Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன: சுமந்திரன் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 
வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன: சுமந்திரன் எம்.பி. வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பெண்களை இராணுவம் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியமையினாலேயா தென்னிலங்கையின் பெண்கள் அமைப்புகள் அவற்றுக்கு எதிராக குரல்கொடுப்பதில்லை என கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சித் தலைவரின் இவ் விசேட ஆணைக்குழுவேனும் வன்னிப்பெண்களின் அவலங்களை கண்டறிய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எதிர்க் கட்சித் தலைவரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும் ஆணைக்குழு"வின் நிகழ்வில் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி கருத்துத் தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் மற்றும் வன்கொடுமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென எதிர்க் கட்சித் தலைவரினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு எனது ஆதரவினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வடக்கு - கிழக்கில் எத்தனை பெண்கள் இராணுவத்தால் வன்கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலை தற்போதும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடபகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு வடக்கில் இராணுவத்தினரால் பெண்கள் தமது சுகத்திற்காக வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தேன். ஆனால் அந்த அறிக்கை தற்போது தூசு படிந்த நிலையில் பாராளுமன்ற வாசிகசாலையின் மூலையில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் பல மூடி மறைக்கப்பட்டுள்ளன. இந்த மூடிமறைக்கப்பட்ட வட பகுதி பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் வெளிக்கொணரப்படுமா? அல்லது குற்றமிழைத்தவர்கள் இராணுவ வீரர்கள் என்பதால் அதனை இந்த ஆணைக்குழு தட்டிக்கழித்து விடுமா? என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3366

 

இசைப்பிரியாவை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றம்:  ரணில்

isai-priya-450x250.jpg

 

 

 

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர் என்றாலும் இசைப்பிரியா என்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை மன்னிக்க முடியாத குற்றமாகும். யுத்த காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக மிக மோசமான வன்கொடுமைகள் இடம்பெற்றுள்ளன என்று எதிர் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கடந்த யுத்தக் காலப்பகுதியில் வடக்கில் பெண்களுக்கு எதிராக கடும் மோசமான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகத்திற்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் போது மனித உரிமைகள் தொடர்பிலான ஐ.நா. சாசனங்கள் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக எவ்வாறு கருதமுடியும் என்றார்

 

http://asrilanka.com/2013/03/08/15545

Kankal keddapin sooriyanaskaram ethatku. All the distasteful events happenening in SriLanka is due to the weak opposition parties. Ranil's dream of becomming a President will never happen as long as he adopts cunning diplomacy in politics.It is better to realise now than late.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.