது என்பது புலப்படும்.

 

அது போலவே அமெரிக்கா ஏன் இலங்கை மீதான ஒரு பிரேரணையை கொண்டு வருகின்றது என்பதுக்கும் பலர் ஒற்றை காரணங்களை வைக்க முயல்கிறார்கள். அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு ஒரு விடயத்தில் இறங்கும் பொது பல காரணங்களை வைத்திருக்கும் என்பதும் உண்மை. ஆனால் ஒபாமா அரசு இலங்கையின் சர்வாதிகார நடத்தைகளை விரும்பாமல் இருக்கிறது என்பது மறுக்க முடியாதது. அதேநேரம் அது இலங்கையில் ஒரு வெறும் ஆட்சி மாற்றத்தைத்தான் கொண்டுவர முயல்கிறதென்பதும் உண்மை அல்ல.

 

வெறுமனே ஒரு ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா கொண்டுவந்தால் அது இவ்வளவு கஸ்டப்படு இன்னொரு சோல்பரி அரசியல் அமைப்பை ஏற்படுத்தியதாக மட்டும்தான் முடியும். ஆனால் தமிழரையும் சிங்களவரையும் அவர்கள் பிரச்சனைகளை தாம் தாம் கையாளத்தாக ஒரு நிலைக்கு கொண்டுவந்துவிட்டு சிங்களத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தினால், தமிழ் பிரச்சனையை வைத்து சந்தர்ப்பவாத சிங்கள தலைமைகள் திரும்ப ஒரு மன்னர் ஆட்சிக்கு போகும் நிலமை ஏற்பட சந்தர்ப்பம் இல்லை. இதை இனி அமெரிக்க அரசியல் வாதிகள் உணருவார்கள் என்பதை நாம் நம்ப முயலலாம். ஆனல் இந்தியா இதை உணரவில்லை என்பது அது இன்னமும் 13ம் திருதத்தில் மட்டும் நிற்பதினால் தெளிவாக காட்டப்படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.